Cinema News Stories

The Real Chiyaan

வாழ்க்கைல ஜெய்க்கணும்னு, போராடுற பல பேருக்கு மத்தியில வாழ்கையவே ஜெய்க்கனும்னு போராடின ஒருத்தர் பத்தி தான் சொல்லப்போறேன். கமல், விஜய், சிம்பு- னு பல பேர் அவங்களோட சிறு வயசுலயே சினிமால வந்தாலும் இவரோட Entry மட்டும் 24 வயசுல தான் இருந்துச்சு, இருந்தாலும் அவங்கள போலவே இவர மக்கள் கொண்டாட மறந்ததில்ல.

தன்னோட சினிமா பயணத்த என் காதல் கண்மணி-ல தொடங்கின இவரு ஆரம்ப கட்டத்துல ரொம்பவே கஷ்டப்பட்டாரு, கதாநாயகன் ஆகனும் அப்டின்ற தன் அப்பாவோட கனவ நனவாக்குற விதமா சினிமா பாதைல கால்தடம் பதிக்க நினைச்ச இவருக்கு முதல் தடையா அவரோட அப்பவே நின்னாரு. “மொதல்ல நல்லா படி அப்புறம் சினிமா பத்தி யோசிக்கலாம்”-ன்னு சொன்னதால வேண்ட வெறுப்பா லோயலோ கல்லூரில சேர்ந்து படிச்சும் முடிச்சாரு.

காசு இருந்தா இந்த உலகம் போற்றும், திறமை இருந்தா மட்டுமே நம்மள தேடும்-ங்கிற மாதிரி இவரையும் தேடுச்சு. சினிமா முதல்ல சோதிக்கும் பின் அதுவே சாதிக்க ஒரு வழியை ஏற்படுத்தி கொடுக்கும் இப்படி மொதல்ல ஆரம்பிச்ச பல படங்கள்ல பல சோதனையை எதிர் கொண்டாலும் பாலாவோட இயக்கத்துல ஒரு பெரிய உழைப்ப சேர்த்து 34 வயசுல தன்னோட முதல் வெற்றிய ருசிச்சாரு. சாதுவா இருந்து சேது -ங்குற Masterpiece-அ கொடுத்தாரு.

இன்று விக்ரம் ஒரு நல்ல நடிகராக பலருக்கு தெரிந்தாலும் அவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! திரைப்படங்கள் கை கொடுக்காத காலங்களில் தனக்கு பின் வந்த பிரபு தேவா , அஜித், வினித்-னு பல கதாநாயகர்களுக்கு டப்பிங் செஞ்சிருக்காரு. இன்றும் ‘அமராவதி’, ‘பாசமலர்கள்’, ‘புதிய முகம்’, ‘காதலன்’, ராசய்யா’, ‘மின்சாரக் கனவு’, ‘காதல் தேசம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ இந்த திரைப்படங்கள்-ல விக்ரம் குரல கேக்கலாம்.

தில், ஜெமினி, தூள், சாமி போன்ற திரைப்படங்கள் இன்னைக்கு பார்த்தாலும் குட் என்டர்டெய்னிங்-ஆ தான் இருக்கும். பிதாமகன் , ராவணன் போன்ற திரைப்படங்களில் அரக்கன் போல நடித்திருந்தாலும் அந்நியன் என்ற ஒற்றை படம் போதும் இவரை நடிப்பு அரக்கன் என்று சொல்ல. ஒரு பக்கம் அப்பாவி அம்பி இன்னொரு பக்கம் Love Boy ரெமோ இது ரெண்டுக்கும் இடையே அந்நியன். ஒரு Role ஒழுங்கா பண்ணா போதும்னு யோசிச்சு விலகி ஓடும் பல பேர்க்கு மத்தில ஒரே ஆளா மூணு Role செஞ்சு அசத்துனாரு.

ஷங்கர் படம்னாலே எப்படி பிரமாண்டமோ அதே போல விக்ரம்-னாலே கடின உழைப்பு-னு ஐ படத்துல நிரூபிச்சிருப்பாரு, சீன்க்கு ஏத்த மாதிரி அவரோட ஒடம்ப ஏத்தி இறக்கி இருப்பாரு, பெரிய பெரிய ஹீரோஸ் மத்தில தனக்கு புடிச்சத பண்ணிட்டு இன்னைக்கு வரைக்கும் Favourite ஹீரோவா பல பேர் நெஞ்சுல வாடகை இல்லாமலே வாழ்ந்துட்டு இருக்காரு.

பொன்னியின் செல்வன் படத்துல நடிக்க சொன்ன உண்மையா ஆதித்த கரிகாலனவே வாழ்ந்திருப்பாரு , பொதுவாவே மேஜிக் பண்றவங்க பயன்படுத்துற வார்த்தை “ஆப்ராகாடப்ரா” ஆனா இவரோட மேஜிக் வார்த்தை கடின உழைப்பு , இன்றும் சினி உலகில் வெற்றி நாயகனா வலம் வரும் மக்களின் அன்பு நாயகன் விக்ரம் இன்னும் பல படங்களில் நடித்து வெற்றி வாகை சூடனும்னு இன்று பிறந்த நாள் காணும், விக்ரம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது சூரியன் FM.

Article By ஹென்ரி ஏனோக்