Cinema News Stories

“சித்தா சித்தார்த்”

Siddharth
Siddharth

தமிழ் சினிமால ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கு ! ஆனா அந்த ரசிகர்கள்ல சிலர் தனக்கு பிடிச்ச நடிகர்களை கொண்டாடுவாங்க. மத்த நடிகர்களை மீம்ஸ் போட்டு பந்தாடுவாங்க. சில நடிகர்களை மட்டும் தான் எல்லா விதமான ரசிகர்களும் கொண்டாடுவாங்க, அப்படி பல வருஷங்களா தென்னிந்திய சினிமா ரசிகர்கள் ஒரு நடிகனை ரசிக்குராங்கனா அது தான் சித்தார்த்.

பாய்ஸ் படம் மூலமா தமிழ் சினிமால அறிமுகமான சித்தார்த் இப்ப வரை அதே இளமையோட பாய்ஸ் பார்ட் 2 எடுத்தா கூட அதுல வர மாதிரியே தான் இருப்பாரு. ஆரம்பகாலத்துல சித்தார்த் டைரக்டர் மணிரத்னம் கிட்ட உதவி இயக்குனரா இருந்தாரு. கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல சித்தார்த் உதவி இயக்குனரா இருந்த நேரத்துல தான் பாய்ஸ் பட ஆடிஷன்ல கலந்துகிட்டு கதாநாயகனாக அறிமுகம் ஆனாரு.

நாலு நடிகர்கள்ல ஒருத்தரா வந்தாலும் “முன்னா”வ யாரலயும் மறக்க முடியாது. இன்னைக்கு வர கிளாஸ்ரூம்ல மாரியம்மா மாரியம்மானு சித்தார்த் பாடின டெம்ப்ளேட் மீம்ஸ்ல டிரெண்ட் ஆகிட்டு தான் இருக்கு. பாய்ஸ்ல கிடைச்ச வரவேற்பு சித்தார்த்க்கு தன்னோட குருவான மணிரத்னம் படத்துலயே நடிக்க வாய்ப்பு தந்துச்சு. “ஆய்த எழுத்து “சித்தார்த்துக்கு இன்னும் ஒரு நல்ல பெயர தமிழ் சினிமால வாங்கி தந்துச்சு.

சித்தார்த் திரிஷா இந்த ஜோடிக்குள்ள இருந்த கெமிஸ்டிரி , டான்ஸ் எல்லாம் ரசிகர்களுக்கு செம்ம டிரீட் . அடுத்து தமிழ் சினிமால சித்தார்த் என்ன படம் நடிக்க போறாருனு ரசிகர்கள் எதிர்பார்த்தப்போ நம்ம நடிகர் பிரபுதேவா இயக்கத்துல தெலுங்கு சினிமால தன்னோட தடத்த பதிச்சாரு சித்தார்த்! முதல் படமே பிளாக் பஸ்டர். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கினாரு.

(Nuvvostanante Nenoddantana) இந்த படம் தான் தமிழ்ல ஜெயம் ரவி நடிப்புல உனக்கும் எனக்கும் அப்டினு ரிலீஸ் ஆச்சு. சித்தார்த் தெலுங்கு சினிமால தொட்டதெல்லாம் ஹிட்டுனு அங்க முன்னணி கதாநாயகனா மாறிட்டாரு. தமிழ் ரசிகர்கள் எங்கடா சித்தார்த் படங்கள காணோம்னு தேடினப்ப மறுபடியும் 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, தீயா வேலை செய்யனும் குமாருனு காமெடி, ஆக்க்ஷன், காலேஜ், லவ் ஸ்டோரினு தொடர்ந்து படங்கள் நடிச்சாரு.

2014 சித்தார்த்துக்கு ஒரு சிறப்பான வருஷமா அமைஞ்சுது. ஒரு பக்கம் “ஜிகர்தண்டா” கமெர்ஷியலா செம்ம ஹிட்டு, இன்னொரு பக்கம் “காவியத்தலைவன்” விமர்சனங்கள் ரீதியா நல்ல வரவேற்பு. இந்த படங்களுக்கு அப்பறம் தமிழ் சினிமா மேல சித்தார்த் அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சாரு.

எனக்குள் ஒருவன், அரண்மனை 2 மாதிரி வெவ்வேறு கதைக்களத்துல வருஷம் ஒரு படம் ரிலீஸ் ஆச்சு. தமிழ் சினாமல இப்போ ரெண்டு மூணு வருஷங்களா டார்க் காமெடி பத்தி பேசுறாங்க. அதெல்லாம் 2016-ல “ஜில் ஜங் ஜக்” படத்துலயே சித்தார்த் பண்ணிட்டாரு. இந்த படத்துக்கு சித்தார்த் தான் தயாரிப்பாளர்.

ஜில் ஜங் ஜக் படத்துல வர ஷீட் த குருவி செம்ம ஹிட்டு, இன்னும் இந்த படம் பாக்காதவங்க இப்பவே பார்த்திடுங்க. நடிகர் சித்தார்த் கமல்ஹாசன் ரசிகர் அப்டிங்குறனால தமிழ் சினிமால உலக நாயகன் போல இவரும் பல புதுமைகள் படைச்சிருக்காரு. அதுக்கு எடுத்துகாட்டு தான் 2017-ல வந்த “அவள்” படம். சும்மா ஒரு வீடு அதுல பேய், அதுக்கு ஒரு பின்னணி கதைனு இருந்த தமிழ் சினிமாக்கு ஹாலிவுட் தரத்துல ஒரு பேய் படம் தந்தாரு.

2019-ல “சிவப்பு மஞ்சள் பச்சை” உண்மையா தமிழ் சினிமால குடும்பங்கள் கொண்டாடும் வெற்றினு சொல்ற அளவு சிறந்த படம் , சித்தார்த்த பாக்கும் போது எனக்கு இப்டி மாமா வேணும்னு ஒவ்வொரு பசங்களும், பொண்ணுங்களும் நினைச்சிருப்பாங்க. சிவப்பு மஞ்சள் பச்சைக்கு அப்பறம் பெரிய இடைவெளி தாண்டி 2023-ல “டக்கர்” படம் வெளியாச்சு , இந்த படத்துல வர “நிரா நிரா” பாட்டு ரசிகர்கள்கிட்ட ரீச் ஆன அளவு படம் வரவேற்ப பெறல.

ஆனா அதே வருஷம் வந்த “சித்தா” சித்தார்த்க்கு ஒரு அடைமொழியா மாறிடுச்சு. சித்தார்த் தயாரிப்புனா தரமான படமா தான் இருக்கும்னு சொல்ற மாதிரி அழுத்தமான கதையோட அந்த வருஷம் மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கொண்டு வந்தாரு சித்தார்த். அமுத கடல் உனக்கு தான் பாட்டு, சித்தப்பாக்கள் பாடுற தாலாட்டா மாறிடுச்சு.

அடுத்து தன்னோட சினிமா குரு கமல்ஹாசன் கூட தன்ன தமிழ் சினிமால அறிமுகப்படுத்தின இயக்குனர் ஷங்கரோட “இந்தியன் 2” படத்துல முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு, ரிலீஸ்காக வெயிட்டிங். சித்தார்த் நடிகரா, தயாரிப்பாளரா மட்டுமில்ல டப்பிங் ஆர்டிஸ்ட்டா The Lion King படத்துல சிம்பாக்கு குரல், அயலான் படத்துல ஏலியன் டாட்டூக்கு குரல் கொடுத்திருக்காரு.

நடிகர் சித்தார்த் பாடகரா

1) அடடா அடடா பாட்டு

2) பார்வதி பார்வதி

3) பிரபலமாகவே பிறந்த ஆளடா

4) மானே மானே உறவென நினைச்சேனே (Unplugged)

5) Strawberry

இப்படி இன்னும் நிறைய பாடல்கள் பாடியிருக்காரு. நடிகர், தயாரிப்பாளர், பாடகர்னு பன்முக திறமை கொண்ட சித்தார்த் இன்னும் பல நல்ல படங்கள் தந்து தென்னிந்திய சினிமாவ அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ SRINI