Cinema News Stories

வரலாறு படைத்த “வலிமை” Motion Poster !!!

இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வலிமை திரைப்படத்தின் First Look மற்றும் Motion Poster Update-கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வருடக் கணக்கில் Update-க்காக காத்திருந்த தல அஜித் ரசிகர்களுக்கு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ள Update புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது என்றே கூறலாம். வெளியான Motion Poster-ல் தல அஜித் வழக்கம் போல Style ஆகவும் Mass ஆகவும் காணப்படுகிறார்.

Image

அதுமட்டுமின்றி யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை Motion Poster-க்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. வலிமை திரைப்படம் 2021 ஆம் ஆண்டிலேயே வெளியாகும் என்பதை இந்த Motion Poster மூலம் படக்குழுவினர் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இன்ப அதிர்ச்சிக்கு மேல் மற்றொரு இன்ப அதிர்ச்சியாய் வலிமை திரைப்படத்தின் Motion Poster  இந்தியாவிலேயே அதிக Like-களை பெற்ற மோஷன் போஸ்டர் எனும் சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன் தல அஜித் நடித்து வெளிவந்த “விஸ்வாசம்”  திரைப்படத்தின் Motion Poster அதிக Like-கள் பெற்ற Motion Poster-ஆக இருந்து வந்தது. வலிமையின் Motion Poster 6 லட்சம் Like-களுக்கு மேல் பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.

வெளியாகி ஒரு நாள் கூட ஆகாத நிலையில் வலிமை திரைப்படத்தின் Motion Poster இந்த சாதனையை புரிந்துள்ளது தல ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சத்தில் அமர வைத்துள்ளது. Motion Poster மட்டுமின்றி வெளியிடப்பட்ட First Look போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து Trending-ல் இருந்து வருகிறது.

வலிமை திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வலிமையின் Motion Poster-ஐ கீழே காணுங்கள்.