தல அஜித்தும் Bike Stunt-ம் பிரிக்க முடியாத மாஸ் Combo-வாக அவரது படங்களில் இருப்பது வழக்கமே. இந்நிலையில் அவர் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் Shooting Spot Still ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வலிமை திரைப்படத்தின் Update-க்கு ஏங்கி தல ரசிகர்கள் நீண்ட நாட்கள் தவமாய் தவமிருந்து வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் தல ரசிகர்களுக்கு வலிமை-யான விருந்தாய் அமைந்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் தல அஜித் Bike Stunt செய்கிறார் என்ற செய்தி அரசல் பரசலாய் பேசப்பட்டு வந்த நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் Bike Stunt செய்வது போன்ற Photo இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் மங்காத்தா, விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை போன்ற பல படங்களில் அஜித் Bike ஓட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிகள் திரையில் வரும் போதெல்லாம் தியேட்டர்களில் திருவிழா Mode On ஆகி விடும். வலிமை படம் திரைக்கு வரும்போதும் இச்சம்பவம் அரங்கேறும் என தெரிகிறது.

இந்த Photo வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தல ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். தற்போது ட்விட்டரில் #ValimaiMoviePics என்ற Tag-ஐ ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அடுத்த Update-க்காக தல ரசிகர்கள் தங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய H.வினோத் தான், இந்த திரைப்படத்தையும் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது இப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. “Waiting-லயே வெறி ஆகுதே” என்று சொல்லும் வகையில் வலிமை திரைப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.