2019 ம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வெற்றியடைந்த திரைப்படம் அசுரன். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “அசுரன்”.

பூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது இத்திரைப்படம்.

தனுஷின் எதார்த்த நடிப்பும், வெற்றிமாறனின் கதைக்களமும் g.v பிரகாஷின் இசையும் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தன.

இத்திரைப்படத்தின் மறுஆக்க உரிமைகள் பல்வேறு மொழிகளில் வாங்கப்பட்டு அந்தந்த மொழிகளில் திரைப்படமாக்க முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாகுபலி புகழ் ராணா டகுபாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கு மொழியில் உருவாகும் அசுரன் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.

தெலுங்கு திரை உலகின் டாப் ஸ்டாரான விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் அசுரன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கியது. வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கு அசுரனை காண அணைத்து ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்
