Cinema News Stories

Birthday treat வேற லெவல் சகோ !!

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் Special ஆக ‘அயலான்’ படக்குழுவினர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அப்படத்தின் ‘வேற லெவல் சகோ’ single பாடலை வெளியிட்டுள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள இப்பாடல் சினிமா ரசிகர்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் Sci-Fi படமான அயலான் படத்தின் First look வந்த பொழுதே, இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கிவிட்டது. அதுமட்டுமின்றி இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முதல் முறையாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதால் பாடல்களுக்கும் படத்திற்கு இணையான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் ‘வேற லெவல் சகோ’ பாடல் வெளியிடப்படவுள்ளது என்ற Update சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாய் அமைந்தது. இப்பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியுள்ளார். “உன்ன பத்து பத்து பேராச்சும் வெற்றியடைய நினைச்சாலே வேற லெவல் சகோ” போன்ற புத்துணர்ச்சியூட்டும் ஊக்கமான வரிகளை விவேக் எழுதியுள்ளார். இப்பாடல் வெளியாவதற்கு முன்னரே #VeraLevelSago என்ற tag-ஐ ட்விட்டரில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தனர்.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் அவரது ரசிகர்களுக்கு Birthday Treat ஆக இப்பாடல் அமைந்துள்ளது என்றே கூறலாம். பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் High Pitch-ல் பாடும் பாடல்கள் அனைத்தும் நம்மை repeat mode-ல் கேட்க வைக்கும் பாடல்களாகவே அமைந்ததுள்ளது. அந்த வகையில் ‘வேற லெவல் சகோ’ பாடலும் இசைப்புயலின் High Pitch number-களில் ஒன்றாக அமைந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About the author

alex lew