Specials Stories

நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் !!!

சினிமாவில்  சாதிக்கத் துடிக்கும் பல இளைஞர்களின் கனவு நாயகன்,Inspiration என்றெல்லாம் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களை சொல்லலாம்.

“KEEP UR PARENTS HAPPY ,LIFE WILL BE THE HAPPIEST”. இது தான் பல வருடங்களாக  சிவகார்த்திகேயனின் Whatsapp Status. தன்னுடைய பெற்றோர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கும் பல பெற்றோர்கள், குட்டீஸ், இளைஞர்கள் என எல்லோரையும் தன்னுடைய படங்கள் மூலம் சந்தோஷமாக வைத்துக் கொண்டு இருக்கும் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனை பற்றி தெரிந்து கொள்வோம்.

சிவங்கங்கையில் ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து இன்று தமிழ் சினிமாவின் Box office king-ஆக இருக்கும்   சிவகார்த்திகேயன் தன் ஆரம்ப காலத்தில், தான் ஒரு IPS அதிகாரியாக ஆக வேண்டும்  என்றே நினைத்தார். ஏனெனில் சிவகார்த்திகேயனின் தந்தை திருச்சி மத்திய சிறையில் Inspector ஆக பணிபுரிந்தவர். தந்தை  inspector என்பதால்  சிவகார்த்திகேயனுக்கு அவர் மீது எப்போதுமே ஒருவித மரியாதை கலந்த பயம் இருந்தது.

தன் அப்பாவை பார்த்தாலே “Building Strong-u  Basement weak-u” என்று கூறுவது போல பயந்திருப்பாராம் சிவா. அதனாலேயே அவருக்கு இருக்கும் சின்ன சின்ன ஆசைகளை கூட தன் அம்மாவிடம் தான் பகிர்ந்துகொள்வாராம். அப்பாவின்  கண்டிப்பு ,அம்மாவின் பாசம், அக்காவின் அரவணைப்பு என தன்னை சுற்றி மிகவும் சிறிய வட்டத்திற்குள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த சிவகார்த்திகேயனின் வாழ்க்கையை  புரட்டிப் போட்டது தந்தையின் மரணம். அந்த இழப்பிற்குப் பின் சிவாவின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தது அவரது தாய் மாமா தான்.

தனது அம்மா மற்றும் அக்காவின் ஆசைப்படியே சிவா ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை தொடங்கினார். அங்கு அவருக்கு அருண்ராஜா காமராஜ் ,இசையமைப்பாளர் திபு, நின்னன் தாமஸ் போன்ற நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். கல்லூரி நாட்களில் தான் சிவாவிற்கு Media மீதான ஆர்வம் ஏற்பட்டது. சிவகார்த்திகேயனின் Media வாழ்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரினா’ திரைப்படம் அமைந்தது.

நடிகர் தனுஷுடன் சிவா கொண்டிருந்த நட்பு ‘எதிர்நீச்சல்’-ஆக உருவெடுத்து ஒரு முக்கிய வெற்றிப்படமாக சிவாவிற்கு அமைந்தது. அதன் பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ என பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை சிவா பிடித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன்,அவரது  ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் திருச்சியில் உள்ள திரையரங்குகளில் “காஜாமலை சிவகார்த்திகேயன்” என Cut Out வைப்பாராம். ரஜினியின் ரசிகனாக இருந்து சினிமாவில் தன் கால் தடத்தை பதித்த சிவகார்த்திகேயன் இன்று அவரைப் போலவே மக்கள் கொண்டாடும் நட்சத்திரமாக வளர்த்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்துள்ள சிவகார்த்திகேயன் மெம்மேலும் வளர வேண்டும் என வேண்டி சூரியன் FM சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About the author

shafin

உங்களில் ஒருவன்