Cinema News Stories

மனதை வருடும் யாழா யாழா !!

S.P. ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படத்தின் ‘யாழா யாழா’ single track இணையத்தில் வெளியாகியுள்ளது. மனதை வருடும் Melody பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

லாபம் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இமானின் இசையில் வந்த பல பாடல்கள் சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்தது. அந்த வகையில் ‘யாழா யாழா’ பாடலும் வெளியான சில மணி நேரங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற தொடங்கியது. இப்பாடலை லாபம் படத்தின் கதாநாயகியான ஷ்ருதி ஹாசன் தன் மென்மையான குரலில் பாடியுள்ளார்.

இப்பாடலின் Vibe-ஐ வைத்து பார்க்கும் போது, கதாநாயகன் மேல் கதாநாயகி கொண்டுள்ள காதலை கவிதை மழையாய் பொழியும் பாடலே ‘யாழா யாழா’ என்பதை நாம் அறிய முடிகிறது. பாடலாசிரியர் யுகபாரதியின் ரசிக்க வைக்கும் ரசனை மிக்க வரிகள் காதலின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறது.

பொதுவாக ஷ்ருதி ஹாசன் பாடும் பாடல்கள் அனைத்தும் நம்மை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் இனிமையான பாடல்களாவே அமைந்துள்ளது. அந்த வகையில் ‘யாழா யாழா’-வும் நம்மை திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாடலாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம்.

ஏற்கனவே லாபம் படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை இப்பாடல் மேலும் ஒரு படி அதிகப்படுத்தியுள்ளது. இப்படத்தை விரைவில் திரையில் காண மக்கள் செல்வனின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ‘யாழா யாழா’ பாடலின் lyric வீடியோவை கீழே காணுங்கள்.

About the author

shafin

உங்களில் ஒருவன்