காதல்… இந்த உலகத்துல காதல் அப்படிங்கிற விடயத்தை கடந்து வராதவர்கள் யாருமே இல்ல.
காதல் ஒரு அழகான கனவு. சில பேருக்கு அந்த கனவு பலித்திருக்கும்; சில பேருக்கு அந்த கனவு கானல் நீர் போல காணாமல் போயிருக்கும். எது எப்படியோ காதல் என்பது மிக மிக அழகானது, GVM படம் போல.
முன்னாடிலாம் காதலி கிட்ட விருப்பத்த தெரிவிக்கும் போது கையில ரோஸ் எடுத்துட்டு போன பசங்க இப்போ கையில கிட்டார் எடுத்துட்டுப் போறாங்க. அதுக்கு ஒரே காரணம் கௌதம் வாசுதேவ் மேனன்.
காதலே வேணான்னு சொல்றவங்க, அவசரப்பட்டு இந்த வார்த்தையை சொல்லிட்டோமோ அப்படினு யோசிக்க வைக்கிறவர் கௌதம் வாசுதேவ் மேனன். ஏற்கனவே காதலிச்சுட்டு இருக்கவங்களுக்கு காதலோட இன்னொரு பரிணாமத்த புரிய வைப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன்.
காதல் அப்படிங்குறது வெறும் ரொமான்டிக்கான விஷயம் அப்படிங்கறத தாண்டி அதுல இருக்க கோபம், அன்பு, பாசம், வலி, அந்தக் காதல் விட்டு போனதுக்கப்புறம் வழி தடுமாறிப் போன வாழ்க்கைனு நிஜத்துல பலபேர் அனுபவிச்சுட்டு இருக்க விடயங்களை சினிமாவில் காட்டுவதில் தனித்துவமானவர் கௌதம் வாசுதேவ் மேனன்.
ஒரு ஆண் எந்த அளவுக்கு தன்னோட காதல நேசிக்கணும், அப்படிங்கறத தெரிஞ்சுக்கிறதுக்கு இவருடைய படங்களை பார்த்தாலே போதும். ஏன்னா காதல்ல பி ஹெச் டி பண்ண மாதிரி காதலுக்கு தேவையான எல்லா விஷயத்தையும் படமா எடுத்துருக்காரு.
வருஷா வருஷம் காதலர் தினம் வரும்போது மட்டும் காதலை கொண்டாடுபவர்களுக்கு மத்தியில், காதலர் தினத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர் கௌதம் வாசுதேவ் மேனன். ஏனென்றால் அவரைப் பொருத்தவரை வாழ்வில் ஒவ்வொரு நாளும் காதலுக்கு ஏற்ற நாளே.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் இவருடைய படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் காதலை இவர் காட்டும் விதம். காதல் எந்த அளவு மென்மையானது என்பதை இவருடைய அனைத்து படங்களிலும் ஒவ்வொரு பிரேமிலும் நாம் பார்த்திருப்போம்.
இனி எத்தனை காதல் படங்கள் வந்தாலும் அது கௌதம் வாசுதேவ் மேனன் படம் மாதிரி இருக்கணும் அப்படிங்கிற எதிர்பார்ப்பிலேயே பல பேர் தியேட்டருக்கு போவாங்க அப்படிங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை.
காதலின் மற்றொரு பரிணாமம் கௌதம் மேனனுக்கு சூரியன் FM சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.