Specials Stories

Global Road Safety Day

Global road safety day அப்படின்னா முதல்ல நம்ம என்னன்னு தெரிஞ்சுக்கணும்… ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை உலகளாவிய சாலை பாதுகாப்பு பிரச்சாரம் தான் இந்த Global road safety day. வருஷத்துக்கு 1.3 மில்லியன் மக்கள் சாலை விபத்தில் இறக்குறாங்க, 50 மில்லியன் மக்கள் காயமடைகிறார்கள்.

இதெல்லாத்தையும் தடுக்கறதுக்காகவும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காகவும் கொண்டுவரப்பட்டது தான் இந்த Global road safety day. உலக அளவில் சாலை விபத்துல இறக்குற நாலுல ஒருத்தர் பாதசாரியாகவோ இல்ல சைக்கிள் ஓட்டுபவராகவோ தான் இருக்காங்க. அதனால வளர்ந்த நாடுகள காட்டிலும் வளருகின்ற நாடுகளில் இந்த சாலை விபத்துடைய எண்ணிக்கை கொஞ்சம் கூடுதலா இருக்கு.

அதை குறைக்கிற விதமா பத்து வருடங்களா 50% சாலைப்போக்குவரத்துனால இறப்புகள் ஏற்படுவதையும் காயங்கள் ஏற்படுறதையும் குறைக்கிறதுக்கு முயற்சி பண்றாங்க. இது பேராசையா இருந்தாலும் அதை சாத்தியப்படுத்தறதுக்கான ஒரு முயற்சியா தான் இந்த Global road safety day கொண்டுவரப்பட்டது.

அது என்ன வளர்கின்ற நாடுகளில் மட்டும் இந்த பிரச்சனை அப்படின்ற ஒரு கேள்வி எழுப்ப, வளர்ந்த நாடுகளில் சட்டதிட்டங்கள கடைபிடிக்கிறவங்களுடைய எண்ணிக்கை அதிகம். அதனால விபத்துக்கள் குறைவு, வளர்கின்ற நாட்டுக்குள்ள என்னதான் சட்ட திட்டங்கள் இருந்தாலும் அதை கடைபிடிப்பவர்களோட எண்ணிக்கை குறைவு. அதனால சாலை விபத்துக்கான எண்ணிக்கையும் அதிகரிக்குது.

இதை குறைக்க நம்ம ஒவ்வொருத்தரும் சாலை விதிமுறைகளை கரெக்டா பின்பற்றனும் அப்படி பின்பற்றினால் ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துனால இறக்கக்கூடியவர்களோட எண்ணிக்கை அதிகரிக்காம அடுத்தடுத்த வருடங்களில் குறையத் தொடங்கும். அப்படி குறையத் தொடங்கினா அடுத்த பத்து ஆண்டுகளில் 50 சதவீத சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளும், காயங்களும் குறையும்.

அப்படி குறைந்தால் நம்மளுடைய பேராசை இந்த இடத்துல ஜெயிக்கும். அதுக்கு சாலை விதிகளை நம்ம ஒழுங்கா கடைபிடிக்கணும். ஒவ்வொரு Global road safety day அப்பவும் மக்களுக்கு இதை பத்தின விழிப்புணர்வ ஏற்படுத்தணும், அதுதான் நம்ம செய்யக்கூடிய முதல் விஷயம். அதுதான் சாலை விபத்துகளை குறைப்பதற்கு நம்ம போடக்கூடிய முதல் பிள்ளையார் சுழி.

Article By RJ Joe