Cinema News Stories

கனவுகள் நினைவாகும் இடம்-சினிமா!

உண்மையாவே கனவுகள் நினைவாகும் இடம்-சினிமா தான். இத ரெண்டு விதமா பாக்கலாம், பல பேரோட கனவுகள் நினைவாகுறதும் , வெறும் கனவுகளா இருக்கற நினைவுகள பாடமாக்குறதும் சினிமால மட்டும்தா சாத்தியம்.

அப்படிப்பட்ட ஒரு கனவையும், கதையையும் நம்ம கண்ணுக்கு காமிச்சருக்காரு இயக்குனர் விக்ரம் குமார் . நான் சின்ன வயசுல இருந்தே ரொம்ப விரும்பி பாக்கிற படங்கள் Science fiction and Fantasy தான், எப்போவுமே தமிழ் சினிமா மேல ஒரு கோவம் இருக்கும். தமிழ்ல ஏன் “Back to the future, Eternal sunshine of the spotless mind மாதிரியான படங்கள் வரமாட்டேங்குது ,நம்ம அதுக்கு தகுதி இல்லையானு ஒரு கோவம்.

அந்த கோவத்த போக்குற மாதிரி “இன்று நேற்று நாளை “, “மாயவன் ” மாதிரியான படங்கள் வந்துச்சு. ஆனா எனக்கு ரொம்ப புடிச்சது “24” தான். சூர்யா ஓட நடிப்பா இல்ல ஏ.ஆர்.ரஹ்மான் ஓட இசையா? இல்ல விக்ரம் குமார் ஓட எழுத்தா? எத பத்தி மொதல்ல சொல்றது? யாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்ல.

குறிப்பிட்டு சொல்லணும்னா கிரிக்கெட் கிரௌண்ட்ல போட்டோ எடுக்குறதும், மழையை கண்ட்ரோல் பண்ற சீனும் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச சீன். இந்த படம் ரிலீஸ் ஆனப்ப எவ்ளோ ஆச்சர்யத்தோட பாத்தனோ அதே ஆச்சர்யத்தோடதா எட்டு வருஷம் கழிச்சு இன்னைக்கும் ’24’ படத்தை பாத்தேன்.

இன்னும் பத்து வருஷம் கழிச்சு பாத்தாலும் அதே ஆச்சர்யம் இருக்கும்ங்கிறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. இன்னும் இந்த மாதிரி படங்கள் தமிழ் சினிமால தொடந்து வரணும். வெற்றி பெறணும்.

Article By Jayanth Nivas