Cinema News Stories

‘GOOD NIGHT’ IS THE BEGINNING OF GOOD LIFE!

நம்ம ஊரு சினிமால இன்னைக்கு ஆக்ஷன், Horror, திரில்லர்-னு எவ்ளோ genre மாறி மாறி வந்து ஹிட் ஆனாலும் என்னைக்கும் தமிழ் சினிமால மவுசு குறையாம எப்போதும் மக்களால கொண்டாடப் படுறது நல்ல குடும்ப காதல் கதைகள் தான். அந்த வகைல காதலுடன் குடும்பத்தோட குட் லைப் பத்தி சொன்ன படம் தான் குட் நைட்.

12.05.2023 தமிழ் சினிமால வெளியான காதல், குடும்பம் மற்றும் நகைச்சுவை திரைப்படம் தான் குட் நைட். அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகர் எழுதி இயக்கி, முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் மணிகண்டன், மீத்தா ரகுநாத் ,இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடிச்சிருப்பாங்க. நம்ம சொந்த வாழ்க்கையை எடுத்ததுனால என்னவோ 50 நாட்களுக்கு மேல திரையரங்குகள், இன்று வரை OTT தளத்துல வெற்றிகரமா மக்களால கொண்டாடப்பட்டுட்டே இருக்கு .

காதல் கதைனா காலங்காலமா இருக்குற Formula-லாம் எதுமே இல்லாம கல்யாணத்துக்கு அப்பறம் காதல் எப்படி இருக்கனும்னு இந்த படத்துல சொல்லியிருப்பாங்க. தமிழ் சினிமால காமெடிக்காக மட்டும் use பண்ணிட்டு இருந்த குறட்டைய ஒரு கதையோட இணைச்சு அத ரொம்ப நல்லாவே கையாண்டு இருப்பாங்க. தன்னோட feelings-அ சொல்ல யாருமே இல்லாத சூழ்நிலையில வாழ்ந்து Introvert-ஆன பொண்ணுக்கும், காலைல அலாரத்துக்கு ஒரு கொட்டு, ஆபீஸ்ல திட்டு, பத்தியும் பத்தாத Foodu-னு கடுப்பான life-ஐயும் கடந்து போயிட்டு இருக்க பையனுக்கும் உருவான அழகான காதல் தான் இந்த படம்.

மோகனோட குறட்டைய ஒரு குறையா நினைக்க வைக்குது அவரோட வாழ்க்கைல நடந்த சில சம்பவங்கள். உதாரணமா காதல் பிரிய ஏதோ ஏதோ காரணம்லாம் இருக்கலாம். ஆனா மோகனுக்கு குறட்டையும் ஒரு காரணமா இருந்துச்சு. அனு வாழ்க்கைல ஒரு புது chapter கல்யாணத்துக்கு அப்புறம் தான் தொடங்குது. எப்போதும் அவங்க கூட பேச, அவங்கள பாத்துக்க, அவர்களுக்கான ஒருத்தரா மோகன் Entre ஆகுறாரு.

தன்னோட குறைட்டைனால அணு பாதிக்க கூடாதுனு மோகன் நினைச்சாலும் அதனால அவர் விலகி போறது தான் அனு மனசுல ஒரு பாதிப்பா இருக்கு. அனுவ பொறுத்தவரை குறட்டை குறையாவே இல்ல. காலாகாலமா கணவன் மனைவிக்குள்ள சின்ன சின்ன விசயங்கள் குறையா இருந்தாலும் அத எப்டி சுமுகமா கடந்து போகணும், கழட்டி விட்டு போக கூடாதுனு இந்த படத்துல சொல்லி இருப்பாங்க.

ரமேஷ் திலக் & ரைச்சல் ஜோடி அவங்ககுள்ள இருக்க அந்த கெமிஸ்ட்ரி எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கும். கணவன் தன்னோட மனைவிக்கு எந்த அளவுக்கு உறுதுணையா இருக்கனும், விட்டுக்குடுக்காம இருக்கனும்னு ரமேஷ் வாழ்ந்து காட்டிருப்பாரு. ஒரு மாமா மச்சானுக்குள்ள இருக்க சின்ன சின்ன கிண்டல், கேலி அதோட அதிக அளவு அக்கறை இதெல்லாம் ரொம்ப அழகாவே காட்டிருப்பாங்க.

பக்கத்து வீட்டுக்கும் சோ்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்னு பாட்டுல வர மாதிரி நம்ம director-ஆ பார்த்த பாலாஜி சக்திவேல் அனு ஓட ஹவுஸ் ஓனர் கேரக்டர்ல மனசுல பதிஞ்சிருப்பாரு. ஷான் ரோல்டன் இசை இந்த படத்துக்கு பெரிய பலமாவும் இருந்துச்சு. நான் காலி பாடல் மோகனுக்காக மட்டுமில்லாம நம்ம எல்லாரோட Antham-ஆவும் மாறிடுச்சு. இன்னையோட குட் நைட் படம் வந்து ஒரு வருசம் முடிஞ்சிருக்கு. இன்னும் எத்தன வருசம் ஆனாலும் தமிழ் சினிமால இந்த படத்துக்குனு ஒரு இடம் கண்டிப்பா இருக்கும் .

ARTICLE BY RJ MOZHIYAN