Specials Stories

“6 YEARS OF IRUMBUTHIRAI”

பொதுவா கோடை காலத்துல ரிலீஸ் ஆகுற படங்கள் எல்லாம் A,B,C மூணு சென்டர் ரசிகர்களையும் தியேட்டருக்கு வர வைக்குற குடும்ப படங்கள், காமெடி படங்கள் , குழந்தைகளுக்கு பிடிச்ச கார்டூன் படங்களா தான் இருக்கும். ஆனா 2018- சம்மருக்கு யாரும் எதிர்பாராத ஒரு கதைகளத்தோட, எங்கயும் போர் அடிக்காத திரைக்கதையோட , அட்டகாசமான நடிகர்களோட , மிரட்டலான இசையோட,தியேட்டர்களை நோக்கி ரசிகர்களை வர வச்ச படம் தான் இரும்புத்திரை.

நடிகர் விஷாலோட சினிமா பயணத்துல முக்கியமான படங்கள் வரிசையில முதல் ஐந்து இடத்துக்குள்ள இரும்புத்திரை கண்டிப்பா இருக்கும். சாதாரணமா நாம தினமும் யூஸ் பண்ற மொபைல் போன் என்ன பண்ணும்? என்ன வேணா பண்ணும் அதுக்கு இரும்புத்திரை படம் ஒரு பாடமே எடுத்திருக்கும். ராணுவ வீரனான விஷாலுக்கு, சொத்து சேர்த்து வைக்காம சுத்தி கடனை சேர்த்து வச்சிருக்க அப்பா டெல்லி கணேஷ்.

அண்ணன் மேல கோபத்துலையே இருக்க தங்கச்சினு இயல்பான கதையா தான் படம் ஆரம்பிக்கும், தங்கச்சி கல்யாணத்த நல்ல படியா நடத்தி வைக்க போலியான documents கொடுத்து ஆறு லட்சம் லோன் விஷால் வாங்குறாரு , Bank Accountல லோன் வாங்கின ஆறு லட்சம், அம்மா சேர்த்து வச்ச நாலு லட்சம்னு இருக்க, அடுத்த நாளே Accountல இருந்த பத்து லட்சமும் காணாபோகுது படமும் அங்கயிருந்து விறுவிறுப்பாகுது.

தனி ஒருவன் படத்துல ஒரு வசனம் வரும் “ஒவ்வொரு சின்ன தப்புக்கு பின்னாடியும் பல பெரிய தப்புகள் ஒளிஞ்சிருக்குனு.” அது மாதிரி சின்னதா ஒரு தப்பு விஷால் பண்ண தன்னோட பணம் என்னாச்சு , போலீஸ் கிட்ட கேட்டா இல்லாத கடைக்கு லோன் வாங்கியிருக்க, ஒரு பேங்க்-ஐயே ஏமாத்தி இருக்கனு மொத்த தப்பும் விஷால் பக்கம் திரும்பும் போது தான் விஷாலுக்கு இந்த தப்புக்கெல்லாம் பின்னாடி யாரோ பெரிய ஆளோ, பெரிய கூட்டமும் இருக்குனு தெரியவருது.

Stills of Samantha from Irumbu Thirai

அப்போ தான் ஹீரோ என்ட்ரி, படத்தோட ஹீரோ விஷாலா இருந்தாலும், கதையின் கதாநாயகன்னா WHITE DEVIL-லா வர ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் தான். யுவேனோட பீஜிஎம்ல அர்ஜுன் வர ஒவ்வொரு சீனும் செம்ம க்ளாப்ஸ் தியேட்டர்ல, தமிழ் சினிமால நம்ம ஆக்க்ஷன் கிங் அர்ஜுனுக்கும் இந்த படம் ஒரு கம்பேக்கா அமைஞ்சது, தனி ஒருவன் சித்தார்த் அபிமன்யு போல, இரும்புத்திரை சத்யமூர்த்திய எல்லாம் கொண்டாடினாங்க WHITE DEVILலா.

இரும்புத்திரை படத்துக்கு ஒரு பெரிய வரவேற்பு கிடைக்க முக்கிய காரணம் படம் முழுக்க நிறைய புது புது காட்சிகள், சீட்டவிட்டு நகர முடியாத அளவுக்கு அட்டகாசமான திரைக்கதை. சில சீன குறிப்பிட்டு சொல்லனும்னா, அர்ஜுன் விஷால் லிப்ட்ல முதல் முறையா பாக்குறப்போ, ரெண்டு பேரும் பேசுற வசனங்கள், முக்கியமா த்தெரிக்க திருடனுக்கு தேள் கோட்டுன மாதிரி பொத்திக்கிட்டு இருக்கனும்னு சொல்ற சீனா இருக்கட்டும்,

Vishal and Samantha starrer Irumbu Thirai, directed by P.S. Mithran

அடுத்த சீனே பெரிய ஒரு மேடைல அர்ஜுன் கொடுக்குற ஸ்பீச் “INFORMATION IS WEALTH”, நம்மளோட தனிப்பட்ட விவரங்களை இந்த மொபைல் Appsல என்னனு கூட படிக்காம Allow Allow Allowனு கொடுக்குறதால அதை வச்சு ஒருத்தன் என்ன வேணாலும் பண்ண முடியும்னு ரொம்ப மாஸ் சீன்ஸோட காட்டியிருப்பாரு டைரக்டர் P.S மித்ரன்.

இன்னொரு முக்கியமான சீன் சாதாரணமா நாம ஜெராக்ஸ் கடைல ஜெராக்ஸ் எடுக்க கொடுக்குற ஆதார் கார்டு, பேன்கார்ட், பாஸ்போர்ட், ரேசன் கார்ட் இதெல்லாம் சில கடைக்காரங்க இன்னொரு காப்பி எடுத்து காசுக்காக நம்ம தனிப்பட்ட விவரங்களை சேல் பண்றாங்க,பொருட்காட்சில,மால்ஸ்ல lucky drawல நாம எழுதி தர நம்ப நம்பர் எல்லாம் விற்கப்படுதுன்ற சீன்லாம் வரைல தியேட்டரே அமைதியாச்சு.

ஒரு சீன்ல படத்தோட கருவ ஒரு வசனமா வச்சிருப்பாரு டைரக்டர் மித்ரன் “முன்னாடிலாம் பணத்த திருடனும்னா மனுஷனதான் ஏமாத்தனும், இப்பலாம் அந்த மனுஷன் நம்புற கம்யூட்டர ஏமாத்துனா போதும்”. டிஜிட்டல் இந்தியாவ மாறினது வரவேற்க தக்க விஷயம், ஆனா எல்லாமே டிஜிட்டலா மாறினது நம்ம தனிப்பட்ட விபரங்களுக்கு பாதுகாப்பானதா இல்ல, படத்துல டார்க் வெப் இருக்கு, நம்ம datas collect பண்றாங்கனு சொல்றாங்க, அது திரைல மட்டுமில் நிஜத்துலையும் நடக்குது.

White Devil அர்ஜுன் டெலிகாம் மினிஸ்டரோட account hack பண்ணி ஒட்டு மொத்த இந்தியர்களோட ஆதார் விபரங்களை வாங்குற சீன் பாத்த அப்பறம், இன்னைக்கும் எங்க ஆதார் கேட்டாலும் கண்ணு முன்னாடி வந்து போகும், BUTTON Phoneலருந்து Smart Phone மாறின பலரையும் Button phone தான் பாதுகாப்புனு Feel பண்ண வச்சது இரும்புத்திரை படம்.

படத்தோட கிளைமாக்ஸ் வரும் போது ஒரு சீன் அர்ஜுன் தீவிரவாதிகளோட accountலருந்து விஷால் accountக்கு போட CYBER CRIME, CBI enquiry வச்சு விஷால் வேலைய தூக்குவாரு,அதே formulaவ White Devil அர்ஜுன பிடிக்க தமிழ்நாடு போலீஸ் ஓட சம்பளம் மொத்தத்தையும் விஷால் அர்ஜுன் accountக்கு போட ஓட்டு மொத்த policeம் கிளைமாக்ஸ்ல அர்ஜுன் பிடிக்கும்.

படத்தோட கிளைமாக்ஸ்ல ஹீரோ விஷால் ஜெய்ச்சாரு, ஆனா வில்லன் அர்ஜுன் தோக்கல , ஒரு பெரிய குடோன்ல கோடிக்கணக்கான பணத்தையும் எரிச்ச அர்ஜுன், Confidentடா சொல்றது இத என்னால திரும்பும் சம்பாரிக்க முடியும்னு. ஏன்னா அதை அர்ஜுனே படத்தோட கடைசி வசனமா சொல்லுவாரு “இந்த காலத்து திருடனுக்கு உன் பணத்த திருட உன் வீட்டு சாவி தேவையில் உன்ன பத்தின சின்ன informationனே போதும்னு”. இன்னும் நீங்க இரும்புத்திரை படம் பாக்கலனா கண்டிப்பா பாருங்க, இனியாச்சும் தெரியாத வெப்சைட்ல உங்க தனிப்பட்ட விவரங்கள் தராது, தேவையில்லாத APPS install பண்ணி எல்லாத்துக்கும் Allow allow கொடுக்குறத தவிறுங்க.

Article By RJ SRINI