Cinema News Stories

இளையராஜா பிறந்த நாளை கொண்டாடும் பிரபலங்கள்!

உலகப் புகழ்பெற்ற இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாள் இன்று. 1970களில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி 80களில் தமிழர்கள் அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவருக்கு இன்று வயது 80. இத்தனை ஆண்டு கால இசைப்பயணத்தில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே. இறுதியாக வெளியான விடுதலை படத்தின் பாடல்களே அதற்கு சான்று.

இவரது பிறந்தநாளில் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது பற்றி தற்போது பார்ப்போம்.

பா.ரஞ்சித் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர். இளையராஜாவை கொண்டாடித் தீர்ப்பவர். தனது படங்களில் இளையராஜா குறித்து தொடர்ந்து பேசி வருபவர். ’இன்னும் என்னை வெகு தூரம் கூட்டி செல்லையா’ என ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜா குறித்து இயக்குநர் செல்வராகவன் பின்வருமாறு எழுதியுள்ளார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவரது உயிர்த்தோழன் பாரதிராஜா தெரிவித்துள்ள வாழ்த்து இதோ.

உலக நாயகன் கமல்ஹாசன் தனது வழக்கமான ஸ்டைலில் தனித்துவமாக ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் குடும்ப உறுப்பினரும், நடிகருமான பிரேம்ஜி பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளையராஜா அப்பா என ட்வீட் செய்துள்ளார்.

இப்படி பிரபலங்கள், தலைவர்கள், ரசிகர்கள் பலரும் இசைஞானியின் பிறந்த நாளை அவரது இசையுடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Article By MaNo

About the author

MaNo