Specials Stories

உலகில் யானைகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் தெரியுமா?

உலகின் மிகப்பெரிய பொக்கிஷமான காடுகள உருவாக்குறதுலயும் அத பாதுகாக்குறதுலயும் யானைகளுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு. காட்ல வாழ்ற உயிரினங்கள் அனைத்துக்கும் தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கிறதுக்கான வழிய உருவாக்குறதும் யானைகள் தான்.

யானைகள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 130-ல இருந்து 240 கிலோ வரைக்கும் உணவு சாப்பிடக் கூடியது. அதே சமயத்துல உணவு, நீர தேடி ரொம்ப தூரம் பயணம் செய்யக் கூடியது. யானைகள் சாப்பிடக் கூடிய பழங்களோட விதைகள் சாணம் வழியா வெளிவரும் போது அந்த விதைகள் அதிக வீரியத்துடன் வளர்கின்றன.

இப்படி ஒரு யானை தனது வாழ்நாள்ல பல ஆயிரக்கணக்கான மரங்களை உருவாக்குது. தண்ணீர் இருக்கும் பகுதிய 5 கிமீ தூரத்துல இருந்தே கண்டுபிடிக்கக் கூடிய ஆற்றல் யானைகளுக்கு இருக்கு.

இப்படி ஒரு வனத்தோட வளம் யானைகள சார்ந்து தான் இருக்கும். யானைகள் அதிகம் வாழும் வனங்கள் செழிப்பா இருக்கும். இல்லனா வனங்களோட செழிப்பு குறைஞ்சிடும். இப்படிப்பட்ட யானைகளே இன்னைக்கு மனிதர்களால பெருமளவு அழிஞ்சுட்டு இருக்கு. குறிப்பா ஆசிய யானைகள் எப்படி அழிஞ்சுட்டு இருக்கு தெரியுமா? இந்தியாலயும், தமிழ்நாட்டுலயும் மட்டும் 2021-22 ல எடுக்கப்பட்ட யானைகள் இறப்பு பத்தின ஒரு கணக்கெடுப்பு பத்தி இப்போ பாப்போம்.

2021-22ல இந்தியால மொத்தம் 82 யானைகள் உயிரிழந்திருக்கு. அதுல தமிழ்நாட்டுல மட்டும் 11 யானைகள் உயிரிழந்திருக்கு.

இதுல ரயில்ல அடிபட்டு இறந்த யானைகள் மொத்தம் 15, தமிழ்நாட்ல மட்டும் 3.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகள் மொத்தம் 57, தமிழ்நாட்ல மட்டும் 5.

வேட்டையாடி கொல்லப்பட்ட யானைகள் மொத்தம் 4, தமிழ்நாட்ல மட்டும் 3.

விஷம் தாக்கி உயிரிழந்த யானைகள் மொத்தம் 6, தமிழ்நாட்ல எதுவும் கிடையாது.

ஏற்கனவே உலகத்துல இருந்த 24 வகை யானை இனங்கள்ல 22 இனங்கள் அழிஞ்சு, இப்போ ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய வகை யானைகள் மட்டுந்தா உயிரோட இருக்கு. இந்தியாவோட இந்த கணக்கெடுப்ப வச்சு பார்க்கும் போது அதையும் நாம ஒழுங்கா பாதுகாக்குறது இல்ல அப்படிங்குறது நல்லாவே தெரியுது.

இயற்கையா நிகழக்கூடிய மரணங்கள தாண்டி செயற்கையா நிகழக்கூடிய பல யானைகளின் மரணங்களுக்கு மனிதர்கள் காரணமா இருக்கோம். இந்தியால மட்டுமே இப்படினா மத்த இடங்கள்ல எத்தனை யானைகள் இந்த கதிக்கு ஆளாகும்னு தெரியல.

யானைகளோட வழித்தடங்கள் இன்னைக்கு மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களாவும், விளைநிலங்களாவும் மாறினது தான் இதுக்கான காரணம். யானைகள் வழித்தடத்த மனிதர்கள் ஆக்கிரமிக்குறது மட்டுமில்லாம, யானைகள் ஊருக்குள் வந்துடுச்சுனு நாம யானைகள துரத்த அதுங்கள துன்புறுத்துற மாதிரி நிறைய விஷயங்கள் செஞ்சுட்டு இருக்கோம்.

இனிவரப்போற தலைமுறைக்கு நல்லது செய்யனும்னு நாம நினைச்சோம்னா அதுல யானைகள பாதுகாக்க வேண்டியது ரொம்ப முக்கியமான கடமையா இருக்கு. யானைகளின் அழிவு உணவு சுழற்சிக்கும், இயற்கையின் சமநிலைக்கும் மிகப்பெரிய பாதிப்பையும், தாக்கத்தையும் உண்டு பண்ணும்.

அத தெரிஞ்சுகிட்டு அனைத்து மக்களும், அனைத்து அரசுகளும் அவங்கவங்க பகுதில இருக்க யானைகள பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள எடுத்தா இனி வரும் தலைமுறையின் வாழ்க்கை செழிப்பானதா அமையும்.

Article By MaNo