Cinema News Interview Stories

என்னோட Favourite Hero விமல்! – இனியா

Vimal

சமீபத்தில் நடிகை இனியா சூரியன் FM டிஜிட்டல் நேர்காணலில் பங்குபெற்றார். அப்போது ‘விலங்கு’ வெப் சீரிஸ் குறித்து பேசிய அவர்’ “என்னோட Favourite Hero மற்றும் என்னுடைய முதல் ஹீரோ விமல். அவருடன் நடித்து 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளேன்.

ஆரம்பத்தில் கதை கேட்கும் போது விமல் தான் ஹீரோ என்பது தெரியாது. அப்போது யாரையும் தேர்வு செய்யவில்லை. கதை வேலைகள் முடியும் சமயத்தில் தான் விமல் நடிக்கப்போகிறார் என்று கூறினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

வாகை சூடவா படம் தான் எனது முதல் இடம். நாங்கள் இருவரும் அந்த வாகை சூடவா படத்தில் நடித்த போது நிறைய கற்றுக் கொண்டோம். பழைய கால கட்டத்தை சேர்ந்த படமென்பதால் அந்த சமயத்தில் நிறைய பயிற்சி எடுப்போம். சற்குணம் மாதிரியான திறமையான இயக்குநரிடம் வேலை பார்த்துள்ளோம். இயக்குநர் சற்குணம் இல்லையென்றால் இனியா கிடையாது. 2 நல்ல நடிகர்களை அவர் உருவாக்கியுள்ளார். இயக்குநர் சற்குணத்திற்கு நன்றி” என்று கூறினார்.

மேலும் பல சுவாரசியாமன விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo