Interview Stories

வாணி போஜன் எடுத்த T-20 Challenge

இந்த கட்டுரையானது  ஹரிணி மற்றும் நடிகை வாணி போஜன் இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுவார்.

தமிழ் சினிமாவில் Hottest Celebrity-னா நீங்க யாரை சொல்லுவீங்க ?

“நடிகைகளில் நயன்தாரா, நடிகர்களில் விஜய்சேதுபதி

உங்க Bucket List-ல கண்டிப்பாக இருக்குற ஒரு விஷயம் என்ன?

“எங்க ஊருக்கு போய் Relax பண்ணனும். என் ஊரு ஊட்டி, அங்க சுத்திப்பார்க்க நிறைய இடம் இருக்கு. சொந்த ஊர சுத்தாம மத்த இடங்களை சுத்துறதில என்ன அர்த்தம் இருக்கு”.

உங்களுக்கு பிடித்த Mass Hero யாரு?

“என்னோட Favourite Mass Hero ‘விஜய்சேதுபதி’. ஒரு பயங்கரமான மாஸ் இல்லாம, நம்ம ஊரு Mass அவர் கிட்ட இருக்கும்”.

வாணி போஜன்

உங்க வாழ்க்கையை ஒரு படமா எடுத்தா, அது எந்த Genre படமா இருக்கும்?

“ரொம்ப Powerful-ஆன ஒரு பெண்ணின் கதையா அது இருக்கும்”.

ADVICE

உங்களுக்கு கிடைத்த சிறந்த Advice எது?

“எங்க அம்மா சொல்லுவாங்க ‘எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து யாருடைய உதவியும் இல்லாம இவ்ளோ தூரம் வந்துருக்க, உன்ன நிறைய பேர் (உன்னோட Fans) கொண்டாடிட்டு இருக்காங்க. ஆனா எப்போவும் நீ தலைக்கனத்தை ஏத்திக்கமா இருந்துக்கோ’-னு சொல்லுவாங்க. அது தான் எனக்கு கிடைத்த சிறந்த Advice”.

வாணி போஜன்

உங்களுடைய பெரிய Addiction எது?

“என்னோட Phone தான், Instagram நிறையா Use பண்ணுவேன்”.

நீங்க எப்போவுமே பாடக்கூடிய ஒரு Favourite பாடல் எது ?

“கண்ணம்மா பாடல் (றெக்க)”.

உங்க Whats App-ல் இருக்கும் ஒரு வித்தியாசமான குழுவின் பெயர் என்ன?

“அது ரொம்ப Weird-ஆ இருக்கும். எங்களோட King Fisher தோழிகள் இருக்க கூடிய குழு அது”.

உங்கள்ளுக்குனு இருக்கக் கூடிய ஒரு தனித்துவம் என்ன?

“என்னோட தன்னம்பிக்கை தான், யாரோட Support-உம் இல்லாம இவளவு தூரம் வந்ததே என்னோட தனித்துவம் தான்”.

உங்களோட Current Relationship-ஐ விளக்கும் வகையில் ஒரு பாடல் ?

“சட்டி சுட்டதடா கை விட்டதடா”.

ஒரு தீவுல மாட்டிக்கிட்டா யார் கூட சேர்ந்து மாட்டிக்கணும்னு நினைக்கிறீங்க ?

“என்னோட Boy Bestie கூட மாட்டிக்கணும், அவன் கூட தான் என்ன வேணாலும் பேச முடியும். ஒரு பெண்ணுக்குரிய நல்ல மரியாதையை கொடுப்பான்”.

நீங்க அடிக்கடி  உபயோகிக்கிற ஒரு Favourite வார்த்தை என்ன ?

“’Oh My God’-னு சொல்லிட்டே இருப்பேன்”.

நீங்க அதிகமா உபயோகிக்கிற Emoji எது ?

“கண்ணுல Heart போட்டு இருக்க எமோஜி தான், அது தான் Fans எல்லாருக்கும் அனுப்புவேன்”.

எத்தனை முறை காதலில் விழுந்துள்ளீர்கள்?

“சொல்லாமல் விழுந்த காதல் நிறைய இருக்கு. யாரவது என்ன ரொம்ப மரியாதையா பார்த்தாங்கனா, Impress பண்ணனும்னு இல்லாம Natural-ஆ இருந்தா அவுங்கள பிடிக்கும்.Black Shirt, மீசை, வேஷ்டி-லாம் இருந்தா அந்த பையன ரொம்ப பிடிக்கும்”.

Fakeness இல்லாம ஊரு Side-ல Geth-ஆ இருக்க பசங்கள ரொம்ப பிடிக்கும்.

முழு Interview-யை கீழே கண்டு மகிழுங்கள்.