Interview Stories

ரித்விகா எடுத்த விறுவிறுப்பான T-20 Challenge

Riythvika

நடிகை ரித்விகா முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் கடந்த டிசம்பர் 6, 2019 அன்று வெளிவந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் ரித்விகா இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது.

ரித்விகா

உங்களுக்கு Texting பிடிக்குமா இல்ல Talking பிடிக்குமா ?

“ரெண்டுமே பிடிக்கும், Texting ரொம்ப பிடிக்கும்”.

கடைசியா நீங்க Download பண்ண பாட்டு எது?

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்துல இருக்க மாவுலியோ மாவுலி பாட்டு தான்”.

எந்த மொழியை கத்துகிறதுக்கு ஆசைப்படுறீங்க ?

“French மொழி, ‘தௌ தாப் தௌ’-னு ஏதேதோ வரும் அந்த மொழில”.

ரகசியம் Maintain பண்றதுல 1-10 மதிப்பெண்-ல உங்களுக்கு எவ்ளோ மதிப்பெண் கொடுக்கலாம்?

“எனக்கு எட்டு மதிப்பெண் கொடுக்கலாம்”.

உங்களோட முதல் தமிழ் Celebrity Crush யாரு?

“எனக்கு ஜெய்ஷ்ங்கர் சார் மேல Crush இருந்துச்சு”.

செரி, அப்போ Current Celebrity Crush யாரு?

விஜய் சேதுபதி !!!!”

ஆஹா, அப்போ விஜய்சேதுபதி தவற உங்களோட Crush யாரு ?

“அப்படிலாம் யாரும் இல்லைங்க”.

உங்களால Time Travel பண்ண முடிஞ்சா எந்த காலகட்டத்துக்கு போவீங்க?

“60-களில் இருந்த சினிமாவுக்கு போயிருவேன்”.

திரையில் உங்களுக்கு யார் சிறந்த ஜோடி?

“கலையரசன், ரமேஷ் திலக் இரண்டு பேருமே திரையில் எனக்கு சிறந்த ஜோடி தான்”.

எந்த திரை ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியா இருந்தா நல்லா இருக்கும்?

“தேவசேனா-பாகுபலி ஜோடி ரொம்ப நல்ல இருக்கும்ங்க”.

உங்களுக்கு யாரு சிறந்த Advice கொடுத்துருக்காங்க?

“எங்க அப்பா தாங்க, எப்போவுமே ‘பொறுமையா இரு மா’-னு சொல்லுவாரு”.

முழு Interview-யை கீழே கண்டு மகிழுங்கள்.