Interview Stories

‘சீறு’ படக்குழுவினருடன் ஒரு ஸ்பெஷல் Interview

சீறு

இந்த கட்டுரையானது RJ அபிநயா மற்றும் சீறு படக்குழுவினரின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது.

சீறு படம் உருவான விதம் பற்றி சொல்லுங்க ?

ரத்ன சிவா : “என்னுடைய அம்மாவுடைய ஊர் தான் மயிலாடுதுறை, அந்த ஊர்ல நிஜ வாழ்க்கை ஹீரோ மாதிரியே ஒரு பையன் சுத்திட்டு இருப்பாரு. ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்ச பையன்னாலே அவரு ஹீரோ தான. அவரை பார்த்து உருவாக்கிய கதை தான் சீறு. இந்த படமும் கூட அந்த ஊர்ல தான் Shoot பண்ணுனோம்”.

சீறு

ஜீவா சார் பத்தி என்ன சொல்ல நினைக்கிறிங்க?

ரத்ன சிவா : “என்னை பொறுத்த வரைக்கும் ஜீவா சார் ஒரு சூப்பர் ஹீரோ. நான் அவர் கிட்ட கதை சொன்ன உடனே Okay  சொல்லிட்டாரு”.

இமான் சார் கூட உங்களோட Journey பத்தி என்ன நினைக்குறிங்க ?

ரத்ன சிவா: “என்னுடைய முதல் படத்துல இருந்தே இமான் சார் கூட Work பண்ணனும்னு எனக்கு ஆசை, றெக்க படத்துல அதுக்கு வாய்ப்பு கிடைத்தது. றெக்க படம்னு சொன்னாலே நமக்கு ஞாபகம் வர்றது கண்ண காட்டு போதும் பாட்டும், கண்ணம்மா பாட்டும் தான். அவர் (இமான்) எந்த Genre-ல பாட்டு அமைத்தாலும் அதுல ஒரு Melody Touch இருக்கும். Emotional Scenes-ல லாம் சார் பயங்கரமா Score பண்ணுவாரு, சீறு படத்துலயும் அவருக்கு ஏத்த Sequence-லாம் நிறைய இருக்கு”.

இந்த படத்துல Work பண்ண அனுபவம் பத்தியும், பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தி பதியும் நீங்க என்ன நினைக்குறிங்க இமான் சார்?

இமான்: “ஏற்கனவே ரத்ன சிவா சார் கூட றெக்க படத்துல Work பண்ணிருக்கேன், அப்போவே எனக்கு தேவையான சுதந்திரத்தை எனக்கு கொடுத்தாரு. அவர் சொன்ன மாதிரி நான் எந்த விதமான பாடல் பண்ணினாலும் அதுல ஒரு Melody Touch இருக்கும், அவரும் ஒரு மெல்லிசை ரசிகரா இருக்கிறனால இந்த படத்துல அது நல்லாவே Work out ஆகிருக்கு.

‘நொச்சிப்பட்டி’ திருமூர்த்தி கண்ணான கண்ணே பாடல் பாடி சமூக வலைத்தளங்களில் Famous ஆன அப்போவே அவருக்கு ஒரு Chance கொடுக்கணும்னு நான் முடிவு பண்ணினேன், அவர் கிட்ட நான் பேசுனேன். சீறு படத்துல அவரை பாட வைக்க படக்குழுவினரும் ஒத்துக்கிட்டாங்க. திருமூர்த்தி கிட்ட Tune கொடுத்து பயிற்சி எடுக்க சொன்னேன்.

அவர் ஒரு வாரமா தொடர்ந்து பயிற்சி எடுத்தாரு. ரொம்ப ஆர்வத்தோடயும் கொஞ்சும் பயத்தோடயும் இருந்தாரு. எப்படியாவது இந்த வேலைய ஒழுங்கா பண்ணிடணும்னு நினைச்சாரு. இவரை மாதிரி ஒரு திறமைசாலிக்கு வாய்ப்பு கொடுத்த பெருமை எனக்கு எப்போவுமே இருக்கும்னு சந்தோஷமா சொல்லிக்குறேன்”.

இமான் சார் பத்தியும் Record பண்ண session எப்படி இருந்ததுன்றது பத்தியும் நீங்க சொல்லுங்க திருமூர்த்தி ?

திருமூர்த்தி: “இது எல்லாமே என் Life-ல கனவுலயே நினைச்சு பாக்காத ஒரு விஷயம். இமான் சார் Call பண்ணது, எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சது எல்லாமே ஒரு அதிசயம் மாறி இருந்துச்சு.

Recording Session ரொம்ப Jolly-ஆ இருந்துச்சு. Life-ல கிடைச்ச பெரிய பாராட்டு அது. ‘உன் முன்னாடி இருக்குறவுங்கள்லாம் முட்டாளா நினச்சிக்கோ, அந்த இடத்துல நீ மட்டும் தான் இருக்கன்னு நினைச்சிட்டு பாடு’-னு இமான் சார் சொன்னாரு”.

பாடலாசிரியர் பார்வதி பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லுங்க சார்?

இமான்: “பார்வதி ரொம்ப அழகா வரிகள் எழுதுவாங்க. ஜில்லா படத்துல வெரசா போகையிலே பாடல் ரொம்ப அழகா எழுதிருப்பாங்க. எளிமையான வரிகளை வைத்து ரொம்ப அழகா பாடல் எழுதுவாங்க.

இன்னொரு முக்கியமான விஷயம் நான் சொல்லணும், இந்த வருஷம்  அக்டோபர் 21 என் வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு நாள். அன்னைக்கு காலையில திருமூர்த்தியை வைத்து செவ்வந்தியே பாடல் Record பண்ணினோம்.

அன்னைக்கு Evening-ஏ பாடகர் வைக்கோம் விஜயலட்சுமியை வைத்து அந்த பாடலோட Female Version Record பண்ணினோம். ஒரே நாளில் கண் பார்வையற்ற இரண்டு திறமையான பாடகர்களை வைத்து பாடல்கள் Record பண்ணது சந்தோஷமா இருந்துச்சு. என்னோட Studio இறைவனின் கூடாரம் மாதிரி எனக்கு தெரிஞ்சிச்சு”.

சீறு

இந்த பாடல் எழுதின அனுபவத்தை பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்க பார்வதி Madam?

பார்வதி: “இமான் சார்க்கு நான் எழுதுன முதல் பாடல் வெரசா போகையிலே பாடல் தான். அது ரொம்ப நல்லா வந்தது. அதே மாதிரியே இந்த செவ்வந்தியே பாடலும் ரொம்ப நல்லா  வந்துருக்கு. இந்த பாடல் எழுதுறதுக்கு முன்னாடி இயக்குனர் அவர்கள் எனக்கு சில காட்சிகளை படத்துல இருந்து போட்டு காமிச்சாரு, அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு”.

தொகுப்பாளர்: “இவளவு நேரம் எங்களுக்காக நேரம் ஒதுக்கி நிறைய விஷயங்களை எங்களோட ஷேர் பண்ணதுக்கு நன்றி. சீறு படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்”.

முழு Interview-வை கீழே கண்டு மகிழுங்கள்.