விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வரும் படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் முதல் single track “ரெண்டு காதல் ” நேற்று (14 பிப்ரவரி ) வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகியோரின் கூட்டணியில் வெளிவந்த ‘நானும் ரௌடி தான்’ திரைப்படம் ஒரு மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது. அது மட்டுமின்றி அப்படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கக்கூடிய சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்தது. இந்த கூட்டணி மீண்டும் இணையப் போகிறது என்ற அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்கள் ஆவலுடன் ” காத்து வாக்குல ரெண்டு காதல் ” திரைப்படத்தை திரையில் காண உற்சாகத்துடன் தயாராகி விட்டனர்.
இந்நிலையில் இப்படத்தின் ” ரெண்டு காதல் ” பாடலின் lyric வீடியோ வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், Youtube-ன் டிரெண்டிங் பட்டியலில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனே இப்பாடலிற்கு வரிகளை எழுதியுள்ளார். இப்பாடலை Rockstar அனிருத்துடன் இணைந்து பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் பின்ட்ரா ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்பாடலின் வரிகளை வைத்து பார்க்கும் போது, இரண்டு காதல் செய்து இரண்டிலும் தோல்வியுற்ற கதாநாயகனின் மன வலியை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் படத்தில் இடம்பெறும் என தெரிகிறது. இந்த Lyric வீடியோ அனிருத் உருகி உருகி Feel செய்து பாடும் காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் அனிருத்தின் மென்மையான இசையும், உருக வைக்கும் குரலும் கேட்போர் மனதில் ஆழமாக பதியும்படி அமைந்துள்ளது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ள ” ரெண்டு காதல் ” பாடலின் Lyric வீடியோவை கீழே காணுங்கள்.