எவ்வளவு காலம் இடைவெளி விட்டு நடித்தாலும் சிம்புவை ஏன் விரும்புகிறோம்?
நம் தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு என்று சில qualities இருக்கிறது. யதார்த்தமாக, தைரியமாக, கெத்தாக, வெளிப்படையாக இருப்பது. ஆனால் இதெல்லாம் நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோக்கு பொருந்துமென்றால் அது நமது சிலம்பரசனுக்குத்தான்.
சரியோ தவறோ எதுவாக இருந்தாலும் நான் இப்படித்தான் என வெளிப்படையாக இருப்பார். எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும் left hand-ல் அசால்டாக டீல் செய்து தனக்கான இடத்தை நங்கூரமிட்டது போல் அழுத்தமாக பிடித்து வைத்திருப்பார்.
நடிகர், நடன கலைஞர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடகர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்ட Little Superstar-க்கு அவரது ரசிகர்கள் தரும் ஆதரவு முடிவில்லாதது. அதற்கு STR தரும் மதிப்பு அளவில்லாதது. எந்த மேடைல பேசினாலும் அவரது ரசிகர்கள் பத்தி பேசாமல் இறங்க மாட்டார்.
வாழ்த்துவதற்கு முன் வரலாறு :
‘உறவைக்காத்த கிளி’ என்ற படம் மூலம் அழகான பச்சை கிளிப்போல் தமிழ் திரைவுலகிற்கு அறிமுகமானவர், ‘காதல் அழிவதில்லை’ படத்தில் கதநாயகனாக அழியாத முதல் கால் தடம் பதித்தார். ‘தம்’ கட்டி கடும் விமர்சன ‘அலை’களை தாண்டி ‘கோவில்’ போல புனிதமான ரசிகர்களை பெற்றவர், சினிமாவின் தாயமாக ‘குத்து’ படத்திலும், பெண்கள் மனதில் ‘மன்மதன்’-ஆகவும் வலம் வந்தவர், தன்னை எதிர்ப்போருக்கு ‘வல்லவன்’-ஆக, திரைக்களத்தில் ‘காளை’யாக ‘சிலம்பாட்டம்’ ஆடினார்.
பிறகு பெண் ரசிகர்கள் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என்று கேட்க ‘வானம்’ போல் மனமும் ‘ஒஸ்தி’ ஆன குணமும் கொண்ட அவரது முழு அன்பையும் கொடுத்து விட்டு ‘போடா போடி’ என்றார். ‘இங்க என்ன சொல்லுது’ என்று ‘வாலு’ சேட்டைகளை சிலர் காட்ட ‘இது நம்ம ஆளு’ என்று சர்ச்சைகள் வர ‘அச்சம் என்பது மடமையடா’ என்று ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்று மாஸாக வந்த அவருக்கென விடிந்தது ‘செக்கச் சிவந்த வானம்’.
பின்னர் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்று சொன்ன மாதிரியே வந்தார். ரசிகர்களுக்கு ‘ஈஸ்வரன்’-ஆக திகழ்ந்தார். இன்றும் இவர் பேச்சுக்கு கூடும் ‘மாநாடு’, STR என்றும் எங்கள் மனதோடு.
“சிம்புவோட life ல அவ்ளோ ups & downs இருந்தாலும் அவருக்கு எப்போதும் youth கிட்ட ஒரு attraction இருக்கு”னு நடிகர் விவேக் சொல்லியிருக்கார். அதுமட்டுமில்ல “யாருக்கு red card எடுத்துப்பார் record” என்ற சிம்பு fans-ன் முழக்கம் இன்றும் மறக்க முடியாதது.
இப்பொழுது சிம்பு பற்றி படிக்கும் உங்களுக்கு அவருடைய style-ல் ஒரு punch “வாழ்க்கைல யாரு 1st வரான்னு முக்கியமில்லை last ல யாரு 1st வரான்னு தான் முக்கியம்”. இத சொன்னதோட மட்டும் விட்டுடாம செய்தும் காட்டியிருக்கார். இவ்வளவும் அவருடைய ரசிகர்களுக்காகவும், அவர்களின் நம்பிக்கைக்காகவும் தான்.
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு அப்படிங்குற நியூட்டன் 3ஆம் விதிப்படி, சிம்பு தனது ரசிகர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும், சிம்பு ரசிகர்கள் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று கூடவோ குறைந்ததோ அல்ல. இது என்றைக்குமே மாறாது.
கடந்த காலத்தில் STR-க்கு கிடைத்தது காயம், இருந்தாலும் என்றைக்கும் தமிழ் சினிமாவுக்கு அவர்தான் தாயம், STR தரப்பில் இருக்கும் நியாயம், அவருக்கு தான் என்றுமே எங்கள் இதயம்.
சிலம்பரசனுக்கு சூரியன் FM சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.