Cinema News Stories

விஜய்க்காக பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்… Beast Mode On!

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் நெல்சன். அதே போல நெல்சனின் 2 படங்களுக்கும் அனிருத் அற்புதமாக இசையமைத்திருந்தார்.

இப்படிப்பட்ட நெல்சன், அனிருத் கூட்டணியுடன் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ விஜய் இணைந்திருப்பது, ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடமும் எக்கச்சக்க எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்துள்ளது.

Image

‘பீஸ்ட்’ படத்தின் அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து தொடங்கி அப்படத்தின் ஒவ்வொரு அப்டேட் வெளிவரும் நாளும் ரசிகர்களால் திருவிழா போல கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் திருவிழா தான்.

Beast 1st single promo தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் சிறப்பாக இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதோ அந்த அப்டேட்!

இதற்கு முன்பு வெளியான பர்ஸ்ட் லுக், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியிடப்பட்ட புகைப்படம் என அனைத்து அப்டேட்டுகளும் சமூகவலைத்தளங்களை திக்குமுக்காட வைத்தது என்றே சொல்லலாம். அதே போல இன்று காலையில் பீஸ்ட் அப்டேட் குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்து, #BeastUpdate எனும் ஹேஷ்டேகில் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவரவர் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து வந்தனர்.

அத்தனை எதிர்பார்ப்புகளையும் 100 சதவீதத்திற்கும் மேல் பூர்த்தி செய்யும் வகையில் இந்த அப்டேட் வெளியாகியுள்ளது. அரபிக் குத்து என வித்தியாசமாக இசையமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.