2020 நவம்பர் மாசம் OTT-ல ஒரு சூப்பரான திரைப்படம் ரிலீஸ் பண்ணாங்க. ஆனா எல்லாருக்குமே இந்த திரைப்படத்தோட குழுவினர் மேல ஒரு பெரிய கோபம் இருந்துச்சு. ஏன் இந்த படத்தை OTT ரிலீஸ் பண்ணாங்க? இது பக்கா தியேட்டர் ப்ராடக்ட் அப்படின்னு.
ஆனா இந்த படத்துக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பா கிடைச்சிருச்சு. அதாவது 68வது தேசிய திரைப்பட விழாவில் இந்த திரைப்படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைச்சிருச்சு. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதைனு இந்த படத்துக்கு 5 தேசிய விருதுகள் கெடச்சுது.
“நாம ஜெயிச்சிட்டோம் மாறா”னு சத்தமா சொல்ல வச்ச படம் 2020 நவம்பர் 12ஆம் தேதி Direct-அ OTT-ல ரிலீஸ் ஆன “சூரரைப் போற்று” திரைப்படம் தான். சுதா கொங்கரா இயக்கம், சூர்யாவோட நடிப்பு, ஜிவி பிரகாஷோட மியூசிக் இது எல்லாமே இந்த படத்துல ரொம்ப சூப்பரா இருந்தது. இந்தப் படத்த பார்த்துட்டு சூர்யாவ பாராட்டாத ஆட்களே இருக்க மாட்டாங்க.
இந்தப் படத்தோட குழுவினர பொறுத்தவரைக்கும் தேசிய விருதுகள விட மக்களோட மனசுல இந்த படம் இடம் பிடிச்சிருக்கறத தான் அவங்க பெருசா கருதுறாங்க. குறிப்பா “மாறா என்ற நெடுமாறன் ராஜாங்கம்” மற்றும் “பொம்மி என்ற பொம்மி நெடுமாறனும்” கண்டிப்பா நம்ம மனசுல எப்பயுமே இருக்குற கேரக்டர்ஸ் தான்.
இந்த படம் G . R கோபிநாத் அவர்களுடைய வாழ்க்கை வரலாற தழுவுன மாதிரி தான் இருக்கும். நம்ம சூர்யா இந்த படத்துல சூர்யா அந்த கதாபாத்திரமாவே வாழ்ந்துருப்பாரு. இந்த படத்துல வர “இங்க இருக்குடா வானம் அத எட்டிப் பிடிக்கல நாளும்” லைனுக்கு ஏத்த மாதிரியே இந்த படத்துல கதைக்களத்த அவ்ளோ அழகா சுதா கொங்கரா அமைச்சுருந்தாங்க.
இந்தப் படத்த பார்த்து நம்மளாலையும் சாதிக்க முடியும் அப்படின்ற ஒரு விஷயம் நம்ம எல்லாருடைய மனசுக்குள்ளேயும் வந்துச்சு. Commercial திரைப்படங்கள், காமெடி திரைப்படங்கள், காதல் திரைப்படங்களுக்கு மத்தியில இந்த மாதிரி Inspirational திரைப்படத்துக்கும் மவுசு குறையல. குறிப்பா படத்தோட கிளைமாக்ஸ்ல அந்த மூன்று நண்பர்களும் சாதிச்ச சந்தோஷத்துல நடந்து வரும் போது நாமளே சாதிச்ச மாதிரி கண்ணீரும் வந்துச்சு.
கொரோனா காலகட்டத்துல இந்த படத்த OTT-ல ரிலீஸ் பண்ணாங்க, ஆனா இந்த படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருந்துச்சுனா பல Records-அ ஒடச்சிருந்திருக்கும். தமிழ் சினிமால எத்தனையோ படங்கள் வந்தாலும் இந்த திரைப்படம் எல்லோர் மனசுலயுமே நீங்கா இடம் பிடித்திருக்கு. எத்தன தடவ இந்த படத்த பாத்தாலும் நமக்கு சலிக்காத ஒரு படம். இந்த மாதிரி அருமையான படம் எடுத்த இயக்குனர் சுதா கொங்கராவுக்கு Suryan FM-ன் Salute.