Cinema News Specials Stories

விஜய் சேதுபதியின் அண்ணாத்தே !!!

இயக்குனர் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் துக்ளக் தர்பார். இப்படத்தை குறித்த எதிர்பார்ப்பை அண்ணாத்தே சேதி அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது …

இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 96 திரைப்படத்திற்கு இசை அமைத்த கோவிந்து வசந்தா அவர்களே துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார். இப்படத்தை குறித்த அப்டேட்டுக்காக காத்திருந்த விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இந்த அப்டேட் ஒரு சிறப்பு விருந்தாகவே அமைந்திருக்கிறது.

இப்படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்த பாடல் குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்பாடலுக்கு “அண்ணாத்தே சேதி” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் வெளியான சில நிமிடங்களிலேயே #அண்ணாத்தேசேதி எனும் டாக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது. இப்பாடல் வரும் திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விஜய்சேதுபதி வல்லவர். அந்த வகையில் இப்படமும் ஒரு மாறுபட்ட பரிமாணத்தில் அமைந்திருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பிரத்தியேக ஸ்டில்களும் இணையத்தில் வெளியிடப்பட்டு டிரெண்ட் ஆகி வருகின்றது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கையில் துக்ளக் தர்பார் ஒரு முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாத்தே சேதி பாடலின் அப்டேட் குறித்த ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

Suryan FM Twitter Feed

Suryan Podcast