Specials Stories

2019 ல் சிறந்த 10 இயக்குனர்கள்

Best 10 Directors

2019 ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் தங்களின் சிறந்த இயக்கத்தினால் வெற்றிப்படமாக மட்டுமில்லாமல் மக்களை கவர்ந்தும், ரசிகர்களிடம் வரவேற்பை பெரும் வகையிலும் இயக்கிய சிறந்த 10 இயக்குனர்களை பற்றிய லிஸ்ட் இதோ,

லோகேஷ் கனகராஜ் – கைதி 2019

ஆக்ஸன் – த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டு 2019 ம் ஆண்டில் அனைவராலும் வரவேற்கப்பட்ட வெற்றி திரைப்படம் கைதி. 2017ல் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இன்று தனது மூன்றாவது படத்தை தளபதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்று உள்ளார்.

ஒரு நாள் இரவில் காவல்துறைக்கும் போதை கடத்தல் கும்பலுக்கும் இடையே நடப்பதை கதைக்களமாக கொண்டது கைதி. சம்பந்தமே இல்லாத ஒருவர் வந்து அனைவரையும் துவம்சம் செய்வதும் இறுதியில் சம்பந்தம் உள்ளது என்ற இரண்டாம் பாகத்தின் அறிகுறியோடு முடித்து இருப்பது படத்தின் வெற்றிக்கு சாதமாக அமைந்துள்ளது.

அட்லீ – பிகில்

அட்லீ – தளபதி விஜய் கூட்டணியில் வந்த மூன்றாவது படம் பிகில். தீபாவளி விருந்தாக திரைக்கு வந்து 2019ம் ஆண்டின் வசூலில் முதல் இடம் பிடித்து இருப்பதே இந்த படத்தின் வெற்றியை குறிக்கின்றது.

பெண்கள் கால்பந்தாட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் பிகில். கால்பந்தாட்ட பயிற்சியாளராக தனது மேம்பட்ட நடிப்பை வெறித்தனமாக வெளிப்படுத்தி இருந்தார் தளபதி விஜய்.

வெற்றிமாறன் – அசுரன்

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வந்த நான்காவது திரைப்படம் அசுரன். சாதி வேறுபாடுகளின் மூலம் நடைபெறும் பழிவாங்கல்களை திரையில் சொன்ன படம். பூமணி அவர்களின் ‘வெக்கை’ என்ற நாவலின் கதையை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறனால் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இந்த ஆண்டில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

G.V. பிரகாஷின் பின்னணி இசை இத்திரைப்படத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டது. தனக்கென தனி பாணியில் திரைப்படம் எடுப்பதில் வல்லவரான வெற்றிமாறனுக்கு அசுரத்தனமான வெற்றி பெற்று தந்தது அசுரன்.

ரா. பார்த்திபன் – ஒத்த செருப்பு – சைஸ் 7

படம் முழுவதும் ஒருவரை வைத்தே எடுக்க முடியுமா? இது சாத்தியமா? என்ற பல கேள்விகளுக்கு தன்னுடைய ஒத்த செருப்பு – சைஸ் 7 படத்தின் மூலம் பதில் சொல்லி உள்ளார் ரா. பார்த்திபன்.

தமிழ் சினிமாவில் என்றுமே தனக்கென வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் ரசிகர்களை கவரும் ரா. பார்த்திபன் இந்த திரைப்படத்திலும் ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் – கோமாளி 2019

ஒட்டு மொத்தமாக 90’ஸ் கிட்ஸ் ஏற்படும் தலைமுறையினரை கவரும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம் கோமாளி. தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே பிரதீப் ரங்கநாதன் வெற்றி பட இயக்குனர் என்ற முத்திரை படைத்தது விட்டார்.

கோமாவிற்கு சென்ற கதாநாயகன் வளர்ந்து விட்ட நாகரிகத்தை கண்டும், தன்னுடைய பள்ளி பருவ நினைவுகளை கொண்டும் வாழ்க்கையை பார்ப்பதுமாக அமைந்த திரைப்படம் கோமாளி. அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டு 2019 ம் ஆண்டின் வெற்றி படமாக அமைந்தது.

H. வினோத் – நேர்கொண்ட பார்வை

ஹிந்தியில் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படத்தின் மறுஆக்கமாக தமிழில் எடுக்கப்பட்ட படம் நேர்கொண்ட பார்வை. தல அஜித்தின் நிதானமான நடிப்பில் H. வினோத்தின் திறமையான இயக்கத்தால் இந்த திரைப்படம் 2019 ம் ஆண்டில் வெற்றி படமாக அமைந்தது.

வேறு மொழியில் ஹிட் அடித்த படத்தை, அதன் உண்மைதன்மை மாறாமல் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் இயக்கியதில் தந்து வெற்றி முத்திரையை பதித்துள்ளார் H. வினோத்.

தியாகராஜன் குமாரராஜா – சூப்பர் டீலக்ஸ்

2011 ம் ஆண்டு ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய இயக்குனர் பயணத்தை தொடர்ந்தார் தியாகராஜன் குமாரராஜா. 8 வருட இடைவெளிக்கு பிறகு அவர் எடுத்த இரண்டாவது திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

2019 ம் ஆண்டின் மிக சிறந்த படமாக, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்ட திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். வித்தியசமான கதையம்சத்தை உருவாக்கி இயக்கியதற்காக தியாகராஜன் குமாரராஜா அனைத்து தரப்பிலும் பாராட்டுகளை பெற்றார்.

மகிழ் திருமேனி – தடம்

மகிழ் திருமேனி – அருண் விஜய் கூட்டணியில் அமைந்த இரண்டாவது திரைப்படம் தடம். தடையற தாக்க திரைப்படத்திற்கு பிறகு இணைந்த இந்த கூட்டணி மீது இருந்த எதிர்பார்ப்பை வெற்றியாக பூர்த்தி செய்தது தடம் திரைப்படம்.

இரட்டை வேடத்தில் தோன்றிய அருண் விஜயின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. திரில்லர் சஸ்பென்ஸ் கதையம்சத்துடன் உருவான தடம் திரைப்படம் 2019 ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுள் ஒன்றாக வெற்றி பெற்றது.

P.S. மித்ரன் – ஹீரோ 2019

2018 ம் ஆண்டில் இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான P.S. மித்ரன் 2019ல் எடுத்த திரைப்படம் ஹீரோ. சிவகார்த்திகேயன் மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவாகி டிசம்பர் இறுதியில் வெளிவந்து பல ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ஹீரோ.

கல்விக்கும், கல்வி கற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடும் சூப்பர் ஹீரோ. இயக்குனரின் பார்வை மற்றும் இயக்கம் சாமானிய மக்களின் பிரதிபலிப்பாக அமைந்தது மக்களிடம் வரவேற்பை பெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் – பேட்ட 2019

சூப்பர் ஸ்டாரின் வெறித்தனமான ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய படம் பேட்ட. பொங்கல் விருந்தாக 2019 ம் ஆண்டின் மிக சிறந்த எண்டெர்டைன்மென்ட் திரைப்படமாக இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

பழிவாங்கல் கதையை அடிப்படையாக கொண்டிருந்தாலும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் மற்றும் ஆக்சன் கலந்து எடுக்கப்பட்டது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் இயக்கி 2019ம் ஆண்டின் வெற்றி படமாக மாற்றினார் கார்த்திக் சுப்புராஜ்.