2019-ஆம் ஆண்டு பல படங்கள் வெளிவந்தன. பல கதாநாயகிகளும் பல்வேறு கதாபாத்திரங்களில் வலம் வந்தனர். அவற்றுள் பத்து சிறந்த 2019-ன் கதாநாயகிகளை பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.
சமந்தா (சூப்பர் டீலக்ஸ் 2019 )
வித்யாசமான கதாபாத்திரங்களை இன்றைய தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். ஆனால் அந்த கதாபாத்திரங்களை மக்கள் மனதில் பதிய வைப்பவர்கள் சிலரே.
அவ்வகையில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா ஏற்று நடித்த வேம்பு கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் பதியும் கதாபாத்திரமாக மாறியது. முன்னணி கதாநாயகிகள் இதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கே தனி துணிச்சல் வேண்டும்.
அமலா பால் (ஆடை 2019)
ஆடை திரைப்படத்தில் அமலா பால் நடித்த காமினி (எ) சுதந்திரக்கொடி கதாபாத்திரம் அவரின் துணிச்சலை வெளிப்படுத்தியதோடு சேர்த்து நடிப்புத்துறையின் மேல் அவருக்கு இருந்த ஆழ்ந்த பசியை போக்கும் வகையிலும் அமைந்தது.
இப்படத்தில் பெரும்பாலான காட்சியில் உடையில்லாமல் தன மானம் காக்க போராடும் பெண்ணாக நடித்திருப்பார். பல தடைகளை தாண்டி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும் பாராட்டும் சிறப்பாக இருந்தது.
ஷ்ரதா ஸ்ரீநாத் (நேர் கொண்ட பார்வை 2019)
‘யாஞ்சி பொண்ணு‘ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஷ்ரதா ஸ்ரீநாத், தல அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தில் மீரா கிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை மையமாக வைத்து அமைந்த படம் தான் இது. தற்காப்புக்காக ஒரு பெண் செய்த தாக்குதல் குற்றமில்லை என நீதிமன்றத்தில் நிரூபிக்கும் பெண்ணாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்திருப்பார்.
அவரது தத்ரூபமான நடிப்பு பார்ப்போரை கலங்க வைக்கும்படி அமைந்திருக்கும். முக்கியமாக நீதிமன்றத்தில் நடக்கும் காட்சிகளில் நன்றாக நடித்திருப்பார்.
மஞ்சு வாரியர் (அசுரன்)
மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமான முதல் படம் அசுரன். இரு மகன்களுக்கு தாயாக இப்படத்தில் இவர் நடித்திருப்பார்.
இவர் நடித்த பச்சையம்மாள் எனும் கதாபாத்திரம் ஒரு மகனை இழந்து மற்றொரு மகனையும் இழக்காமல் காப்பாற்ற துடிக்கும் தாயின் தத்தளிப்பை தத்ரூபமாக வெளிக்காட்டும் கதாபாத்திரமாய் அமைந்தது.
நயன்தாரா (ஐரா)
ஒரு நடிகை இரட்டை வேடத்தில் நடிப்பது என்பது தமிழ் சினிமாவில் அரிதான ஒரு விஷயம். இந்நிலையில் இந்த வருடம் வெளியான ஐரா திரைப்படத்தில் பவானி, யமுனா என இரு வித்யாசமான கதாபாத்திரங்களில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து அசத்தியிருப்பார்.
அறிமுக இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதால் தான் நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடுகின்றனர்.
வசுந்தரா கஷ்யாப் (பக்ரீத்)
எளிமையான எதார்த்தமான கதாபாத்திரங்களை மக்கள் ஒரு போதும் வரவேற்க தவறியதில்லை. அந்த வகையில் ஏழை விவசாயியின் மனைவி கீதாவாக நடித்த வசுந்தரா கஷ்யாப் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துள்ளார்.
எளிமை கதாபாத்திரம் என்பது எந்த ஒரு நடிகைக்கும் எளிதாக வந்து விடாது. ஆனால் இப்படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார் வசுந்தரா.
டாப்ஸீ (கேம் ஓவர்)
திரில்லர் படங்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் வேலையில் அதில் நடிக்கும் கதாநாயகிகளின் முக்கியத்துவமும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கேம் ஓவர் படத்தில் டாப்ஸீயின் கதாபாத்திரம் பலரால் பேசப்பட்ட கதாபாத்திரமாக இருக்கிறது.
இப்படத்தில் தனக்குரிய தனித்துவமான நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பார் டாப்ஸீ.
ஸ்வேதா த்ரிபாதி (மெஹந்தி சர்க்கஸ்)
இந்த வருடத்தின் அழகான காதல் காவியம் என்றே மெஹந்தி சர்க்கஸ் படத்தை கூறலாம். இந்த படத்தில் வடநாட்டு சர்க்கஸ் பெண்ணாக ஸ்வேதா த்ரிபாதி வலம் வந்திருப்பார்.
இளைஞர்கள் மனதை கொள்ளையடிக்கும் அழகியாய் அழகாய் நடித்திருப்பார். இளம் வயது தோற்றத்திலும் சரி வயதான தோற்றத்திலும் சரி இரண்டையும் அழகாய் நடித்திருப்பார்.
கேத்தரின் தெரசா (அருவம்)
அருவம் திரைப்படத்தில் வாசனைகளை உணர முடியாத பெண்ணாக கேத்தரின் தெரசா நடித்திருப்பார். ஒரு மாறுபட்ட கதாபாத்திரம் மூலம் தன தனித்துவமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.
Horror படமாக அமைந்த அருவம் திரைப்படம் நல்ல கருத்தை கூறும் படமாகவும் அமைந்தது குறிப்பிடித்தக்கது.
பிரியா ஆனந்த் (எல்.கே.ஜி)
அரசியல் ஐடியாக்கள் கொடுக்கும் பெண்ணாக எல்.கே.ஜி படத்தில் வலம் வரும் பிரியா ஆனந்த் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.
அதிகமாக நடிக்காமல் கதைக்கேற்ப தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். துணிச்சலான அறிவாளி பெண்ணாக பிரியா ஆனந்த் இப்படம் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.