Specials Stories

நாம் கடைபிடிக்க வேண்டிய விதிகளை மறக்கிறோமா? மறுக்கிறோமா?

சோம்பேறித்தனம், இது நமக்கு ஆகாது, இது நமக்கு வேண்டாம்-ன்ற எண்ணங்கள் நமக்குள்ள எப்படி விதைக்கப்படுது? அடிப்படையான விஷயம்தான் ஆனா அதை நாம காலப்போக்குல இப்போல்லாம் செய்றதில்ல.

முதல் விஷயம் Sorry & Thanks இதை நம்ம சொல்றது இல்ல! முன்னலாம் யாராவது வயசானவங்க முடியாம Queue-ல நின்னாலோ, இல்ல Bus-ல நின்னாலோ அவங்களுக்கு வழிவிட்டு நீங்க முன்னாடி போங்கனு அவங்களுக்கு உதவி பண்ணுவோம். எவ்வளவு நேரம் உங்களால நிக்க முடியும், நீங்க என்னோட இடத்துல உட்காருங்கனு இடம் கொடுப்போம்.

யாராவது தெறியாம மிதிச்சிட்டா, அவசரத்துல எதாவது அவங்க மேல மோதிட்டாலோ Sorry-னு சொல்லுவோம். ஆனா இப்போலாம் நமக்கு ஒருத்தவங்க மிகப்பெரிய Help பண்ணா கூட Thanks, நன்றி எதுவும் நம்ம வாயிலேயே வரது இல்ல. என்ன ஆச்சு நமக்கு? தப்பு பண்ணா கூட Sorry சொல்றது  இல்ல.

அடுத்து ROAD SAFETY & TRAFFIC RULES

ரொம்ப வேகமா ஓடிக்கிட்டு இருக்க நம்ம வாழ்க்கைல கொஞ்சம் நிதானமா நின்னு யோசிக்க வேண்டிய விஷயத்த தான் நீங்க இந்த வீடியோ-ல பாக்க போறீங்க. வண்டிய  எடுத்தா SPEED LIMIT-லாம் கிடையாது. அடிச்சு வேகமா வண்டிய ஓட்டுறது, அப்றம் எங்கயாவது கீழ விழுந்து அப்டி இப்டி போறது என்ன இதெல்லாம்? TIME-க்கு PUNCTUAL-அ  போகனும்னா சீக்கிரம் கிளம்புங்க, கடைசி நேரத்துல கெளம்பிட்டு அடிச்சிபுடிச்சி ஓட  வேண்டியது. ஏன்? எதுக்கு?

இங்க பக்கத்துலதான் போறேனு HELMET கூட போடாம போறது, 3 பேரு 4 பேரு ஒரே வண்டில வேகமா போறது. SIGNAL-அ மதிக்கிறது இல்ல, அதை ஒரு பெருமையா நினைச்சுக்குற ஒரு கூட்டம். SILENCER SOUND-அ சத்தமா வைக்குறது, HORN அடிச்சிகிட்டே இருக்குறது. ONE WAY ROAD-ல WANTED-அ OPPOSITE-ல போறது.

அப்றம் ஒரு நாள் வாழ்க்கைல ஒரு  அடி வாங்குனதுக்கு அப்றம், எல்லாம் பட்டதுக்கு அப்றம் தான், இதெல்லாம் வேணாம் நம்ம பொறுமையா RULES  & REGULATIONS-அ  மதிச்சு போவோம்னு திருந்துறோம். ரோடு நமக்கு மட்டுமில்ல, நம்மள மாதிரி பல கோடி பேரு USE பண்றாங்க. SIGNAL-ஐ  நின்னு மதிப்போம், SPEEDLIMIT-க்கு ஏத்த மாதிரி வண்டிய ஓட்டுவோம், HELMET கட்டாயம் அணிவோம், சாலை  விதிகளை  மதிப்போம். நம்மளையும் நம்மள சுத்தி இருக்குறவங்களுக்கும் நல்லது செய்யனும்னு நினைச்சீங்கனா TRAFFIC  & ROAD  SAFETY  MEASURES-அ FOLLOW  பண்ணுங்க.

அடுத்து FESTIVAL & FUNCTIONக்கு செய்யுற அலப்பறைகள்

LOUD SPEAKER-ல பாட்டு போட்டு 10 ஊருக்கு கேக்குறமாதிரி SOUND வச்சி அக்கம்பக்கம் இருக்குறவங்கள அல்லோல படவைக்குறது. ரோட்ல மிகப் பெரிய BANNERS வச்சி  TRAFFIC பண்றது. உங்க வீட்டுல ஒரு சந்தோஷமான விஷயம் நடக்குதுனா அடுத்தவங்க என்னைக்கும் அதனால கஷ்டப்படக் கூடாது. நம்ம வாழ்க்கையே அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் நம்ம சந்தோஷமா வாழ்ந்துட்டு போறதுதான்.

இப்போ சொல்லப்போறது மிகப் பெரிய பிரச்சனை

குப்பைகள்… எங்க போனாலும் குப்பையை குப்பை தொட்டிகளில் போடுறமா? அடுத்தவங்க வீடு ,BUS, BEACH, PARK, THEATRE-னு எல்லா இடத்துலயும் குப்பைகள அப்படியே போடுறோம்.

BEACH-ல WEEKEND-ல போடுற குப்பைகள் இருக்கே அதை சரிபண்ணவே WEEKDAYS-ல 2 நாள் வேணும்னு சொல்றாங்க. ஒரு  SELF DISCIPLINE இருக்கா நமக்கு? வீட்டுலையும் சரி வெளிய எங்க போனாலும் சரி, குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போடுவோம். அடுத்த தலைமுறைக்கும் அதை சொல்லிக் கொடுப்போம்.

இது எங்களுக்கு தோன்றிய சில விஷயங்கள் தான் இது மாதிரி உங்களுக்கும் ஏதாச்சும் தோனுச்சுனா COMMENT-ல் சொல்லுங்க!

Article By Tamilnada Ramesh