Cinema News Specials Stories

தனது குரலால் நம்மிடையே நிலைத்திருக்கும் பாம்பா பாக்யா!

4 வருசத்துக்கு முன்னாடி Youngsters மனச கொள்ளையடிச்ச ஒரு ஆல்பம் பாடல் “Raati”. எல்லாரோட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-லயும் அதிகம் பகிரப்பட்ட இந்த பாட்ட பாடுனது பாம்பா பாக்யா அவர்கள்.

இவருடைய பேரு பாக்கியராஜ், இவருக்கு ஏன் பாம்பா பாக்யா அப்டின்ற பேரு வந்துச்சுனா, 2.O படத்துல பாட்டு பாட சொல்லும் போது இசை புயல் A.R.ரகுமான் அவர்கள் South African Singer பாம்பா மாதிரி இவர பாட சொன்னாரு. அதுக்கப்பறம் இதுவே இவரோட பேரா மாறிடுச்சு. இதுல நெறய பேருக்கு தெரியாத விஷயம் என்னன்னா ராவணன் படத்துல வர கெடா கெடா கறி பாட்டுலயும் இவரு பாடிருக்காரு.

இவருடைய அற்புதமான குரல்ல மயங்கின மக்கள் இவர கொண்டாட ஆரம்பிச்சாங்க. அது மூலமா தமிழ்த் திரை உலகில் தன்னோட கால் தடத்த பதிச்சாரு பாம்பா பாக்யா. தமிழ் திரையுலகுல அறிமுகமான இவரு குறுகிய காலத்திலேயே ஒரு சில பாடல் மூலமா எல்லாருக்கும் ரொம்ப ஃபேவரட்டான பாடகரா மாறினார்.

குறிப்பா சொல்லனும்னா பிகில் படத்துல A.R.ரகுமான் மியூசிக்ல இவர் பாடுன சிம்டாங்காரன் பாட்டு, 2.O படத்துல பாடுன புள்ளினங்கால் பாட்டு, இப்போ ரீசண்டா ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் படத்துல பொன்னி நதி பாட்டுன்னு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த பாடல்கள பாடி இருக்காரு பாம்பா பாக்யா.

Image

இவரோட அற்புதமான குரல் வளத்தை பார்த்து, வரக்கூடிய காலங்கள்ல தமிழ் சினிமால தனித்துவமா தெரிய போற ஒரு குரல் அப்படின்னு எல்லாரும் இவரை பாராட்ட ஆரம்பிச்சாங்க. ஆனா யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீர்னு வந்த அவருடைய மரணம் அவருடைய குடும்பத்தை மட்டும் இல்ல, ஒட்டுமொத்த தமிழ் திரை உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருச்சு.

இப்போ இவர் நம்ம கூட இல்லனாலும், இவருடைய குரல் இவருடைய பாடல் மூலமா இன்னும் பல 100 வருஷத்துக்கு இந்த பூமியில் நிலைத்திருப்பார் அப்படிங்கறதுல எந்த சந்தேகமும் இல்லை.

Article by RJ Suba