Specials Stories

இது மூடநம்பிக்கை இல்ல அறிவியல்!

நம்ம எவ்வளவோ விஷயங்கள, மூட நம்பிக்கைப்பா இது… அப்படின்னு சொல்லிருப்போம். ஆனா அது மூட நம்பிக்கை இல்ல அதுக்கு பின்னாடி ஒரு பெரிய அறிவியலே இருக்குன்னு சொன்னா எவ்வளவு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒரு விஷயத்ததான் இப்ப நாம பாக்க போறோம்.

நம்ம பழைய சாமி படங்கள்ல கவனிச்சிங்கன்னா Climax Scene-ல ஹீரோக்கு உடம்பு சரி இல்லாமா எந்திரிக்க முடியாத அளவுக்கு போயிடும். அந்த Hero சாவ கூடாதுங்கறதுக்காக Heroine சாமி முன்னாடி பாட்டு பாடுவாங்க, கடைசில அந்த ஹீரோவும் உயிர் பொழச்சிடுவாங்க.

அதெப்படி சாத்தியமாகும்? கேக்கவே சிரிப்பா இருக்குல, ஏன் நிறைய பேர் யாகம் பண்ணுவாங்க, அதிக பிராத்தனைகள் நடக்கும், இதோட முடிவுல அவங்க அந்த நோய்ல இருந்து தப்பிச்சுடுவாங்க. இதெல்லாம் உண்மையா அப்படின்னா? கண்டிப்பா உண்மைதான்.

நம்மளுடைய உடல்நிலையோ, மனநிலையோ சரி இல்லைன்னா ஒரு பாட்டு கேக்கனும்னு தோணும், அந்த பாட்ட கேட்ட உடனே அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரியான மன நிலைக்கு நம்மளும் மாறிடுவோம். இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு கவனிச்சிங்களா? இதுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய விஞ்ஞானம் இருக்குனு தெரியுமா?

2010, Mexico வளைகுடாவில் நடந்த எண்ணெய் விபத்துல பில்லியன் கணக்கான லிட்டர் Oil கடல்ல கலந்துடுச்சு. அதை எப்படி சுத்தப்படுத்தலாம்னு யோசிக்கிறப்போ, ஜான் ஹட்ச்ஹின்சன் என்ற மின் காந்த ஆற்றல் நிபுணர் 528Hz கொண்ட இசையின் மூலமா அந்த மொத்த கடல்ல கலந்த எண்ணெயையும் 4 மணி நேரத்துல சுத்தப்படுத்துனதா சொன்னாங்க.

இதுல என்ன முக்கியமான விஷயம் அப்படின்னா, அந்த 528Hz க்கு அவ்வளவு Power இருக்குன்னு சொல்லலாம். 528Hz க்கு நம்ம உடல்ல இருக்குற DNA வை சரிசெய்யக்கூடிய சக்தி இருக்குன்னு சொல்றாங்க. 528Hz அப்படிங்குறது தியானத்திற்கான ஒலி அதிர்வு-னு சொல்றாங்க.

HAPPY BRITHDAY SAMANTHA

தெலுங்கு தமிழ்னு தன்னோட நடிப்பு திறமைய இயல்பா வெளிப்படுத்தி வருஷா வருஷம் படம் ரிலீஸ் ஆனாலும், முதல் படத்துல பார்த்த அதே அழகு, பொலிவோடு இருக்குறதுல இவங்க நிஜமாவே அழகான ஹீரோயின். காதல் படம் எடுக்குறதுக்காகவே படைக்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனனோட படங்கள்ல நடிச்சு, லவ்னா என்னனு ஐடியா இல்லாதவங்களுக்கு கூட லவ் பண்ணா இப்டி தான் பண்ணனும்னு பாக்குறவங்கள அசர வச்சிருக்காங்க. இவர் நடிச்ச தெலுங்கு படங்களுக்கு Famous Singer சின்மயி டப்பிங் பண்ணாதல Perfect…

Continue reading

‘பொன்னியின் செல்வன் – 2’ எனும் வரலாற்று காவியம்

எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே கல்கி எழுதிய பொன்னியன் செல்வன் கதைய படமா எடுக்கணும்னு பல முயற்சிகள் நடந்துது. அப்படி பல வருஷம் போராட்டத்துக்கு அப்புறம் இறுதியா நம்ப எல்லாரோட மனம் கவர்ந்த இயக்குனர்கள்ல ஒருத்தரான மணிரத்னம் இயக்கத்துல பொன்னியின் செல்வன் படம் நம்ப கண்களுக்கு விருந்தா அமைஞ்சது. ஆரம்பத்துல படத்தோட அறிவிப்பே பெரிய அளவுக்கு எதிர்பார்ப்ப ஏற்படுத்துச்சு. பொன்னியின் செல்வன் நாவல பொறுத்த வரைக்கும் முழுக்க முழுக்க வரலாறை மட்டுமே கொண்ட ஒரு நூல் இல்ல. கல்கி…

Continue reading

ராதாயணம்

எண்பதுகளின் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர் ராதா. பாரதிராஜாவின் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான ’அலைகள் ஓய்வதில்லை’ படத்தில், மேரியாக வந்து ரசிகர்களை கொள்ளை கொண்டவர். பிரபல நடிகை அம்பிகாவின் தங்கை என்ற அடையாளத்தோடு திரைத்துறையில் அடியெடுத்து வைத்த ராதா, ஒரு சில ஆண்டுகளிலேயே தனக்கென தனி அடையாளத்தை வென்று முன்னணி நடிகைகள் பட்டியலில் சேர்ந்து அசத்தினார். பாரதிராஜாவின் படங்களில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகளின் இன்சண்ட் குணங்கள் ரொம்பவே ஈர்க்கும். முதல் படம் என்பதால்…

Continue reading

சச்சின் டெண்டுல்கர்

சதமடித்து சாதனை படைத்த சச்சின் அவர்களை பற்றி நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல விஷயங்கள் இருப்பினும் ரசிக்கும் ரசிகனின் முதல் காதலாய் அன்றிலிருந்து இன்று வரை அசைக்கமுடியாத ரசிக பட்டாளத்தை கொண்டவர் தான் சச்சின் அவர்கள். கிரிக்கெட் என்று சொன்னவுடன் முதலில் நியாபகம் வருவது என்றால் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் தான். சச்சின் டெண்டுல்கர் 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ரமேஷ் மற்றும் தாய் பெயர்…

Continue reading

தலைவர் 171 “கூலி”க்குள் இருக்கும் Nostalgic Reference என்னனு தெரியுமா?!

சன் Pictures தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர். ஏனென்றால் தன்னுடைய Cinematic Universe-ல் கமல், விஜய், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களை முந்தைய படங்களின் மூலம் இணைத்துள்ள லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படமும் மூலம் சூப்பர் ஸ்டாரையும் LCU-ல் இணைப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் ’தலைவர் 171’ LCU-ல் இல்லை தனி திரைப்படம் என்று லோகேஷ்…

Continue reading

இது மாதிரியான ஒலி அதிர்வுகள் நம்முடைய உடம்ப சரி செய்யுது அப்படினும், இதனாலதான் தியானம் பண்ணுறவங்க உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னும் சொல்றாங்க. நீங்க கோவில்ல பஜனை பாடுறதெல்லாம் கேட்டிருப்பீங்க… அதெல்லாம் 432Hz-ல இருக்கும்.

இது நம்மல இந்த உலகத்தோட இயற்கையோட இணைக்கும். இது நம்மளுடைய மனச தூய்மைப்படுத்தும்னு சொல்றாங்க. நம்ம தியானம் பண்ணும்போது கவனிச்சிங்கன்னா Aum, Ham, Om அப்படிங்குற வார்த்தைகளெல்லாம் இந்த ஒலி அதிர்வுலதான் இருக்கும்.

இன்னைக்கும் நிறைய வீட்டுல சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்ற பாட்டை போட்டு கேக்குறதால நம்முடைய உடம்பு சுருசுருப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்குதாம். இந்த மாதிரியான பல விஷயங்கள மூடநம்பிக்கைகளா இருக்கும் அப்படிங்குறத தாண்டி அதுக்குப்பின்னாடி என்ன அறிவியல் இருக்கும்னு கண்டிப்பா யோசிக்கனும். இந்த மாதிரி உங்களுக்கு எதாவது விஷயங்கள் தெரிஞ்சா கமெண்ட் பண்னுங்க.

Article By Smily Vijay

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.