துல்கர் சல்மான் என்றாலே, கண்ணிப் பெண்களின் கனவுக் கண்ணன், cutie pie, சாக்லேட் boy, அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த கள்வர் என்று கண்முன் நிற்பார்.
கொச்சியில் பிறந்த துல்கர் சல்மான் Business Management படித்தார்.தனக்கு ஒரு நல்ல வேலை துபாயில் கிடைத்திருந்தாலும் அதில் போதிய சந்தோஷம் கிடைக்காத காரணத்தால் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்த துல்கர் சல்மானுக்கு நடிப்பின் மேல் ஆர்வம் ஏற்பட்டது. தனது சினிமா பயணத்தை மும்பையிலுள்ள பேரி ஜான் Acting ஸ்டுடியோவில் நடிப்பு கற்றுக்கொண்டு ஆரம்பித்தார்.
கேரளத்து சாக்லேட் பாய் துல்கர் சல்மான், வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார். ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய தோற்றத்தை வித்தியாசமாகவே காண்பிக்க முயற்சி செய்கிறார். உதாரணத்திற்கு சார்லி படத்தில் எதார்த்தமான தோற்றத்தையும், ஓகே கண்மணி படத்தில் Smart ஆன இளைஞர் போன்ற தோற்றத்தையும் அளிக்கிறார்.
தான் தேர்வு செய்யும் படங்கள் அனைத்திலும் Peppy ஆன Character ஆகவே காட்சியளிக்கும் துல்கர் சல்மான், படங்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டபோது, ஒரு புத்தகத்தை படித்தால் அது நல்ல புத்தகமா இல்லையா என்று கூறிவிடலாம், ஒரு பாட்டை கேட்கும்போது நல்ல பாட்டா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம், அதே மாதிரிதான் ஒரு கதையை என்னிடம் சொல்லும் பொழுது அது நல்ல கதையா இல்லையா என்று தெரிந்து விடுகிறது என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், தோற்றத்தில் அதிக கவனம் காட்டுவதற்கு காரணம் அந்த கேரக்டருக்கு ஏற்ற மாதிரி லுக் இருந்தால் தான் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வர் என்றார். மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் நடித்தபோது தன்னை கேமரா தான் அழகாக காட்டியுள்ளது என்று கூறியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை யார் எடுத்து இருந்தாலும் பெண்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்றும் கருத்து கூறியிருக்கிறார்.
- Parvathy Stuns in New Photoshoot: A Look at the Indian Actress’s Beauty
- Happy Birthday to the Master of Realism: Vetrimaaran
- Bollywood actress Deepika Padukone baby bump pregnancy photoshoot
- இசைஞானியின் இசை வாரிசு!
- வித்தியாசமான த்ரில்லர் கதை “பிளாக்”
மகாநதி படத்தில் ஜெமினி கணேசன் கதாப்பாத்திரத்தை எடுத்து அற்புதமாக நடித்த துல்கர் சல்மானுக்கு நாடு தோறும் பாராட்டுகள் குவிந்தன. இயல்பாகவும், அற்புதமாகவும் நடித்துள்ளார் என்று பல்வேறு நடிகர்கள் தங்களது கருத்துக்களையும் எடுத்து வைத்தனர்.
2020-இல் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படம் Lock Down-ல் அதிக மக்கள் விரும்பிப் பார்த்த படம். தனது Charming ஆன நடிப்பு மூலமாக அனைவரையும் கவர்ந்தார். அனைவரையும் இயல்பாக கவரும் திறன் கொண்ட துல்கர் சல்மானுக்கு ஜூலை 28 ஆம் தேதியான இன்று பிறந்தநாள். துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.