நடிகை ஜெனிலியா தனது 33 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ஜெனிலியா நடித்துள்ளார்.
2003-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான துஜே மேரி கஸம் எனும் படம் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஜெனிலியா தொடங்கினார். அதன்பின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழில் ஜெனிலியா அறிமுகமானார். இப்படத்தில் அவர் ஏற்று நடித்த ஹரிணி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன்பின் தெலுங்கில் சுமன் நடிப்பில் வெளிவந்த சத்யம் திரைப்படத்தில் ஜெனிலியா கதாநாயகியாக நடித்தார்.

தன் திரையுலக வாழ்க்கையில் முதல் மூன்று படங்களில் மூன்று வித்தியாசமான மொழிகளில் ஜெனிலியா நடித்தார். இந்த மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு ஜெனிலியா முதன்முதலில் தளபதி விஜயுடன் இணைந்து சச்சின் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் இவரது ஷாலினி கதாபாத்திரம் ஒரு வெற்றி கதாபாத்திரமாய் அமைந்தது. தளபதி விஜயுடன் வேலாயுதம் திரைப்படத்தில் மீண்டுமொருமுறை ஜெனிலியா இணைந்து நடித்தார்.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த நா இஷ்டம் எனும் தெலுங்கு படம் தான் ஜெனிலியா கதாநாயகியாக நடித்து வெளிவந்த கடைசி திரைப்படம். அதன்பின் ஜெய்ஹோ, லை பாரி போன்ற படங்களில் கௌரவ தோற்றத்தில் ஜெனிலியா நடித்தார்.

ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கையின் திருப்பு முனையான படமாக அமைந்தது. இப்படத்தில் அவரது ஹாசினி கதாபாத்திரம் படம் பார்க்கும் அனைவரையும் கவர்ந்தது. இப்படம் மூலம் ஜெனிலியா தமிழ் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத கதாநாயகியாக இடம் பிடித்தார். ஜெனிலியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
You are my bestest friend, my eternal laughter, my partner in crime, my happiness, my guide, my enthusiasm, my excitement, my light, my life, my everything. Wishing you a very Happy Birthday Baiko – growing young with you is a blessing. @geneliad #HappyBirthdayGenelia pic.twitter.com/nb2C71LBI7
— Riteish Deshmukh (@Riteishd) August 5, 2020
ஜெனிலியா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோள். நடிகை ஜெனிலியாவிற்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.