Cinema News Specials Stories

இசை ராட்சசன்!

கோவை மண்ணுல எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டு ஈவினிங் ஆனா பசங்க கூட விளையாடிட்டு சந்தோஷமா இருந்த ஒரு குட்டி பையன் வாழ்க்கையில திடீர்னு ஒரு விஷயம் நடக்குது.

ஒரு நாள் நைட் அவங்க அப்பா வந்து நம்ம இந்த ஊரை விட்டு போக போறோம். வெளியூர் போக போறோம்னு சொல்றாங்க. பஸ் ஏறும் போது இனிமே இந்த ஊருக்கு வரவே மாட்டோம்-ன்னு சொல்றாங்க. அப்ப அந்த குட்டி பையனோட எண்ணம் எல்லாம் என்னவா இருந்துச்சுனா இனிமே என் பிரண்ட்ஸ பார்க்க முடியாதா? நான் படிச்ச ஸ்கூலுக்கு போக முடியாதா? அப்படிங்கிற ஒரு ஏக்கம் அந்த குட்டி பையனுக்குள்ள இருந்துகிட்டே இருந்துச்சு.

அவங்க ஊர விட்டு வந்ததற்கான காரணம் அவங்க அப்பாவுக்கு பிசினஸ்ல ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம். அதெல்லாம் தாண்டி சென்னைக்கு போயி அந்த குட்டி பையனோட படிப்ப மறுபடியும் தொடங்குறாங்க. ஒரு புது இடத்துல ஒரு புது சுற்று வட்டாரத்துல இதையெல்லாம் ஏத்துக்கிறதுக்கே ரொம்ப நாள் ஆகுது. அதுக்கப்புறம் அந்த குட்டி பையனுக்கு வளர வளர அவங்க குடும்ப சூழ்நிலை எல்லாம் புரிய வருது. பார்ட் டைமா நிறைய வேலை பார்க்குறார்.

அப்புறம் அந்த வேலை எல்லாம் சலிச்சு போக அவருக்கு மியூசிக்ல ஏற்பட்ட ஆர்வம் காரணமா மியூசிக் கத்துக்குறார். அப்பவும் குடும்ப சூழ்நிலைய புரிஞ்சு பார்ட் டைமாவும் வேலை பாத்துட்டு தான் இருக்காரு. இவருக்கு மியூசிக் பொருத்தவரைக்கும் யானி தான் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

தமிழ் இசை உலகில் எம் எஸ் வி, இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் இப்படி அடுத்தடுத்து மிகப்பெரிய ஜாம்பவான்கள் போட்டி போட்டுக்கிட்டு இருக்கக் கூடிய இந்த இசை உலகத்துல தானும் சாதிக்க மாட்டேனாங்கிற ஏக்கத்துல பல டிவி விளம்பரங்களுக்கு மியூசிக் போட்டுட்டு தேவாலயத்தில மியூசிக் போட்டுட்டு கோவில் திருவிழாக்களுக்கு மியூசிக் போட்டுட்டு சாமி பாடல்களுக்கு மியூசிக் போட்டுட்டு கட்சி பாடல்களுக்கு மியூசிக் போட்டு இப்படி ஒவ்வொன்னா படிப்படியா செஞ்சு என்னைக்காவது ஒரு நாள் நம்மளும் இந்த இசை உலகில் ஜாம்பவான் ஆகணும், நம்ம பேரும் இந்த ஊரு உலகத்துக்கு தெரியவரும்னு நம்பிக்கைய மட்டும் கைல எடுத்துட்டு அந்த பையன் ஓடிட்டே இருக்காப்ல.

அவரு சினிமாக்கு வரும் போது ஒரு பக்கம் யுவன் சங்கர் ராஜா இன்னொரு பக்கம் அனிருத், இதையும் தாண்டி இளையராஜா, ஏ ஆர் ரகுமான்-னு மிகப்பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கோலோச்சிட்டு நாங்க தான் இங்க எல்லாம் அப்படிங்கிற நிலையில் இருக்கும்போது, நானும் இருக்கேன் இந்த லிஸ்ட்ல-ன்னு கெத்தா வந்து நின்னாரு.

எல்லாரும் ஒரு பாதைல போனப்போ இவரு தனி பாதைல போனாரு. அதுதான் Electronic Music Arrangement. இவரோட மியூசிக்க பொருத்தவரைக்கும் இந்த Electronic Music Arrangement-ல அதிக கவனம் செலுத்தினார். அது இவரோட மியூசிக்ல ஒரு தனித்துவமா தெரிஞ்சுது. பல படங்கள் சொல்லிட்டே போலாம். வாகை சூடவா, பாபநாசம், உத்தமவில்லன், விஸ்வரூபம் இப்படி ஏகப்பட்ட படங்கள் தமிழ் இசை உலகில் மிகப்பெரிய சரித்திரம் படைச்சுது.

ராட்சசன் படத்துல பாட்டு கிடையாது. அவர் போட்ட ஒரு BGM இப்ப வரைக்கும் நின்னு பேசிட்டு இருக்கு. இவரோட பாட்டெல்லாம் கேட்கும் போது எல்லாருக்கும் பீல் ஆகிறது என்னன்னா இது எப்படி இவ்வளவு பர்சனலா கனெக்ட் ஆகுது அப்படின்றதுதான். அதுக்கான காரணம் அவருக்கு பர்சனலா கனெக்ட் ஆனா மட்டும்தான் அவரு எல்லா பாட்டும் போடுறாரு.

அவருக்கு கனெக்ட் ஆகாம அவர் போட்ட பாட்டு வெற்றியடைஞ்சது கிடையாது. அவரோட பாட்டு வெற்றியடையாத காரணம் மத்தவங்களுக்கு தெரியலனாலும் அது எனக்கு தெரியும், அதுக்கான காரணம் இதுதான் அப்படின்றதையும் வெளிப்படையாகவே சொல்லி இருக்காரு. ஆனா கண்டிப்பா இவரும் ஒரு நாள் மிகப்பெரிய ஜாம்பவான இந்த இசை உலகில் நிலை நிறுத்தப்படுவார்-ன்றதுல எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர் தான் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

இன்று பிறந்த நாள் காணும் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துகள்.

Article By RJ JO