Cinema News Specials Stories

‘Fahadh Faasil’ இந்திய சினிமாக்கு கிடைத்த ‘ரத்தினம்’

நம்ம வாழ்க்கைல நம்ம கண்ணு முன்னாடி பெரிய பெரிய தப்பு செஞ்ச யாரையாச்சும் திட்டனும்னா ராட்சசன், அரக்கன், அசுரன்னு சொல்லிதான் திட்டுவோம். ஆனா இப்பலாம் இந்த வார்த்தைகள புகழவும் உபயோகப்படுத்துறோம்.

முக்கியமா சினிமால வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல மிகச் சிறப்பான நடிப்பு வெளிபடுத்துற நடிகர்கள இப்படி தான் இப்பலாம் புகழ்றாங்க. இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்களா நம்ம தமிழ் சினிமால பல நடிகர்கள் இருக்காங்க. ஆனா சமீபகாலமா ஒரு நடிகரோட ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் நடிப்பு ராட்சசன், நடிப்பு அரக்கன், நடிப்பு அசுரன்னு தென்னிந்திய சினிமாவே கொண்டாடுற நடிகர்னா அது ஃபஹத் பாசில் தான்.

Nazriya Nazim

சில வருஷங்கள் முன்னாடி வரை மலையாள சினிமா தவிர்த்து மற்ற தென்னிந்திய மொழி ரசிகர்களுக்கு ஃபஹத் பாசில்னா டைரக்டர் பாசிலோட பையன், மலையாள சினிமா நடிகர் இப்படி தான் பலருக்கும் தெரியும். அதுக்கப்புறம் 90s கிட்ஸ், Early 2k கிட்ஸ் Dream Girl-ஆ இருந்த நடிகை நஸ்ரியாவோட கணவரா தெரியும். அதுவும் இவங்க திருமணத்துக்கு அப்பறம் பல மீம்ஸ், ட்ரால்ஸ் எல்லாம் சமூக வலைதளங்கள்ல பாத்திருப்போம்.

மலையாள சினிமால ஃபஹத் பாசில் நடிச்ச முதல் படமே தோல்விப் படம் தான். அப்ப பல விமர்சனங்கள் வந்ததால திரைத்துறைல இருந்து ப்ரேக் எடுத்தாரு. ஆனா அந்த ப்ரேக் நிரந்தரமானதில்ல, சிக்னல்ல நாம சிவப்பு விளக்கு எரியும் போது போட்ட ப்ரேக் போல தான், எப்படா பச்சை விளக்கு எரியும் Accelerator-அ முறுக்கலாம், பறக்கலாம்னு காத்துட்டு இருக்க மாதிரியான ப்ரேக்.

2009-ல ஃபஹத் பாசில் சினிமா வாழ்க்கைல பச்சை விளக்கு எரிஞ்சுது, அப்ப முறுக்குன Accelerator-அ இப்ப வரை விடல, Highways-ல போற High speed கார் போல Speed Breaker-ம் இல்ல, சிக்கனலும் இல்ல ஃபஹத்தா நினைச்சா Rest எடுக்கலாம். ஆனா அதுவும் Just Tea Time போல மறுபடியும் பயணம் தொடர்ந்துட்டு தான் இருக்கும். தளபதி விஜயோட “வாழ்க்கை ஒரு வட்டம்டா” வசனத்த வாழ்ந்து காட்டிட்டு இருக்காரு ஃபஹத் பாசில்.

தனக்கு வந்த விமர்சனங்கள எல்லாம் விருதுகளா மாத்தினாரு. இதுவரை ஒரு தேசிய விருது, மூணு Film fare விருது, நாலு கேரளா அரசு விருதுனு மொத்தம் 19 விருதுகள் வாங்கி குவிச்சிருக்காரு. இப்படிப்பட்ட ஒரு நடிப்பு ராட்சசன 2017-ல வெளியான வேலைக்காரன் படம் மூலமா தமிழ் சினிமாக்கு அறிமுகப்படுத்தின ஜெயம் ராஜாக்கு ஃபஹத் பாசில் ரசிகர்கள் பெரிய விசிலே போடலாம்.

Fahadh-Faasil

அதிபன் மாதவ்”ன்ற கதாப்பாத்திரத்த பாக்கும் போது நிஜமாவே பெரிய பெரிய கார்பரேட் முதலாளிகள்ல இப்படியும் பலர் இருப்பாங்களானு நம்மல ஆச்சரியப்பட வைக்குற மாதிரி நடிச்சிருப்பாரு. அதுக்கப்பறம் Super Deluxe முகில் கதாப்பாத்திரம் நடிப்ப தாண்டி டைரக்டர் தியாகராஜா எழுதிய வசனங்கள ஃபஹத் சொல்லும் போது ரொம்ப ஆழமா ரசிகர்கள் மனசுல பதிஞ்சுது.

Super Deluxe-அ தொடர்ந்து அடுத்து ஃபஹத் தமிழ்ல என்ன படம் நடிக்க போறாருனு எதிர்பார்ப்பு இருந்த நேரத்துல தான், யாருமே எதிர்பாராத விதமா லாக்டவுன் வந்துச்சு. ஆனா இங்க தான் கதையே மாறுச்சு. தமிழ் சினிமா ரசிகர்கள் மற்ற மொழி படங்கள ரசிக்க ஆரம்பிச்சாங்க. குறிப்பா மலையாள சினிமால, அந்த சமயத்துல துல்கர் சல்மான், ஃபஹத் பாசில் படங்கள் பெரும் வரவேற்ப பெற்றுச்சு.

Fahadh-Faasil

ஃபஹத்தோட கும்பலாங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், அதிரன், ஜோஜி, மாலிக் போன்ற படங்கள தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினாங்க. Lockdown ஃபஹத் பாசில் சினிமா பயணத்துல புது ரசிகர் படைய Unlock பண்ணுச்சு. கொரோனாவால திரைத்துறைல சில சரிவுகள் இருந்தாலும், ஒவ்வொரு மொழில இருந்தும் அடுத்தடுத்து நல்ல நல்ல படங்கள் வெளியாகி மறுபடியும் சினிமா ரசிகர்கள தியேட்டருக்கு வரவச்சுது.

அப்படி 2022-ல வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வசூல் சாதனைய புரிஞ்சுது. விக்ரம் படத்தோட முதல் பாதிய விறுப்பா விறுப்பா கொண்டு போனது லோகேஷ் ஓட திரைக்கதையா இருந்தாலும், ரசிகர்கள கொண்டாட வச்சது “அமர்”ன்ற கதாபாத்திரத்துல நடிச்ச ஃபஹத் பாசில், முக்கியமா இடைவேளைல “அமரும் விக்ரமும்” சந்திக்கிற அந்த சீன் யாராலயும் மறக்க முடியாது. ரெண்டு நடிப்பு அரக்கர்களும் போட்டி போட்டு நடிச்சிட்டு இருப்பாங்க.

Fahadh-Faasil

விக்ரமுக்கு அப்பறம் சமீபத்துல வெளியான “மாமன்னன்” படம் தியேட்டர்ல வந்தப்பவே மிகப்பெரிய வெற்றிய பெற்றுச்சு. ஒரு பக்கம் மாமன்னனா வடிவேலு நடிப்பையும், மறுபக்கம் ஃபஹத் பாசில் ரத்தினவேல்ன்ற கதாபாத்திரமா வாழ்ந்ததையும், இன்னொரு பக்கம் இதுவரை இல்லாத அளவு வித்தியாசமான நடிப்ப வெளிப்படுத்தின உதயநிதி நடிப்பையும் ரசிகர்கள் கொண்டாடினாங்க.

இப்ப OTT-ல மாமன்னன் வெளியான அப்பறம் ஃபஹத் பாசிலுக்கு இன்னும் பல ரசிகர்கள் வந்துட்டாங்க, ஏன்னா ஃபஹத் பாசில் நடிக்கல கதாப்பாத்திரமா வாழ்ந்தாரு. சமூக வலைதளங்கள்ல தமிழ் சினிமா ரசிகர்கள் ஃபஹத்துக்கு மாஸ் வீடியோ எடிட்ஸ் போட்டு கொண்டாடிட்டு இருக்காங்க, பலரும் நேரடி தமிழ் படங்கள்ல நடிக்க சொல்லியும், சிலர் பெரிய பெரிய நடிகர்களுக்கு வில்லனா நடிக்க சொல்லியும் கேக்குறாங்க.

Fahadh-Faasil

ரத்னவேல் கதாபாத்திரத்துக்கு கிடைச்ச இந்த பெரிய வரவேற்ப பாத்துட்டு ஃபஹத் பாசிலே Facebook-ல அவரோட Cover Pic-ல இப்ப மாமன்னன் ரத்னவேல் போட்டோவ வச்சிருக்காரு. இன்னைக்கு தமிழ் ரசிகர்கள் எல்லாம் ரத்தினவேலா ஃபஹத்த கொண்டாடல, மாமன்னனாவோ, அதிவீரனாவோ ஃபஹத் நடிச்சிருந்தாலும் கொண்டாடி இருப்பாங்க, ஏன்னா ஃபஹத்தோட இத்தன வருஷ நடிப்புக்கு கிடைச்ச வெற்றி இது.

ஃபஹத் பாசில் அடுத்தது தமிழ்ல யாரோட இயக்கத்துல, இல்ல எந்த நடிகருக்கு வில்லனா நடிக்கனும்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க. இந்த Aug 8 பிறந்தநாள் கொண்டாடபோற ஃபஹத் பாசில் இன்னும் பல வெற்றிகள இந்திய சினிமால அடைய Suryan Fm-ன் Advance பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ Srini

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.