Specials Stories

சம்பளம் முழுக்க செலவு பண்ணாதிங்க… இத பண்ணுங்க!

வழக்கமா நம்ம வாங்குற சம்பளம் எப்பவுமே பத்தாது, இந்த மாசம் சம்பளம் வாங்குன அந்த வாரமே அடுத்த மாசம் சம்பளம் எப்ப வரும்னு எதிர்பார்ப்போம்.

அந்த அளவுக்கு நம்ம எப்படி செலவு பண்றோம்னே தெரியாம செலவு பண்ணுவோம். ஆனா ஒரு சிலர் ‘அப்படி பாத்தா நான் எல்லாத்தையும் கணக்கு போட்டுதான் செலவு பண்றேன், எப்படி செலவகுதுனு தெரியல’ அப்படின்னு சொல்றாங்க. நான் ஒரு சில Finance Experts கிட்ட கேட்டும், கொஞ்சம் படிச்சும் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன்.

நான் உங்கள EMI வாங்காதீங்க, LOAN வாங்காதீங்க அப்டின்னுலாம் சொல்லல. நம்மளுடைய சம்பளத்த 3 விதமா பிரிச்சு பயன்படுத்தனும், நம்முடைய சம்பளத்துல 10% லிருந்து 20% வரை EMI அல்லது LOAN க்காக பயன்படுத்தலாம். தயவு செஞ்சு அதுக்குமேல EMI அல்லது LOAN வாங்காதீங்க… என்னுடைய அனுபவத்தையும் சேர்த்து சொல்றேன், நம்முடைய, நமது குடும்ப செலவுக்காக 50% லிருந்து 65% வரை செலவு செய்யலாம். மீதி 15% சேமிப்புக்காக பயன்படுத்தலாம்.

The Compound Effect என்ற ஒரு வித்தை உள்ளது, இந்த மாதிரியான சேமிப்பை முதலீடாக மாற்றும்போது ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை நீங்க பாப்பிங்க. Example-க்கு ஒரு விஷயம் சொல்றேன், ஒரே மாசத்துல கோடிஸ்வரனாவது எப்படி? அட ஆமாங்க நீங்க ஒரு மாசத்துல முதல் நாள் 1 ரூபாய் முதலீடு செய்யும்போது அந்த மாதத்தின் 30வது நாள் உங்ககிட்ட 5 கோடி இருக்கும்னு சொன்னா உங்களால நம்ப முடியுமா? இதுதான் The Compound Effect. ஒவ்வொரு நாளும் நம்மளுடைய முதலீடு இரட்டிப்பாகும்.

அட இது எப்படிப்பா சாத்தியமாகும்? எந்த தொழிலுக்கும் லாபம் நஷ்டம் இருந்துதானே ஆகணும்… நீங்க சொல்ற கணக்குப்படி பாத்தா எல்லாம் லாபம் மட்டுமே இருக்கே அப்படின்னு கேப்பிங்க. இந்த விளைவை உருவாக்கிய டேரன் ஹார்டி என்ன சொல்றாரு அப்படின்னா நம்ம உருவாக்குற முதலீடு சின்னதாதா இருந்தாலும், சில காலங்கள்ல அதனோட வளர்ச்சி நம்மளாலயே நம்ப முடியாத அளவுக்கு பெருசா இருக்கும்னு சொல்றாங்க.

இந்தியாவ பொறுத்தவர 2020-க்கு பிறகுதான் அதிகப்படியான நபர்கள் முதலீடு மேலே ஆர்வம் காட்டுறாங்க. இப்பவும் நீங்க முதலீடு சம்பந்தமான விளம்பரங்கள Social Media-ல நிறைய பார்த்திருப்பீங்க. ஒரு சராசரி கோடீஸ்வரர் தன்னுடைய வருமானத்த 7 வழிகள்ல வச்சுக்குறாங்க. நம்ம கோடீஸ்வரர் ஆகணும்னு அவசியமில்ல. நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் தேவையானத பூர்த்தி செய்ய குறைஞ்சது 2 வழிகள்ல வருமானம் இருக்கணும்.

இன்னமும் நிறைய பேர் அவங்களுக்குள்ளேயே ஒரு முடிவு பண்ணி வச்சிருக்காங்க, “அட எதுக்குப்பா சேமிப்பெல்லாம் வச்சிக்கிட்டு, சம்பாரிக்கணும் செலவு செய்யணும் அவ்வளவுதான். இது மாதிரி சேமிக்கிறது நாளைக்கு நமக்கு வர சந்ததிகள சோம்பேறிகளா மாத்திடும். அதனால எதுக்கு சேமிப்பு” அப்படின்னு யோசிக்கிறாங்க. சேமிப்பு அப்படிங்கறது நம்ம ஆடம்பர செலவ தாண்டி நமக்கும், நம்ம குடும்ப மருத்துவ செலவுக்கும், அவசர செலவுக்கும் மட்டுமே.

நம்மோட வருங்கால சந்ததியினருக்கு அவங்களோட தேவைக்கு மட்டுமே சேமிப்பு இருக்கணும். அடுத்த சந்ததி வளர்ந்து வேற ஏதாவது தொழில் தொடங்க மட்டும்தான். இல்ல அவங்களோட ஆடம்பரத்துக்கும் சேத்து தான் நான் சேமிப்பேன் அப்படிங்குறது உங்கள் சாமர்த்தியம்.

இப்போல்லாம் நம்ம அவசியத்தேவைக்கு போக அதிகம் ஆடம்பரத்துக்குதான் செலவு செய்றோம். அது ஒன்னும் தப்பில்ல. ஆனா அதுக்கு ஏத்த மாதிரி நாம நம்மளோட வருமானத்த அதிகரிக்கணும். உடனே உங்க Office-ல சம்பளம் அதிகம் கேக்காதீங்க, அப்படி கேட்டும் உங்களுக்கு தேவையான சம்பளம் கிடைக்கலன்னு, அடுத்த Office போலாம்னு நினைக்காதீங்க. அந்த வேலையை பாத்துக்கிட்டே வேற எதுல நம்ம வருமானத்த உருவாக்கலாம்னு பாருங்க.

நீங்க அதிகம் சம்பாதிக்கணும்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா சொந்த தொழில் ஏதாவதுதான் பண்ணனும், அதுல நீங்க நல்ல வல்லுனரா இருந்தா மட்டும்தான் பண்ணனும், உங்க நண்பர்களோட இந்த விஷயத்த கண்டிப்பா பேசிருப்பிங்க. “மச்சா நம்ம ஏன் நம்ம காலேஜ் /ஆபீஸ் முன்னாடி ஒரு நல்ல டீ கடை போடக்கூடாது?” , சும்மா இவங்க சொன்னாங்க அவங்க சொன்னாங்கனு இந்த Business பண்ணா நல்லா சம்பாரிக்கலாம்னு உங்களுக்கு தெரியாத புது Business-அ யாரையும் நம்பி பண்ணக்கூடாது, அது உங்களுக்கு பெரிய நஷ்டத்த கொடுக்கும்.

Share Market, Stock Market, Index fund, SIP, FD, RD-னு இப்படி பல வழிகள்ல வருமானத்தை கூட்டலாம் அதுக்காக சும்மா பணத்தை இன்வெஸ்ட் பண்ணாம இத பத்தி முழுசா தெரிஞ்சவங்க, அதில் உள்ள வல்லுநர்கள் அறிவுரைகள நல்லா கேட்டுட்டு, அப்பறம் நீங்க முடிவெடுத்து எது Best-னு உங்களுக்கு தோணுதோ அதுல Invest பண்ணுங்க.

அவ்ளோதாங்க இந்த விஷயங்கள நீங்க Follow பண்ணீங்கன்னா கண்டிப்பா நீங்களும் பணக்காரர்கள்தான். முடிஞ்சவர செலவழிங்க அதுக்கு ஏத்த மாதிரி சம்பாரிங்க, இத நீங்க மட்டும் வச்சிக்காம உங்களுக்கு தெறிஞ்சவங்களுக்கும் சொல்லுங்க.

Article By Smily Vijay