Cinema News Specials Stories

சிவகார்த்திகேயனுக்கு முன்னோடி ஜெயராம்!

ஜெயராம், இந்த நடிகரோட பெயர கேட்டா பலருக்கும் அவங்களையே அறியாம ஒரு சந்தோஷம் வரும், ஏன்னா அந்தளவு இவருடைய படங்களை நாம சிரிச்சு, ரசிச்சு இருக்கோம்.

ஜெயராம் அவர்களோட சினிமா பயணம் மலையாள சினிமால ஆரம்பம் ஆனாலும், தமிழ் சினிமால இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு. அதுக்கு முக்கிய காரணம், கதாநாயகன், குணச்சித்திர கதாப்பாத்திரம், நகைச்சுவை கதாபாத்திரம்னு எது கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாவே மாறிடுவாரு.

கல்லூரி காலத்துல, நடிகர் ஜெயராம் அவர்களுக்கு சினிமா மேல இருந்த காதல் அவர் பயணம் பண்ண வேண்டிய பாதைக்கு சரியான வழி காமிச்சுது. அப்படி அவருக்கு சினிமால கிடைச்ச முதல் காதலி, அதாவது முதல் படம் 1988-ல மலையாளத்துல வெளியான APARNA, அந்த படத்தோட வெற்றி மலையாள சினிமால பல பட வாய்ப்புகள தந்ததுமில்லாம, தமிழ் சினிமால 1993-ல வெளிவந்த “கோகுலம்” படத்துக்கும் வாய்ப்பளிச்சுது. இப்படி தமிழ் சினிமாலையும் நடிகர் ஜெயராமிற்கான வெற்றிப் பாதைய உருவாக்கி தந்துச்சு.

அன்னைல இருந்து இப்ப வரை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தினு 250-க்கும் அதிகமான படங்கள்ல நடிச்சு, தன்னோட கலைப்பயணத்த தொடர்ந்துட்டு தான் இருக்காரு நடிகர் ஜெயராம். என்ன தான் சினிமால தன்னோட நடிப்பு மூலமா அசத்திட்டு இருந்தாலும், ஜெயராம் அவர்களுக்குள்ள பல திறமைகளும் இருக்கு.

Jayaram Parvathy Family Photos

சினிமாக்கு வர முன்னாடி ஜெயராம் 1980-கள்ல மிமிக்ரி Artist-அ Stage Shows பண்ணிட்டு இருந்தாரு. நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ரஜினி, கமல், பிரபு, பாடகர் KJ Yesudas-னு பலரோட குரல்ல பேசி அசத்துவாரு நடிகர் ஜெயராம். எந்த ஒரு மேடை கெடைச்சாலும் அந்த இடத்துல ஜெயராம் இருந்தா அங்க சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.

அதுக்கு சில மாசத்துக்கு முன்னாடி நடந்த பொன்னியின் செல்வன் படத்தோட ஆடியோ லாஞ்ச்-அ கூட ஒரு எடுத்துகாட்டா சொல்லலாம். அங்க நடிகர் பிரபு போல, இயக்குனர் மணிரத்னம் போல பேசின Video Clips இப்போ வரை Social Media-ல வலம் வந்துட்டு இருக்கு. குறிப்பா “மணி பசிக்குது மணி”… இந்த வசனம் யாராலையும் மறக்க முடியாது.

Image

மிமிக்ரி போலவே, நடிகர் ஜெயராம் அவர்களுக்கு பாட்டு பாடுறது, Chenda Melam வாசிக்குறதுலையும் ரொம்ப ஆர்வம், Chenda Melam-லாம் வாசிக்க முறையா பயிற்சி எடுத்து கத்துகிட்டாரு. அது போல மலையாள சினிமால சில படங்கள்ல பின்னணி பாடகராகவும் இருந்திருக்காரு. இன்னைக்கு சிவகார்த்திகேயன் பண்ணத ஜெயராம் அப்பவே பண்ணி சினிமாக்கு வந்திருக்காரு.

தமிழ்ல ஜெயராம் அவர்கள் நடிச்ச முறைமாமன், தெனாலி, பஞ்சதந்திரம், பரமசிவன், ஏகன், துப்பாக்கி, சரோஜா, தாம் தூம், பொன்னியின் செல்வன் படங்கள நாம எப்பவும் மறக்க முடியாது, அதுவும் முறைமாமன்ல வர “முத்து அண்ணன்..அண்ணன்”, பஞ்ச தந்திரம்ல வர “ஹலோ சீ வைடி Phone-ன கீழ”னு பல வசனங்கள், அத ஜெயராம் Deliver பண்ண Body Language இப்படி எல்லாம் இப்ப வரை மீம் Creators Trend பண்ணிட்டு இருக்காங்க.

தெனாலி படத்துல அவருடைய கதாபாத்திரம் கோபமானதா, அதே சமயம் நகைச்சுவைத் தன்மையோட இருக்கும். கமல்ஹாசனுக்கு ஈடு கொடுத்து அத அழகா வெளிப்படுத்தியிருப்பாரு. அதே போல துப்பாக்கி படத்துல விஜய்க்கு மேலதிகாரியா, காஜல் அகர்வால பெண் பார்க்குற மாப்பிள்ளையா அட்டகாசமா நடிச்சு நம்மள குலுங்கி குலுங்கி சிரிக்க வச்சிருப்பாரு. இப்படி இன்னும் பல கதாபாத்திரங்கள். உங்களுக்கு பிடிச்ச ஜெயராம் அவர்களோட Favorite Comedy or Scene எதுன்றத Comment-ல சொல்லுங்க.

ஒரு நடிகரா, மிமிக்ரி Artist-அ, பாடகரா பல அவதாரங்கள் கொண்ட ஜெயராம் அவர்களுக்கு Suryan FMன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ SRINI