Cinema News Specials Stories

Cinema is Nothing But Kamal Sir

பார்த்திபன் அவர்கள் சொன்ன Quote-ல இருந்து ஆரம்பிக்கலாம்: “For Me Cinema is Nothing But Kamal Sir”. கமல் Sir பத்தி பேச ஆரம்பிச்சா அதுவே ஒரு Script Book மாதிரி 120 பக்கத்த தாண்டி போகும். கமல் Sir பண்ண முக்கியமான சம்பவங்கள தான் இப்ப நாம பாக்க போறோம்.

ஒரு ஹீரோ Stardom ஓட Peak-ல இருக்கிறப்போ அவங்க பண்ற கமர்ஷியல் ஃபில்ம்ல காமெடி இருக்கும். ஆனா முழுக்க முழுக்க காமெடி படங்கள் பண்ண ஒரே ஆள் கமல் Sir தான்! நாயகன் மாதிரி ஒரு Intense Film-னா Micheal மதன காமராசன் மாதிரி ஒரு காமெடி படம் பண்ணுவாரு. தன்னோட Career ah அழகா Balance பண்ணிருக்காரு.

கமல் சாரோட முக்கியமான திருப்புமுனை, அவர் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் ஸ்டார்ட் பண்ணது தான்! அதுக்கு அப்பறம் There is No Looking Back. தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத படங்கள் மற்றும் Aspiring Film Making-க்கு ஒரு Study Material-அ கமல்ஹாசன் அவர்களோட எல்லா படமும் இருக்கு, இருந்துருக்கு, இனியும் இருக்கும். ராஜபார்வை தான் கமல்ஹாசன் மொதல்ல தயாரிச்ச படம். “ஹாசன் பிரதர்ஸ்” அப்டிங்கிற பேர்ல தயாரிக்கப்பட்டு ரிலீஸ் ஆச்சு.

அப்போ இருந்து எனக்கு நடிப்புல Interest இல்ல திரைப்பட இயக்குனர் ஆகனும்னு முயற்சி பண்ணிட்டே இருந்தாரு. அதுக்கு அவருக்கு 19 வருஷம் ஆச்சு. அதுக்கு அப்பறம் அவரோட First Directorial Debut “ஹே ராம்” வந்துச்சு!
வழக்கம் போல படம் ரிலீஸ் ஆன அப்போ பெரிய Recognition இல்ல… ஆனா தமிழ் சினிமா ஓட Masterpiece-அ “ஹே ராம்” இருக்கு!

ஒரு Time ல படத்துல ஸ்கிரிப்ட்ல ஒரு பிரச்சினை வரப்போ உடனடியா ஸ்கிரிப்ட் வேணும்னு அவசர அவசரமா 10 நாட்கள்ல எழுதுன ஸ்கிரிப்ட் தான் இன்னிக்கு திரைக்கதைக்கு உதாரணமாக நாம கொண்டாடுற “தேவர் மகன்” திரைப்படம். இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர் ராஜமௌலி அவர்கள் சொன்னது : The Most Influenced Person of Indian Cinema is Kamal Hasan

விக்ரம் ஓட ஹிட்டால திருப்பியும் Career ஓட Peak-ல இருக்குற கமல் Sir-க்கு Suryan FM சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ Vishal