Cinema News Specials Stories

CHENNAI 28 TO THALAPATHY 68

அந்த காலத்துலருந்து இப்ப வரைக்கும் ஒரு நாலு பசங்க ஒன்னா ஒட்கார்ந்து பேசினா எல்லாரும் என்ன சொல்லுவாங்க? ஊரு கதைய பேசுறாங்க,, இதெல்லாம் எங்க உருப்பட போகுது, வாழ்க்கைய பத்தி பயம் இருக்கா? இப்படி நாலு பேரு நாலாயிரம் விதமா கூட செல்லுவாங்க.

ஆனா 2007-ல அதே பசங்க ஒன்னா இருந்து பேசினா அது கதையா உருவாகும், திரைக்கதையா எழுதலாம், அவங்களே படம் எடுக்கலாம், ஒருத்தர் அந்த படத்துக்கு இசையமைக்கலாம், அந்த படைப்பு தமிழ் சினிமால பலரையும் ஆச்சரியப்பட வைக்குற மாதிரி வெற்றியும் அடையும்னு நிரூபிச்சு காட்டினவர் தான் வெங்கட்பிரபு.

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு ரெண்டு பசங்க வெங்கட் பிரபு, பிரேம்ஜி… அப்டினு 2007 வரைக்கும் சொன்னாங்க. அதுக்கப்புறம் வெங்கட் பிரபு, பிரேம்ஜியோட அப்பா தான் கங்கை அமரன்னு சொல்ற அளவு 2 பேரும் தமிழ் திரை வானத்துல சூரியனாவும், சந்திரனாவும் அவங்களுக்கான இடத்த உருவாக்கிட்டாங்க. ஆரம்பகாலத்துல அஜித்தோட ஜி, விஜய்யோட சிவகாசி மாதிரியான படங்கள்ல ஒரு முக்கிய கதாபாத்திரத்துல வெங்கட் பிரபுவ பாத்திருப்போம். ஆனா அவர் இயக்குனரா எடுத்த அவதாரம் தான், தமிழ் சினிமாவ திரும்பி பார்க்க வச்சுது.

சாதாரணமா நம்ம ஏரியா கிரவுண்ட்ல பசங்களோட Tournament வச்சு விளையாடுற கிரிக்கெட்ட, கதைக்களமா எடுத்து Royapuram Rockers, Sharksனு ரெண்டு டீம் பிரிச்சு, அதுக்கேத்த மாதிரி பசங்கள நடிக்க வச்சார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பசங்களும் பார்த்து ரசிச்சு, விசிலடிச்சு சென்னை 600028 படத்த பயங்கரமா கொண்டாடினாங்க.

படத்துக்கு மிகப்பெரிய பலம் யுவனோட இசை, முக்கியமா எல்லாரும் புது முகங்களா இருந்ததால, நம்ம Sunday கிரவுண்ட்ல விளையாடுறத வெங்கட் பிரபு Screen-ல படமா காமிச்ச மாதிரி இருந்ததால படம் Blockbuster. அதோட தமிழ் சினிமாக்கு சிவா, ஜெய் மாதிரி பல கதாநாயகர்களையும் தந்தாரு.

அடுத்து அதே டீமோட 2008-ல வந்த சரோஜா படம்… பேர கேட்டதும் முதல்ல கோடான கோடி பாட்டு மைண்டுக்கு வருமே, ம்ம்ம் வரலனா தான் ஆச்சரியம்! யுவனோட இசை அந்த மாதிரி, மொத படத்துல கிரிக்கெட் விளையாண்ட பசங்க இதுல கிரிக்கெட் பாக்கா போய் ஒரு பிரச்னைல மாட்டிப்பாங்க. அத திரைக்கதைல ரொம்ப த்ரில்லிங்கா கொண்டு போய் இருப்பாரு வெங்கட் பிரபு.

அடுத்து ஜெய், வைபவ், பிரேம்ஜி-அ வச்சு கோவா எடுத்தாரு. Friends ஓட சேர்ந்து கோவா போகாதவங்கல்லாம் இப்ப வரைக்கும் பாக்குறது வெங்கட் பிரபுவோட Holiday ‘கோவா’. காமெடி காதல், த்ரில்னு வெங்கட் பிரபுவோட டெம்ப்ளேட்ல வந்து ஹிட்டாச்சு. நம்ம தல தோனி எப்புடி ஒரே Playing 11 டீமோட கேம்க்கு போவாரோ அதே போல வெங்கட் பிரபு படத்துல Permanent பிரேம்ஜி, வைபவ், யுவன், அரவிந்த் ஆகாஷ்… இப்படி வெங்கட் பிரபு தன் டீமோட இந்திய சினிமாவின் ஒரே தல அஜித்குமாரோட ஆடின கேம் “மங்காத்தா”.

2011 “தல 50” இப்பவும் ஏரியால இருக்க தியேட்டர்ல ரீ ரிலீஸ் பண்ணினா விநாயக் மகாதேவ பாக்க விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போல கூட்டம் வரும். அஜித், அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா இப்படி முன்னணி கதாபாத்திரங்கள் இருந்தாலும் தன்னோட கதைக்குள்ள அவங்கள கொண்டு வந்து, படம் முழுக்க தலய நெகட்டிவ் ரோல்ல நடிக்க வச்சு, கிளைமாக்ஸ்ல Twist அடிச்சு, யுவன் BGM-ல தியேட்டரயே அதிர வச்ச படம் மங்காத்தா.

மங்காத்தா வெற்றி வெங்கட் பிரபுக்கு தமிழ் சினிமால முன்னணி இயக்குநர் இடம் கொடுத்துச்சு. அடுத்து கார்த்தியோட பிரியாணி, சூர்யா கூட மாசு என்கிற மாசிலாமணி ரெண்டு படங்களும் வித்தியாசமான கதையா இருந்தாலும், எதிர்பார்த்த பெரிய வெற்றிய கொடுக்கல. ஆனா ரெண்டு படத்துக்கும் தனி ரசிகர்கள் இருக்காங்க. யுவனோட இசைல ரெண்டு Album-ம் வேறமாறி ஹிட் .

பிசினஸோ, சினிமாவோ சின்ன சருக்கலுக்கு அப்பறம், எல்லாரும் மொதல்ல இருந்து ஆரம்பிப்பாங்க , வெங்கட் பிரபு மொத படத்துல இருந்தே ஆரம்பச்சாரு. சென்னை 28 -2 , First Part தந்த வெற்றி Second Part-ல எதிர்பார்ப்ப எகிற வச்சுது. 2007-ல Singles-ஆ இருந்த பசங்கலாம், 2016-ல Mingles ஆகிட்டாங்க, படத்துல வர கதாபாத்திரங்கள் மட்டும் இல்லங்க, படம் பாக்க வந்த பல ரசிகர்களும் Committed ஆயிட்டாங்க. என்ன ஒன்னு… பிரேம்ஜி மட்டும் படத்துலயும், நிஜத்துலயும் இப்ப வரை சிங்கிள் தான்.

சென்னை 28 Part 1 போலவே Part 2-க்கும் ரசிகர்கள் கிட்ட பெரிய வரவேற்பு. அதே கிரிக்கெட், அதே பசங்க, அதே வெற்றி. ஒரு பெரிய இடைவெளிக்கு அப்பறம், பல தடைகள் தாண்டி 2021-ல Time loop concept-ல வந்த படம் மாநாடு, படத்தோட பேரு மாதிரியே தியேட்டருக்கு மாநாடு போல ரசிகர்கள் கூட்டம் வந்துச்சு, சிம்பு கம்பேக், SJ சூர்யாவோட அசுர நடிப்பு, திரைக்கதை, வசனம் எல்லாமே Perfect-ஆ இருந்ததால மங்காத்தா மாதிரி பெரிய, ரொம்ப பெரிய வெற்றி கிடைச்சுது.

அடுத்து வந்த மன்மத லீலை ட்ரெய்லர் கட் Adult comedy போல இருந்ததால, அதே எதிர்பார்ப்போட தியேட்டருக்கு போன ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனா படம் த்ரிலிங்கா இருந்துச்சு, அடுத்ததா தமிழ், தெலுங்குல பெரிய எதிர்பார்ப்போட வந்த “கஸ்டடி”. படத்துக்கு வெங்கட் பிரபு, நாக சைதன்யா பண்ண Promotion concepts வேற லெவல் காமெடியா இருந்துச்சு, என்ன படத்துல அதே Vibe இருந்திருக்கலாம்.

Thala Ajith with Venkat Prabhu (2)
Thala Ajith with Venkat Prabhu (2)

தியேட்டர்ல படம் பாக்க வந்த நம்மள கஸ்டடில வச்ச மாதிரி ஆகிருச்சு. வெங்கட் பிரபு படத்துல கதை இல்லனாலும், பிரேம்ஜி இருப்பாருனு சொல்லுவாங்க, ஆனா பிரேம்ஜியே இல்லனாலும் கண்டிப்பா யுவுன் இருப்பாரு. டைரக்டர் வெங்கட் பிரபு நெருப்பு கூத்தடிக்குது, முட்டத்து பக்கத்துல, சொப்பன சுந்தரி, ஏழேழு தலைமுறைக்கும் மாதிரி பல ஹிட் சாங்ஸ்ம் பாடி இருக்காரு.

வெங்கட் பிரபு Movie, Holiday, Game, Diet, Sixer, Reunion, Politics, Quickie, Hunt, எல்லாம் பாத்தாச்சு. அடுத்து தமிழ் சினிமாவே எதிர்பாத்து காத்திருக்குற தளபதி 68-வெங்கட் பிரபு Combination __ என்னவா இருக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க. நடிகரா, டைரக்டரா, பாடகரா, தயாரிப்பாளரா ஆகனும்னு காத்திருக்க பலருக்கும் God Father-ஆ பல அவதாரங்கள் கொண்ட வெங்கட் பிரபுக்கு சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் & தளபதி 68-க்கு Advance வாழ்த்துக்கள்.

Article By RJ SRINI