Cinema News Specials Stories

1 Year of Love Today

அடடா என்ன ஒரு காதல்னு ஆரம்பிச்சு… இதெல்லாம் ஒரு காதலானு வந்து… பண்ணா இப்படி ஒரு காதல் தான்டா பண்ணனும் அப்படிங்கற Range-க்கு கொண்டு வந்து ஒரு ரோலர் கோஸ்டர் Ride-ah காமிச்சிருப்பாங்க Love Today படத்த.

Story Line கேக்கறப்போ Simple-அ தான் இருக்கும். ஹீரோ ஹீரோயின் லவ் பண்றாங்க. ஹீரோயின் அப்பாவ ஹீரோ Convince பண்ணனும் அவ்ளோதான் Matter. ஆனா அதுக்குள்ள Phone Exchange-னு ஒரு விஷயத்த கொண்டு வந்து… தான் லவ் பண்றவங்களோட மொபைல்ல என்னலாம் இருக்கும்னு பாக்குறதுல Pradeep, Nikitha-க்கு ஆர்வமா இருந்துச்சோ இல்லையோ Audience-க்கு அவ்ளோ ஆர்வமா இருந்துச்சு.

பின்ன பக்கத்து வீட்ட எட்டி பாக்குறதுல உலகத்துல இருக்க எல்லாருக்குமே அப்டி ஒரு ஆர்வம் தான இருக்கும். படத்த பாத்த எல்லார்க்கும் பிரதீப் ரங்கநாதன் பாத்து தோணுன ஒரே விஷயம்… யாரு சாமி நீ? எங்க இருந்த இவ்ளோ நாளா அப்டிங்குறது தான். அப்பறம் தேடி பாத்தா கோமாளி பட இயக்குநர் இவர்தான்னு தெரிஞ்சுது. கோமாளி படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குநர் விருது வாங்கின மேடைல பிரதீப் ரங்கநாதன், இப்ப நான் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது வாங்கிருக்கேன்… அடுத்த வருஷம் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது வாங்குவேனு சொல்லிருப்பாரு. அதே மாதிரி லவ் டுடே படத்துக்காக வாங்கினாரு. படம் ரிலீஸுக்கு அப்புறம் இவர் பேசியிருந்த இந்த பழைய வீடியோ தான் படத்த விட பயங்கரமா வைரல் ஆச்சு.

Whole படமே Vibe தான். அதுலயும் முக்கியமா Yuvan Vibe-uh Extraordinary Vibe-uh. இந்த படத்துல ஒரு தனி Flavour குடுத்துருப்பாரு. அப்பா சத்யராஜ் Character ah Symbolise பண்ற விதமா அவருக்கு குடுத்த வீணை விளையாட்டாகட்டும், Modern Love ah சொல்ற விதமா புரியாத பாட்ட புது புது வார்த்தையோட ட்ரெண்ட் பண்ணதாகட்டும், இப்படி எல்லாமே படத்துக்கு ப்ளஸ் தான். படத்த ஒரு லவ் ஸ்டோரில ஆரம்பிச்சு அக்கா Life கூட Connect பண்ணி Yogi babu-வ Hero-வா மாத்திட்டாரு பிரதீப்.

Modern Love-அ Emotions-ல மட்டும் காட்டாம Digital Innovations-அ தெகட்டாம Use பண்ணியிருப்பாங்க. படத்துல இதுவே அடுத்த Generation ஓட Movie எப்டி இருக்கும்னு காமிச்சிருச்சு. Fast Moving Cuts, ஒவ்வொருத்தருக்குமான Screen Time, Character அவரு Funny-ah குடுத்த Names… எல்லாமே Perfect-ah இருந்துச்சு and படத்துல வெச்ச Climax Portion கூட Sensible-ah பயங்கரமா Workout ஆச்சு.

So Overall மறுபடியும் Love Today-2 eh வேண்டா… ஏனா Love Today One-லயே அந்தளவு Enjoy பண்ணிட்டோம். So Team எங்களுக்கு வேற ஒரு Concept-ல இதே மாதிரி தரமா ஒரு படத்த குடுங்க. Happy 1 Year of Love Today. Love is in the air அன்னைக்கு Love is in the phone இன்னைக்கு.

Article By RJ Naga

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.