Specials Stories

GOLDEN N(E)H(RA)

கப்பல் எவ்ளோ பெருசா இருந்தாலும் அத நிற்கவைக்க தேவைப்படுறது என்னமோ சின்ன நங்கூரம் தான், அது போல ஒரு காலத்துல பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்த ஆஸ்திரேலியா இங்கிலாந்த பார்த்து பல பேர் பயந்தாலும் எனக்கு பயம் இல்ல அதுக்கு இதுதான் சாம்பிள் ன்னு அலறவிட்ட ஒரு பௌலர் பத்தி தான் சொல்லப்போறேன்.

ஆசிஷ் நெஹ்ரா 29 ஏப்ரல் 1979 திவான் சிங் நெஹ்ரா மற்றும் சுமித்ரா நெஹ்ரா ஆகியோருக்கு டெல்லி கன்டோன்மென்ட் சதர் பஜாரில் பிறந்தார், சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மேல் இருந்த அதிக பிரியத்தால் கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் காட்டும் பள்ளியில் சேர்ந்து தன்னை தானே வடிவமைக்க தொடங்கினார்.

பள்ளி படிப்பை முடித்த பின் கிரிக்கெட் மேல் கொண்ட அதீத பிரியத்தினால் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கோச்சிங் சேர்ந்தார், இந்தியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் இவரின் நெருங்கிய நண்பர், இருவரும் ஒரே வண்டியில் தான் பயிற்சிக்கு செல்வார்களாம்.

கோச்சிங் அகாடமியில் இவரோட சுறுசுறுப்பு தன்மையையும் திறமையையும் பார்த்து ரஞ்சி ட்ரோபிக்கு தேர்வு செஞ்சாங்க. அவரோட முதல் ரஞ்சி ட்ரோபி டெல்லி அணிக்காக விளையாடினார். இவரோட உயரம் 6 அடி, அதனால பல பௌன்சர்கள் வேகப்பந்துகள் போட சுலபமா இருந்துச்சு, எந்த உயரம் இவருக்கு உதவியதோ அதே உயரம் இவர கைவிட்டுச்சு.

உயரம் அதிகம் அப்டின்றதால இவருக்கு சுலபமாவே Back Injury வருமாம் இப்படி Back injury காரணமா பல மேட்ச் விளையாட முடியாம போயிருக்கு. வாய்ப்பு அதுவா தேடி வராது, நம்மதான் உருவாக்கனும்-ங்குற மாதிரி, ரஞ்சி ட்ரோபில தன்னோட திறமையை நிரூபிச்சு சர்வதேச கிரிக்கெட்ல கால்தடம் பாதிச்சாரு.

1999-ல ஸ்ரீலங்காவுக்கு எதிரா விளையாடுன இந்தியா டெஸ்ட் டீம்ல இடம் பெற்று அசத்துனாரு. டெஸ்ட் மேட்ச்ச தொடர்ந்து 2001 ல ஒரு நாள் கிரிக்கெட் போட்டிலயும் தனக்கான இடத்த உறுதிப்படுத்துனாரு. 2003 வேர்ல்ட் கப்-ல 6 விக்கெட் எடுத்து வேர்ல்ட் கப்-ல அதிக விக்கெட் எடுத்த பௌலர்-ங்குற ரெகார்ட் படைச்சாரு. 2023-ல ஷமி பிரேக் பண்ற வர அந்த ரெகார்ட்க்கு நெஹ்ரா மட்டுமே சொந்தக்காரா இருந்தாரு. Cricket Is A Gentleman’s Game-னு சொல்வாங்க.

அதுக்கு பேர் போனவங்க லிஸ்ட் ல எப்பவும் ஆசிஷ் நெஹ்ரா பேர் நிலைச்சு நிக்கும். கிரிக்கெட் ல மட்டும் இல்ல வாழ்க்கைலயும் அவரு ஒரு True Gentleman தான். நாட்டுக்காக பல மேட்ச் ஜெயிச்சு கொடுத்த இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கொள்கிறது சூர்யன் FM.

Article By ஹென்றி ஏனோக்