Cinema News Stories

பாகுபலி இந்திய சினிமாவின் நம்பிக்கை!

Baahubali 2
Baahubali 2

To be continued னு climax ல ஒரு படத்துக்கு end card போட்டு அந்த படத்துக்காக ஒரு வருஷம் wait பண்னி பார்த்த வரலாறுலாம் பாகுபலி படத்துக்கு மட்டும்தான் உண்டு .

கட்டப்பா , ஏன் பாகுபலிய கொன்னாருன்னு?  TNPSC exam லயே கேக்குற அளவுக்கு அந்த டைம் ல இந்த கேள்விதான் மக்கள் மத்தில ரொம்ப பிரபலமா இருந்துச்சு . மேலும் , அடுத்த பாகம் ரிலீஸ் ஆகி அந்த கேள்விக்கான விடை தெரிஞ்சப்புறம் கொண்டாடப்பட்ட ஒரு படம்.

பாகுபலின்ற ஒரு fictional characters பெயரை வச்சி  கற்பனை நயத்தோட ஒரு கதையை உருவாக்கி hit குடுத்துருப்பாரு இயக்குனர் ராஜமவுலி . இதுக்கு  மேல பிரம்மாண்டமா ஒரு படத்த இயக்க முடியுமானு ஆச்சரியப்பட்ற அளவுக்கு மிக பிரம்மாண்டமா இருந்துச்சு இந்த படத்தோட மேக்கிங்க்.

ஒரு அரசன் உடல் வலிமையோடு,  மன வலிமையாவும் இருக்கனும்.  அதோடு புத்திக்கூர்மையோடும் இருக்கனுங்கறதுக்கு ஏத்த மாதிரி,  பனை மரத்த use பண்ணி கோட்டைக்குள்ள நுழையுறது , தண்ணீர தொறந்துவிட்டு எதிரிகளை அழிக்கிறதுன்னு வித்தியாசமான அனுகுமுறைகளை கொண்ட சீண்ஸ் படம் முழுக்க உண்டு .

அந்த காலத்துல பெண்களும் போர் தந்திரங்கள் , நிர்வாகத்திறமையோட திகழ்ந்தாங்கண்னு கதைகள்ல படித்திருப்போம் அதுக்கேத்த மாதிரி ராஜ மாதா , அவந்திகா , தேவசேனான்னு பெண்கள் கதாபாத்திரத்த ரொம்ப வலிமையா காமிச்சுருப்பாரு இந்த படத்தோட இயக்குனர்.

Period film இசை எப்படி இருக்குமோன்னு யோசிக்க வைக்காமா வீரனே , பச்சை தீ நீயடா , கண்னா நீ தூங்கடான்னு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் மரகத மணி (கீரவாணி) அவர்களோட இசை எல்லரையுமே , முனுமுனுக்க, வச்சுது.

பிரபாஸ் , ராணா , ரம்யா கிருஷ்ணன் , சத்தியராஜ் , அனுஷ்கான்னு நடிகர்கள் தேர்வும் இந்த படத்துக்கு கன கச்சிதம் . இந்த படத்தோட கதைஅமைப்பும் கதை நகர்வும் எத்தனை தடவ பார்த்தாலும் சலிப்பு ஏற்பட்றதில்ல . இந்த படத்துக்கான கதைய கொஞ்சம் கொஞ்சமா சொல்லிதான் ok வாங்கினாராம் இந்த படத்தோட கதை ஆசிரியரிம் படத்தோட இயக்குனர் ராஜ மவுலியுடைய தந்தையான விஜயேந்திர பிரசாத்.

மகதீராவும் , ஈகாவும் பகுபலி எடுக்குறதுக்கான trailer ந்னு சொல்லுவாங்க tollywood ல ஆனா ராஜமவுலிய நல்லா தெரிஞ்சவுங்களுக்குதான் தெரியும் இது மகாபாரதம் எடுக்குறதுக்கான முன்னோட்டம்னு.  பாகுபலி இந்திய சினிமாவின் நம்பிக்கை ஜெய் மகிழ்மதி !


Article By Dharshini Ram