ஒரு காலத்துல தன்னோட அப்பாவித்தனமான முகத்த வச்சுகிட்டு தமிழகத்தையே சிரிக்க வச்சவங்க நடிகை ஊர்வசின்னுதான் சொல்லணும்.
கேரளா, திருவனந்தபுரம்தான் அவரோட பூர்வீகம். அவங்களோட உண்மையான பெயர் கவிதா ரஞ்சனி. ஊர்வசி என்ற மேடை பெயர் மூலம் அறியப்படுபவர். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்கள்ல நடிச்சிருக்காங்க.

மலையாள மொழிப்படங்கள்ல பிரதானமாக நடித்துள்ள ஊர்வசி கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ்ல அறிமுகமானாங்க. நடிகை ஊர்வசி உலகநாயகன் கமலஹாசன் கிட்ட நடிப்பு ராட்சசி ன்னு பட்டம் வாங்கியிருக்காங்கன்னு தான் சொல்லணும்.
இன்னும் சில பேர் ஊர்வசிய உலக புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினோட பெண் வடிவம்னு சொல்லியிருக்காங்க. நடிகை ஊர்வசிக்கு திருவனந்தபுரம் பூர்வீகம், ஆனா அவங்க பிறந்த ஊர் சென்னை தான்னு சொல்றாங்க. நடிகை ஊர்வசிக்கு காலா ரஞ்சனி, கல்பனா என்ற இரண்டு சகோதரிகளும், கமலராய், பிரின்ஸ் என்ற இரண்டு சகோதர்களும் உண்டு.

ஊர்வசி குடும்பத்துல எல்லாருமே நடிகர்கள் தான். அப்பா ஒரு மேடை நடிகர். அதனால் ஒடிசா, கேரளான்னு பல ஊர்கள்ல தங்கியிருக்காங்க. ஊர்வசி சகோதரியின் உடல் நிலை சரியில்லாம போக அதை சரி செய்வதற்காக சென்னையில குடியேறி இருக்காங்க.
ஊர்வசியோட சிறு வயது கனவு டீச்சர் ஆகணும்கிறது. ஆனா கிடைச்சது நடிப்பு தொழில். பாரத நாட்டியம் கத்துருக்காங்க. ஊர்வசி பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் நகைச்சுவையில சில படங்கள் அசத்தியிருக்காங்க. குறிப்பா சொல்லனும்னா மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சுயம்வரம், பஞ்ச தந்திரம், சிவா மனசுல சக்தி, மூக்குத்தி அம்மன்னு சில படங்களை சொல்லலாம்.
ஆரம்ப காலகட்டத்துல நடிப்புமேல அவ்வளவு ஈடுபாடு ஊர்வசிக்கு வரல, பிறகு கொஞ்சம் கொஞ்சமா நடிப்புல ஆர்வம் ஏற்பட்டு தன்னுடைய நடிப்புத் திறமைய பெரிய அளவுல வளர்த்துக்கிட்டு திரைத்துறையில இன்னைக்கு தனக்கென ஒரு தனி இடத்தை பிடிச்சிருக்காங்க இந்த நடிப்பு ராட்சசின்னு தான் சொல்லணும்.