Cinema News Specials Stories

பூக்களின் பூக்களாய் அவளின் குரல்!

அந்த காலத்துல எப்படி சின்னக்குயில் சித்ரா அம்மா, ஜானகி அம்மாலாம் நம்ம மனச அவங்க குரல்ல உருக வெச்சாங்களோ… அதே போல அந்த இடத்துல இப்போ 90’ஸ் kids ஆஹ் இருக்கட்டும் 2k kids ஆஹ் இருக்கட்டும் எல்லாரையும் அவங்க குரலால மயக்கி, அவங்க மனசுலயும் இடம் பிடிச்சி இருக்கறது யாருனு சொல்லவா…

என்னக்கு தெரிஞ்சி கண்டு பிடிச்சி இருப்பிங்க… Yes, ஸ்ரேயா கோஷல் தான் அவங்கள பத்தி தான் நான் உங்களுக்கு சொல்லப்போறன். இவங்க ஒரு இந்திய பாடகி… இவங்க தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம், அஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா மற்றும் பஞ்சாபி னு இந்த எல்லா மொழிலயும் பாடல்கள் பாடியிருக்காங்க.

இதையெல்லாம் எனக்கு சொல்லவே மூச்சு வாங்குது. ஆனா, எப்படி பாடினாங்கனு தெரிலங்க. இவங்க தன்னுடைய 4 வயசுல பாட கத்துக்க ஆரம்பிச்சாங்க. அப்பறம் 2002-ல Devdas-னு ஒரு படத்துல பாட்டு பாடி Singer-ஆ தன்னுடைய Life-அ துவங்கினாங்க.

ஸ்ரேயா கோஷல் தமிழ்ல பாடின முதல் பாடல் சொல்ல மறந்த கதை படத்துல இருந்து குண்டு மல்லி பாடல் தான்… இப்போ வரைக்கும் எல்லாருடைய மனசுலயும் இருக்குங்க . அதுக்கப்பறம் அவங்க பாடின பாடல் எல்லாமே Hit ஆச்சு. பிதாமகன் படத்துல இளங்காத்து வீசுதே பாடல்… அடடே, என்னமா பாடி இருப்பாங்க…

அதுக்கப்பறம் அவங்க வெச்ச ஒவ்வொரு அடியும் வெற்றிய நோக்கின பயணமா தான் இருந்துச்சு. 4 முறை தேசிய திரைப்பட விருதையும், ஃபிலிம்பேர் விருதையும் Win பண்ணிருக்காங்க. இவங்க பாடினதுலயே எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல், சில பேருக்கு ரொம்ப Favourite ஆனா பாடல் கூட… சில்லுனு ஒரு காதல்ல படத்துல வர “முன்பே வா” பாடல் தான்.

அதுக்கு அவங்க சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது வாங்கினாங்க. அப்பறம் அங்காடித் தெரு படத்துல உன் பேரை சொல்லும் போது அந்த பாட்ட கேட்டுட்டே இருக்கலாம். இந்த மாதிரி நெறைய பாடல்கள் சொல்லிட்டே போகலாம். LIST பெருசா போய்க்கிட்டே இருக்கும். இப்படி நம்ம மனசுல நீங்கா இடம் பிடிச்சிருக்க Shreya Ghoshal-க்கு நம்ம சூரியன் FM சார்பாகவும் Shreya Ghoshal FANS சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Article By RJ Suba