Cinema News Specials Stories

உலகநாயகனின் உன்னதமான ரசிகன்!

உலகநாயகன் அப்டினு சொன்ன உடனே நமக்கு அவருடைய நடிப்பு தான் ஞாபகம் வரும். ஆனா இவருக்கு உலகநாயகன்னு சொன்னா சொர்க்கமே கண்னுக்கு தெரியும்.

ஆமா நம்ம உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய ஒரு தீவிரமான ரசிகன் தான் இவரு. சத்யா படத்துல கமல் காப்பு போட்டு நடிச்சிருப்பாரு, அப்போல இருந்து தன்னோட கைலயும் காப்பு போட ஆரம்பிச்சாரு. கமல்ஹாசனோட Style-அ மட்டும் இவரு Follow பண்ணலங்க.

அவருடைய சினிமா வாழ்க்கையை தன்னுடைய வாழ்க்கைப் பாடமா மாத்தி திரைத்துறைல சாதிக்கணும்னு ஒரு வெறியோடு இருந்தாரு. உனக்கென்னப்பா கை நிறைய சம்பளம்னு சொல்ற அளவுக்கு ஒரு Bank வேல. ஆனா அந்த எடத்துல இவருக்கு அவ்ளோ திருப்தி இல்ல.

அப்போ தான் ஒரு Short Film போட்டி நடக்குது. அதுல இவரு பங்கேற்று தன்னுடைய திறமைய வெளிப்படுத்திருந்தாரு. அந்த போட்டிகு Judge-அ வந்தது நம்ம இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான். அவருடைய இந்த Short Film-அ பாத்துதுட்டு இவரை Direction Field-ல ட்ரை பண்ண சொன்னாரு.

இந்த வார்த்தைகள் இவருக்கு ஒரு நல்ல Motivation-அ இருந்துச்சு, என்னடா பேரு சொல்லாம Article எழுதிருக்கானே யாருடா இவன்னு நீங்க யோசிக்கலாம், உலகநாயகன் அவர்களுடைய விக்ரம் படத்துல எப்படி முதல் பாதி முடியும்போது கமல் பேசிருப்பாரு அந்த மாறி தாங்க, நாம அவரப்பத்தி சொல்றோம்னா அவரோட Style-ல சொன்னா தான நல்லாருக்கும், நம்ம லோகேஷ் கனகராஜ் தான்.

2017ல மாநகரம் படம் மூலமா நமக்கு அறிமுகமாகி, படத்துல ஹீரோ பெரு சொல்லவே இல்லனு நமக்கு படம் முடியும்போது தான் தெரியவே வந்தது. அப்போ யோசிச்சுப்பாருங்க… நம்ம உலகநாயகன் எப்படி புத்தம் புது விஷயங்கள் Cinema-ல பண்ணிருக்காரோ அதே மாதிரி நம்ம லோகேஷ் கனகராஜும் நிறைய யோசிச்சி தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் செஞ்சாரு.

அப்படி சிறப்பா யோசிச்சு பண்ண படங்கள் தான் கைதி, மாஸ்டர், விக்ரம்… தமிழ் சினிமால அசைக்க முடியாத டைரக்டரா இப்போ மாறியிருக்காரு. குறிப்பா தனக்குனு ஒரு Universe-ஏ உருவாக்கியிருக்காரு. அதுக்கு அவரோட ரசிகர்கள் செல்லமா வச்ச பேரு லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்(LCU).

இப்போ தளபதி விஜய் கூட தன்னுடைய இரண்டாவது படமான Leo படத்துக்காக கடுமையா உழைச்சுட்டு இருக்காரு, இவருடைய அடுத்த திரைப்படங்கள் வெற்றி அடைஞ்சு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு அங்கமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாற நம் சூரியன் FM பெருமையோடு வாழ்த்துகிறது.

RJ Jae, Vellore.