Specials Stories

சில சமயம் நம்ம வாழ்க்கைல 2வது Chance தான் Workout ஆகும்!

பல நேரங்கள்-ல வாய்ப்பை தேடி நம்ம போவோம், சில நேரங்கள்-ல வாய்ப்பு நம்மளை தேடி வரும். அப்படி வாய்ப்பு தேடி வந்து அப்புறம் இவரு வாய்ப்பை தேடி போனாரு. இந்தியன் கிரிக்கெட் அணியோட Gabbar-னு செல்லமா அழைக்கப்படுற ஷிகர் தவான் தான் அந்த நபர்.

டெல்லில பிறக்கிற ஷிகர் தவானுக்கு படிப்பு சுத்தமா ஏறவே இல்ல. அவங்க அம்மாவுக்கு ஒரு பயம், பையனோட எதிர்காலம் எப்படி இருக்கப்போகுதோனு. அவரோட எதிர்காலத்துக்காக அவர் மாமாவோட பிளாஸ்டிக் பொருட்கள தயாரிக்கும் இடத்துக்கு தொழில் கத்துக்க அனுப்புறாங்க.

அவரோட மாமா ஒரு பக்கம் தொழில் சொல்லி கொடுக்க, இன்னொரு பக்கம் அவரோட பசங்க பேட்டிங் பயிற்சிக்கு போகும் போது துணைக்கு இவரும் போகுறாரு. Sonnet Cricket Club, பல பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர்கள உருவாக்கி இருகாங்க. அங்க சும்மா துணைக்கு போன நம்ம ஷிகர் தவானுக்கு இயற்கை ஒரு வாய்ப்பு கொடுத்துச்சு.

ஒரு நாள் அந்த கிரிக்கெட் கிளப் Headcoach Tharaq Singha அங்க வர, அப்போனு பாத்து ஷிகர் தவானுக்கு சும்மா பேட்டிங் பண்ணட்டுமே-னு ஒரு வாய்ப்பு கிடைக்க, அவரோட Timing நல்லா இருக்குறத கவனிச்சா Coach அவரையும் Regular-ஆ ஆட வச்சாரு. இப்படி ஒரு கிரிக்கெட்டரா அவரோட பயணம் ஆரம்பிக்க, பேட்டிங் கூட சேர்ந்து விக்கெட் கீப்பிங்-லயும் கவனம் செலுத்துறாரு. ஆனா இதனால அவரோட பேட்டிங் Spoil ஆகுது-னு Feel பண்ண Coach, இனிமே கீப்பிங் பண்ணக்கூடாதுனு Strict-ஆ சொல்லிட்டாரு.

Opening பேட்ஸ்மேன் தான் ஆகணும் அப்படின்னும் சொல்லிட்டாரு. அத ஷிகர் தவான் Follow பண்ண Under-19 Worldcup-ல அடிச்su விளாசி 500 ரன்களுக்கு மேல அடிக்குறாரு. கிடைக்குற வாயுப்புகள சரிவர பயன்படுத்தினாலும் இந்தியன் டீம்ல வாய்ப்பு கிடைக்கல. இதனால வாழக்கை மேல ஷிகர் தவானுக்கு பயம் வர, கிரிக்கெட் கோச்சிங் போகாம, பிளாஸ்டிக் தொழில்ல கவனம் செலுத்துறாரு.

அதுக்கு அப்புறமா 2010 AUS-க்கு எதிரா ஒரு வாய்ப்பு கிடைக்க, அந்த போட்டில Clean Bowled ஆக, வாய்ப்பு கிடைச்சும் கோட்டை விட்டுட்டோமே-னு வருத்தப்பட, அப்போ அவரோட Coach தொடர்ந்து Practice பண்ணு-னு அழுத்தமா சொல்ல… அப்புறம் Practice பண்ணி அதே வாய்ப்பை தேடி போனாரு. அப்போ இயற்கை அவருக்கான வாய்ப்பை 2013-ல அதே AUS-க்கு எதிரான டெஸ்ட் மேட்ச்-ல திரும்ப உருவாக்கி கொடுத்துச்சு…

வாய்ப்பு கிடைச்சு அறிமுக டெஸ்ட்-லயே சதம் அடிச்ச Players வரிசைல 187-னு அதிக ரன்களோட இன்னமும் இருக்காரு. விடாமுயற்சிக்கு ஒரு நல்ல உதாரணமா இருக்குற ஷிகர் தவானுக்கு சூரியன் FM சார்பா Happy Birthday.

Article By by RJ Karthick

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.