Specials Stories

மின்னல் மைந்தன் விஸ்வநாதன் ஆனந்த்

“ஒரு நாள் ட்ரெயின்ல பயணம் பண்ணிட்டு  இருந்தேன்… அப்போ நான் ஆசியா அளவுல World Junior Champion & இந்தியாவோட முதல் கிராண்ட் மாஸ்டர். என் பக்கத்துல உக்காந்துருந்த ஒருத்தர் கேட்டாரு, தம்பி நீ என்னப்பா பண்றன்னு, நான் செஸ் Player-னு சொன்னேன்.

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, மறுபடியும் சரி வேற என்ன பண்றன்னு கேட்டாரு, அப்பவும் நான் ஒரு Professional செஸ் பிளேயர் ஆகப்போறேன்னு சொன்னேன். அந்த பெரியவர் சொன்னாரு… நான் சொல்றேன்னு எதுவும் நெனச்சிக்காத ஸ்போர்ட்ஸ்ன்றது நிரந்தரம் இல்லாதது ,ஒன்னு நீ விஸ்வநாதன் ஆனந்தா இருந்தா Chess உனக்கு கை குடுக்கும், இல்லனா அது கொஞ்சம் கஷ்டம்னு சொன்னது Is The Best Compliment Ever I Received!” இத அவரே சொல்லிருக்காரு.

ஆனந்த்ன்னு பெயர் வச்சவங்க நம்ம தெருலயே 10 பேரு இருப்பாங்க, ஏன்  வெளிநாட்டுல கூட அவரோட மனைவி டாக்குமெண்ட்ஸ் தொலைஞ்சு போனதும் போலீஸ் கிட்ட Complaint  பண்றப்போ உங்க பெயர் என்னன்னு கேக்குறப்போ அருணா ஆனந்த்ன்னு சொன்னப்போ… இந்தியால நிறைய பேர் ஆனந்த்-னு பெயர் வச்சிருக்காங்க, ஏன் இப்போக்கூட ஒரு செஸ் பிளேயர் பெயர் கூட ஆனந்த் தானம் அப்டினு பேசிட்டு இருந்தப்போ… அவங்க மனைவி என்னோட கணவர்தான்னு சொன்னப்போ கூட யாரும் நம்பலையாம்.


அதுக்கு அப்றம் தான் நெசம் தெரிஞ்சு ஹெல்ப் பண்ணங்களாம். So இப்டி உலக அளவுல பல ஆனந்த் இருந்தாலும் நமக்கு எப்போதும் விஸ்வநாதன் ஆனந்த்-ன்ற பெயர் Something Hits Us Different-ல. இப்போதுள்ள 2K கிட் பிரக்யானந்தாக்கு Status Story போட்டுட்டு இருந்தாலும் The Unsung Legend In Our Whatsapp Status But In Our Hearts-ன்ற பெருமை விஸ்வநாதன் ஆனந்த்க்கு கணகச்சிதமா பொருந்தும்.
 
6 வயசுல தன்னோட அம்மா கிட்ட செஸ் கத்துக்க ஆரம்பிச்ச ஆனந்த், வாழ்க்கைல ஏறாத மேடைகள் இல்ல, வாங்காத புகழ் இல்ல, விருதுகள் இல்ல. ஒவ்வொரு அம்மாக்களும் தன்னோட குழந்தைங்கள செஸ் கத்துக்கோன்னு சொல்லாமலும் இருந்தது இல்லன்றது நிதர்சனமான உண்மை. மயிலாடுதுறைல பிறந்த இவருக்கு தெய்வ பக்தியும் கொஞ்சம் கூடுதல். 25 வருஷமா தன்னோட இடத்தை தக்கவைக்குறது சும்மாவா என்ன?

நிலவும் சூரியனும் கூட இவரோட திறமையை கண்டு வியந்துருக்கும்ன்ற அளவுக்கு ஒரு வியத்தகு மனிதரான ஆனந்த் 14 வயசுல இந்திய கீழ் இளையோருக்கான(Sub-Junior) சதுரங்க சாம்பியன் போட்டியில 9/9 புள்ளிகள்பெற்று வெற்றி வீரரானார். 15 வயசுல 1984 இல் சர்வதேச மாஸ்டர் பட்டத்த தட்டி தூக்குனாரு. 16 வயசுல  தேசிய வெற்றிவீரர், உலக இளநிலை சதுரங்க வாகையாளர் (1987-இல்) என்ற பெருமையை அடைந்த முதல் இந்தியரும் ஆனந்த் என்னும் சிங்கக்குட்டி தான்.
 
இதற்கடுத்து வெற்றிக்கு இவர புடிச்சு போக பல நாடுகளுக்கு பறந்து போய் பல முன்னணி செஸ் வீரர்கள் கூட விளையாடி சதுரங்கத்துல ஜெயிச்சு மக்கள் மனங்களையும் வென்று இந்தியாவின் செல்ல பிள்ளையா மாறினாரு. இவருக்கு புத்தகம் வாசிப்பு, பாட்டு கேக்க கொள்ளை பிரியமாம்.
 
அர்ஜுனா விருது – 1985, பத்மஸ்ரீ விருது – (1987), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (1991-1992), பத்மபூஷண் (2000) சதுரங்க ஆஸ்கார் – (1997, 1998, 2003, 2004, 2007, 2008)
பத்மவிபூஷன் – 2007 இந்த விருதெல்லாம் இவரு கைக்கு போகவும் மேலும் கர்வம் கொண்டு  அழகாச்சு. பிரக்யானந்தா இவரோட விளையாண்டு வெற்றி பெற்றப்ப கூட மனதார பாராட்டின எங்கள் சொக்கத் தங்கத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சதுரங்க கட்டங்கள் உன்மேல் என்றும் காதல் கொள்ளட்டும்.

Article By Rj Thanuja.