தன்னோட அப்பாவோட பாத சுவடுகளை பின்பற்றி, தன்னோட அண்ணனோட கைய பிடிச்சு மேல வந்தவர் தான் ரவி. இவர் மதுரையில திருமங்கலத்துல பிறந்தவர். தன்னோட அப்பாவோட படத்துல, அண்ணன் Director-ஆ இருந்து எடுத்த படம் தான் “ஜெயம்” இந்த படத்துல நடிச்சு பயங்கரமா ஹிட் கொடுத்ததால இவருக்கு “ஜெயம் ரவி” எனும் பெயர் வந்தது, ஆனா இவரோட உண்மையான பெயர் “ரவி சூரியன்”.
எல்லாருக்குமே ரவி ஆர்த்தியோட லவ் ஸ்டோரி தான் தெரியும். ஆனா 1972ல் ரவியோட அப்பா மோகன், அம்மா வரலட்சுமி காதல் திருமணம் பண்ணிட்டாங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச Editor and Producer மோகன் ஓட உண்மையான பெயர் “முஹம்மத் ஜின்னா அப்துல் காதர்”.
அண்ணா மோகன் ராஜாக்கு அடுத்ததா அக்கா ரோஜா பிறந்துருகாங்க அப்புறம் தான் ரவி பிறந்தார். இருக்கிறதிலேயே குறும்பு காரர் ஜெயம் ரவி தான். சினிமாக்குள்ள உடனடியா நடிகரா கால்தடம் பதிச்சாரா ?-னு கேட்டா இல்ல. கமலோட ஆளவந்தான் படத்தில உதவி இயக்குனரா வேலை செஞ்சிருக்காரு, அதுமட்டுமில்லாமல் தெலுங்கு இண்டஸ்ட்ரில குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கார்.
டிக் டிக் டிக்-ன்ற படத்துல தன் மகனோட நடிச்சப்போ தான் தன் வாழ்நாளிலேயே முதல் முறையா Dialogue மறந்தாராம். அத தன்னோட மகன் ஆரவ் தான் ரவிக்கே ஞாபகம் படுதினாராம். அத ஒவ்வொரு இடத்திலயும் சொல்லி சொல்லி சந்தோஷப் படுவாரு ரவி. ரவியோட ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாடியும் ஆர்த்தி இருக்குறதால பெரிய Pillar of support-ஆ feel பண்றார் ரவி.
சும்மாவா சொல்றாங்க ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருக்காங்க -னு. நம்ப Milky Boy ஜெயம் ரவிக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது சூரியன் FM.