Specials Stories

என்றும் ஓயாத வைகை புயல் !!!

வைகை ஆத்துல வேணா பலவருஷமா வெள்ளம் வராம இருக்கலாம், ஆனா வைகை புயலோட காமெடி கட்டுக்கடங்காத வெள்ளமா நிக்காம வலம் வந்துட்டு இருக்கு.

“என் ராசாவின் மனசினிலே” படத்துல நடிகர் ராஜ்கிரண் மூலமா திரை உலகில் கால் பதித்து, இப்படிப்பட்ட புகழின் உச்சத்துல இருக்குற நம்ம வடிவேலுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் “என் தங்கை கல்யாணி”.

அப்போ உருவான புயல் தமிழ் சினிமாவை மையம் கொண்டு சுத்தி சுத்தி அடிக்க ஆரம்பிச்சது . என்ன ஒன்னு, இந்த புயலால் நமக்கு கிடைச்ச சேதாரம்னு பாத்தா சிரிப்பு சத்தமும் மகிழ்ச்சியும் தான்.
வைகைபுயல்னு சொன்னதும் நம்ம வடிவேலு பெயரை சொல்றதுக்கு முன்னாடி Body Soda, Banner ji, தேங்காய்கடை தேனப்பன் , Alert ஆறுமுகம் , வண்டு முருகன் ,சலூன்கடை ஷண்முகம் , Style பாண்டி, Snake பாபு , கபாலி கான் , படித்துறை பாண்டி , திகில் பாண்டி , சுண்டி மோதிரம் , நாய்சேகர் , தீப்பொறி திருமுகம் , பச்சைக்கிளி , தங்கம் , Bullet பாண்டி என்று அவருடைய கதாபாத்திரத்தை தான் மூச்சுவிடாம சொல்லுவோம்.

Vadivelu to get a whopping salary for his comeback film?

பாசமலர் , கிழக்கு சீமையிலே-னு அண்ணன் தங்கச்சி படம் பல வந்துருந்தாலும், ராஜகுமாரன் படத்துல மணிமேகலையின் அண்ணனாக வீச்சருவா வீராச்சாமி காமெடில ஒரு வீசு வீசியிருப்பாரு . 10 மாசம் சுமந்து குழந்தை பொறக்குற கஷ்டத்தை விட 10 மாசம் வயித்துக்குள்ள இருந்த குழந்தையோட கஷ்டத்தை அன்றே கணித்தார் நம்ம வைகைப்புயல்.

கடந்த 2 வருஷமா increment இல்லாம வேலை பாக்குற பல பேரு மனசுல “பேட்டா எங்கம்மா தாரானுங்க, எல்லாம் மாச சம்பளம்தான்”-னு ஒரு புலம்பல்க்கு சொந்தக்காரர் கூட இவர்தான். வேலை பாக்குற இடத்துல 6 மணிக்கு மேல வேலை சொன்னா “6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது”-னு அவர் style லேயே பதில் கொடுப்போம்.

Bus-ல எங்கயாவது போனா கண்டக்டர் நமக்கு மீதி சில்லறை குடுக்குற வரைக்கும் அய்யனார் கதாபாத்திரம் கண்ணு முன்னாடி வந்து போகும். அந்த அளவுக்கு அந்த Balance 2.50 காமெடி Hit. குழாய் சண்டையில Gold Medal வாங்குனவங்க கூட தோத்துருவாங்க பாட்டாளி படத்துல வடிவு கோவை சரளாவுடன் போடும் சண்டை காட்சியில்.

பொண்ணு பாக்க போயி மொக்க வாங்குன மாயி மொக்கச்சாமி, பொண்ண கையை புடிச்சு இழுத்தியானு கேட்டா திரும்ப திரும்ப பேசுன வேலு , விரலுக்கேத்த வீக்கத்துல நம்ம வயிற சிரிச்சு வீங்க வச்ச கபாலி, ஒரு கட்டுல எத்தனை சீட்டுன்னு தெரியாம ரம்மி ஆடிய அங்குச்சாமி, ஒரு Strong ஆன Parliament அமைய ஐடியா குடுத்த Super சுருளி, இந்த உலகத்துலயே Flask-ல பீர் வாங்குன மாணிக்க மூர்த்தி, கம்பீரமா Comedy பண்ண வசீகரா கட்டபொம்மன், காரைக்குடி Code நம்பரை Extra நம்பர் என்று நினைத்த வெகுளி, காலேஜ் Studentsக்கு தனி அடையாளம் தந்த நம்ம Steve Waugh, அய்யாசாமி, அலெக்ஸ் பாண்டியனை தூக்கி சாப்பிட்ட Telex பாண்டியன், காமெடிலேயே இம்சை பண்ண புலிகேசி… இப்படி வைகைபுயலின் கலகல கதாபாத்திரங்கள் காலம் கடந்து இன்னைக்கு வரைக்கும் ரசிக்கப்படுது.

திடீர்னு எதாவது பிரச்சனைல மாட்டிக்கிட்டா “ஆஹா சூனா பாணா உன் அருமை பெருமைக்கு ஆபத்து வராம கவனமா deal பண்ணி ஆட்டத்தை கலச்சுரு”-னு அப்போ கூட வைகைப்புயல் வசனத்தை தான் முணுமுணுக்கும் நம்ம மனசு. இப்போ வரைக்கும் கல்யாணம் ஆகாம இருக்குற 90’s kids-க்கும் இவர் வசனம்தான், “30 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆக வேண்டியவ இன்னும் கோலம் போட்டுக்கிட்டு இருக்கா”.

நம்ம குடும்பத்துல இருக்கிற சித்தப்பாக்கு ஒருநாள் கூட whatsapp status வைக்க மாட்டோம் ஆனா நேசமணி சித்தப்பாக்கு Pray for Nesamaniனு போட்டு Trend ஆக்குனோம். துபாய் பக்கமே போகாதவங்களுக்கெல்லாம் துபாய் ரோடை நம்ம கண்ணு முன்னாடி கொண்டு வந்தவரு.

வருத்தத்துல இருக்குறவங்களுக்கு இவரோட காமெடி ஒரு மகிழ்ச்சி என்றால், வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவராக கைப்புள்ள நகைச்சுவை, காமெடி உலகின் தவிர்க்க முடியாத Trend Setter. “End card கொடுத்து எகத்தாளமா பண்றிங்க எனக்கு End-ஏ கிடையாது”-னு நாய் சேகர் Styleல பதில் கொடுத்து “நாய் சேகர்” படம் மூலமா Re-Entry கொடுக்கப் போறாரு.

புயல் வந்தா Red அலெர்ட் கொடுப்பாங்க ஆனா இந்த புயல் வர்றதுக்காகவே Green Signal கொடுத்துட்டாங்க. இனி வைகைப்புயலின் ஆட்டம் ஆரம்பம்.

Happy Birthday வைகைபுயலே !!!

Article by HariMariMuthu

Tags