Specials Stories

ஜூலை 2-ஆம் தேதியில் இவ்வளவு விஷயம் இருக்கா??

வருஷத்தோட முதல் நாளை உலகமே சந்தோஷமாக கொண்டாடுவோம். ஆனால் வருஷத்தோட நடு நாளை கொண்டாடி இருப்போமா ? ஜூலை 2 வருஷத்தோட நடு நாளாக கருதப் படுகிறது. ஒரு வருடத்தில் 365 நாட்கள், அதில் ஜூலை 2ஆம் தேதிக்கு முன்னர் 182 நாட்களும் அதற்கு பின்னர் 182 நாட்களும் இருக்கின்றன.
கிரிகோரியன் காலண்டர் உலகத்துல இருக்கக்கூடிய பல நாடுகள் பெரும்பாலும் பயன் படுத்தக்கூடிய காலண்டர். கிரிகேரி வாழ்ந்த காலம் 1502-1585 என சொல்லப்படுகிறது.

இந்த Gregorian calendar-க்கு முன் ஜூலியன் காலண்டரே பயன்பாட்டில் இருந்தது .ஆனால் இந்த கிரிகோரியன் காலண்டர் வருவதற்கு காரணம், ஜூலியன் காலெண்டர் 1,600 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய காலெண்டர் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், அதனுடைய சூரிய ஆண்டு அளவீடுகள் ஒரு சிறிய தவறான தன்மையைக் கொண்டிருந்தன. இதனால் காலெண்டரின் பருவ கால தேதிகளில் நூற்றாண்டுக்கு ஒரு நாள் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.

நாம் பயன்படுத்தும் காலண்டர், கிரிகோரியன் காலண்டர். பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என கணக்கிடப்பட்டு இந்த காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பூமி சூரியனைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையை முடிக்க 365 நாட்கள் 5 மணி நேரம் 59 நிமிடங்கள் 16 வினாடி ஆகும். சுழற்சி நேரத்திற்கும் காலண்டர் நேரத்திற்கும் இருக்கும் மிகச்சிறிய வித்தியாசம் தான் நான்கு வருடத்திற்கு ஒரு முறை வரும் leap year.

கிரிகோரியன் நாட்காட்டியில் ஜூலை 2 என்பது ஆண்டின் 183 வது நாள் (லீப் ஆண்டுகளில் 184 வது நாள்); ஆண்டு இறுதி வர, மிச்சம் 182 நாட்கள் உள்ளன. இந்த நாள் ஆண்டின் இரண்டாம் பாதியின் முதல் நாள், இன்று முதல் மிச்சம் இருக்கும் அரை ஆண்டு சிறப்பாக அமைய சூரியன் FM சார்பாக இனிய அரை ஆண்டு நல் வாழ்த்துக்கள்.

Article by Ranjani