Cinema News Stories

ரங்க ராட்டினம் பாடலின் Lyric வீடியோ இதோ !!

அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் “ரங்க ராட்டினம்” பாடலின் Lyric வீடியோ தற்போது Youtube-ல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த இப்பாடலை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.

பொதுவாக யுவனின் இசையில் வரும் பாடல்களுக்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இப்பாடலும் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பு வந்ததிலிருந்தே யுவனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆரவாரத்தை தொடங்கிவிட்டனர்.

ரங்க ராட்டினம் பாடலை பிரபல பாடகர் ஆண்டனி தாசன் பாடியுள்ளார். இப்பாடல் காதலில் விழுந்த ஒரு இளைஞனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இப்பாடலுக்கு யுகபாரதியின் வரிகள் மேலும் வலு சேர்க்கிறது.

‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீ கணேசன் தான் ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மீது சினிமா ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை தற்போது ‘ரங்க ராட்டினம்’ பாடல் மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

குருதி ஆட்டம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரங்கராட்டினம் பாடலின் Lyric வீடியோவை கீழே காணுங்கள்.