Cinema News Stories

Slum Anthem இதோ !!!

ஆனந்த கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மூன்றாவது பாடலான Slum Anthem பாடலின் லிரிக் வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இப்பாடலில் பல பிரபலங்கள் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திரன் ராஜு ஆகியோர் இணைந்து நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தின் ‘அவன் பார்த்து சிரிக்கல’, ‘ நான் வருவேன் ‘ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோக்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள Slum Anthem பாடலை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் பிரேம்ஜி அமரன் விஜய் ஆண்டனி மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

மேலும் இப்பாடலில் டிரம்ஸ் சிவமணி அவர்கள் டிரம்ஸ் வாசித்துள்ளது, இப்பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. இப்பாடலுக்கு பாடலாசிரியர் சூப்பர் சுப்பு வரிகளை எழுதியுள்ளார்.

கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. தற்போது வெளியாகியுள்ள இந்த Slum Anthem பாடல் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இப்பாடல் வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் யூடியூபில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

கோடியில் ஒருவன் திரைப்படம் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். Slum Anthem பாடலின் லிரிக் வீடியோவை கீழே காணுங்கள்.

About the author

shafin

உங்களில் ஒருவன்